இட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன்

இட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன் please

உளுந்து 1 பங்கு என்றால் புழுங்கல் அரிசி 2 பங்கு பச்சரிசி 1 பங்கு வெந்தயம் 1 pinch போட்டு பாருங்கள்.

நான் 4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து போடுவேன். இட்லி வேக விடும் போது 8 நிமிடம் தான் வேகவிட வேண்டும். நன்றாக பஞ்சு போல் வரும். அரைக்கும் போது சிரிது வெந்தயம் கூட சேர்க்கலாம்.

வெந்தய இட்லி :

4 கப் இட்லி அரிசி, ஒரு கைபிடி வெந்தயம், 25 கொட்டமுத்து.

அரிசி,வெந்தயம் இரண்டையும் முதல் நாள் இரவு ஊறவைக்கவும்.

கொட்டமுத்துவை முதலில் ஆட்டவும்.

நன்றாக அரைந்ததும் அதனுடன் வெந்தயமும் சேர்த்து ஆட்டவும்.

அதுவும் நன்றாக அரைந்ததும் அரிசியை சேர்க்கவும். அரைந்ததும் கொஞ்சம் பழைய மாவு ஊற்றி கலக்கவும்.

காலையில் ஆட்டிய மாவை இரவு வரை வெளியே வைத்து புளிக்கவிடவும்.

பிறகு உப்பு சேர்த்து கலந்து இட்லி ஊற்றவும்.

குறிப்பு;

கொட்டமுத்துவை கரன்டியால் உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் பயன்படுத்தவேன்டும்.

மேலே குறிப்பிட்டபடி அளவையும், செய்முரையையும் மாற்றாமல் செய்யவேண்டும்.

பழைய மாவு -- ஏற்கனவே உள்ள இட்லி மாவில் 4 கரண்டி மாவு.

அரிசி வெந்தயம் கொட்டைமுத்து நைசாக அறைக்கவும்.

இது என் அம்மாவின் செய்முறை இதே முறையில் செய்யவும் நீங்கள் கேட்டது போல் இட்லி பஞ்சு போல் வரும்.செய்து பாருங்கள்.

கொட்டைமுத்து,
வெல்லம் ,கோவா(பாலை சுன்டவைத்து செய்வது)
இதற்கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன பெயர்.?

sajuna

I use 4:1 ratio of rice and urad.I soak 1tsp of methiseeds and one handful of sabudhana(javarisi)
For methi Idly ; 4cups rice and 1handful of methi( cough syrup messurement cup is perfect for this)You have to soak rice separate and methi separate,with methi put onehandful of urad and one handful of sabudana. Grind soaked methi first then add rice.Rice consistency should be coarse.Put salt and ferment well.All the best.

anyone can help me for soft idly. i am using a proposation of 5:1 pooni boiled rice 5 cups and 1 cup of urad dhal, its not coming soft please help me to get soft idly

4 cup boiled rice 1 cup urad dal it'll come so soft

மேலும் சில பதிவுகள்