மைக்ரோவேவ் சாம்பார்

தேதி: September 14, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

துவரம் பருப்பு - 75 கிராம்.
பயத்தம் பருப்பு - 25 கிராம்.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
பூண்டு - 4 பல் (தோலுரித்தது).
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
நெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 2.
கடுகு - 1/2 தேக்கரண்டி.
பெருங்காயத் தூள்.- 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
காய்கள்:
கத்தரிக்காய் - ஒன்று (நறுக்கியது).
முருங்கைக்காய் - ஒன்று (நறுக்கியது).
சாம்பார் வெங்காயம் - 10 (உரித்தது).
பெரிய தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது).
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி.
வறுத்து பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் - 5.
முழு தனியா - ஒரு தேக்கரண்டி.
கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி.
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி.
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி


 

வறுக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகக் கலந்து 1/4 தேக்கரண்டி எண்ணெயில் பிரட்டி, ஒரு நிமிடம் மைக்ரோவேவ் அவனில் ஹையில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த கலவையை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் பொடி செய்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பருப்பையும் ஒன்றாகக் கலந்து, 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மைக்ரோவேவ் பாத்திரத்தில், ஊற வைத்த பருப்பையும், பருப்பு நன்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி மஞ்சள், சீரகம், 1/4 தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து, மைக்ரோவேவ் ஹையில் மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
மைக்ரோவேவ் standing time ஆனவுடன் எடுத்து, கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன், நறுக்கி வைத்த காய்கள், உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத் தூள் இவற்றை கலந்து மூழ்கும் அளவு நீர் சேர்த்து, 10 நிமிடம் அவனில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் நெய், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
அவற்றை சாம்பார் கலவையுடன் கலந்து, பொடித்த பொடியை சேர்த்து, நன்கு கலந்து, 2 நிமிடம் அவனில் வைத்து எடுத்தால் மணமும், சுவையும் நிறைந்த சாம்பார் தயார்.
அதன் மேல் கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.


மைக்ரோவேவ் சமையல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மேலை நாடுகளில் இன்றியமையாத ஒரு சமையல் முறை என்று ஆகிவிட்டது. நமது தமிழகத்திலும் தற்போது பிரபலமாகி வருகிறது என்பது உண்மைதான்.எனவே சில முக்கிய சமையல் பக்குவத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. இந்த சாம்பார் செய்முறை நன்கு வருகிறது. நீங்களும் முயன்று பாருங்கள். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
மைக்ரோவேவ் அவன் watt capacity க்கு தக்கவாறு மாற்றம் செய்து கொள்ளலாம். அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப காய்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்