இஞ்சி தொக்கு

தேதி: November 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (10 votes)

 

அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிது
தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடுகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.
வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மழை, குளிர் காலத்திற்கு ஏற்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். மா இஞ்சியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மா இஞ்சி தொக்குதான் சாப்ட்டிருக்கேன். குறிப்பு அருமை, தொக்கு வகைகளா சமைத்து அசத்திறீங்க, வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவிதா இஞ்சி தொக்கு சூப்பர் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

kavitha inji thokku super ana naanga inji mixil adippom idhe madhiri than seivom

இஞ்சி தொக்கு நாவில் நீர் ஊருது,நீங்க தொக்கு ஸ்பெசலிஸ்ட் ஆட்சே,சூப்பரா தான் இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இஞ்சி தொக்கு ரொம்ப அருமையாக இருக்கு.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இஞ்சி தொக்கு பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு கவிதா....
கைவசம் நிறைய தொக்கு ரெசிபி வச்சுருக்கிங்க போல :)
வாழ்த்துக்கள் .........

தொக்குன்னு பார்த்ததுமே கவிதான்னு கண்டு பிடிச்சுட்டேன் :) சூப்பர் குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்,குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
இங்கே மா இஞ்சி கிடைக்காது..ஆனாலும் கிடைப்பதை விடலாமோ!!!
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

பூரணி,

மிக்சியில் இடுவதால் கொஞ்சம் consistency கிடைப்பதில்லை.அதனால் இந்த முறை..
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
அப்படியெல்லாம் இல்லைங்க !!! கத்துக்குட்டி நான் :(
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீலா,

எதோ எனக்கு தெரிந்தது!!!
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

வனி ,

:) :D :D
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா