கோழி தாளிச்சா

தேதி: November 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

கோழி - அரை கிலோ
துவரம் பருப்பு - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
கத்திரிக்காய் - 3
உருளைக்கிழங்கு - 4
கேரட் - ஒன்று
செளசெள - ஒன்று (சிறியது)
வாழைக்காய் - ஒன்று
மாங்காய் - ஒன்று (சிறியது)
புளி - எலுமிச்சை அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 கொத்து
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு

வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்காக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை வட்டமாக நறுக்கவும். செளசெளவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். மாங்காயையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கிவிட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கி விட்டு, கோழியை சேர்த்து கிளறி விட்டு தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
அவற்றோடு மாங்காய் தவிர அனைத்து காய்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
கறிவேப்பிலையை கொத்தாக போட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
ப்ரஷர் அடங்கியதும் அதில் மாங்காயைச் சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்தவுடன் மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான கோழி தாளிச்சா தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... அப்படியே எனக்கு கொடுத்துடுங்கோ... அருமையா இருக்கு படத்தை பார்க்கவே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவையான குறிப்பு தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,பார்க்கவே சம ருசி கோழி தாளிட்ச்சா,இதும் நாங்க செய்வோம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வேணு பிரியாணில கொடுப்பாங்க ரொம்ப நல்லா இருக்கும்.
உங்களோடதும் அப்பிடித்தான் இருக்கும்னு நினக்கிறேன். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வீட்டுக்கு நேரில் வாங்க,சுடச் சுட நெய் சோற்றுடன் நானே செய்து தரேன் வனிதா பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா வருகைக்கும்,வாழ்த்திற்க்கும், ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா நீங்களும் இப்படிதான் செய்வீங்களா… உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவையும் ரொம்ப நல்லா இருக்கும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க அருட்செல்வி வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,
இந்த வாரம் இதை செய்துவிட்டு சொல்கிறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என்னங்க கொல்லுறீங்க..அருமையா இருக்கே

அவசியம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிதா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

தளிகா உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாவ்... கோழி தாளிச்சா சூப்ப்பரா இருக்கு. பார்க்கும்போதே சாப்பிட சொல்லுது! :) படங்கள் அனைத்தும் பளிச்சுனு அம்சமா வந்திருக்கு. கட்டாயம் ட்ரை பண்ணிப்பார்க்கிறேன். வாழ்த்துகள் ஹலீலா.

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ சுவையும் ரொம்ப நல்லா இருக்கும் அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)