பாதுஷா

தேதி: November 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (9 votes)

 

மைதா - 3 கப்
வெண்ணெய் - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
தயிர் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய் - 4


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருக்கிய வெண்ணெய், பேக்கிங் சோடா மற்றும் தயிர் சேர்த்து குழைத்து கொள்ளவும்.
அதனுடன் மைதா சேர்த்து கலக்கவும். பிறகு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
அரை மணிநேரம் கழித்து மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி கொள்ளவும் (அ) படத்தில் உள்ளதுபோல செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைத்து தட்டி வைத்துள்ள பாதுஷாக்களை பொரித்து எடுக்கவும் (10-15 நிமிடங்கள் வரை).
ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சி, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். பொரித்து வைத்த பாதுஷாக்களை அதில் போடவும். ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைத்து ஆற விடவும்.
அதன் மேலே பாதாம் பருப்புகளை தூவி அலங்கரிக்கலாம். சுவையான பாதுஷா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாதுஷா!!!! சூப்பர். கடை பாதுஷா போல அழகா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரூபினி ஆஹா ஆஹா அழகா செஞ்சு காட்டியிருக்கீங்க என் ஃபேவரைட் பாதுஷா. கண்டிப்பா செஞ்சு பார்ப்பேன். ஒரு சந்தேகம் தயிர் எதுக்காக சேர்க்கனும்னு சொல்றீங்களா? ப்ளீஸ்... பாதுஷா அருமை வாழ்த்துக்கள் ரூபினி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரூபினி
பாதுஷா சூப்பரா செஞ்சு இருக்கிங்க.....ப்ரசன்டேஷன் அசத்தலா இருக்கு...வாழ்த்துக்கள்.........

உங்க பாதுஷா சூப்பருங்க... :) ஷேப் ரொம்ப அருமையா பார்த்தாலே நாக்கு ஊருது... வாழ்த்துக்கள்...
சக்கரை பாகில் ஏன் எலுமிச்சை சாறு சேர்க்கணும்ன்னு சொல்றீங்களா...

செய்வது ரொம்ப ஈசியா இருக்கே பார்க்கும் போது நாக்கு ஊருது... சூப்பர் ரூபினி வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரூபினி பாதுஷா அருமைய்யாக செய்துஇருகீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அருமையா, அழகா செய்து காட்டி இருக்கீங்க

அன்புடன்,
ஹலீமா

ரூபினி பாதுஷா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க... இப்பவே சாப்பிட தோனுது... :)

அன்புடன்,
லலிதா

எனது முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி! கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி!!.

தயிர் சேர்ப்பது பாதுஷா உள்ளே லேயர்கள் வருவதற்க்கு.... பாகில் எலுமிச்சை சாறு சேர்ப்பது மீண்டும் சர்க்கரை பூத்து (Crystalaized) விடுவதை தவிர்பதற்கு .

என் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு முதல் நன்றி.
கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

பேக்கிங் பவுடரும், பேக்கிங் சோடாவும் ஒன்றுதானா இல்லை வேற வேறயா ரூபினி?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அழகா செஞ்சு காட்டியிருக்கீங்க...சூப்பர்...வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Its looks nice .All the best Roobini...

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் ரூபிணி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நேற்று உங்க பாதுஷா செய்தேன் ..நல்லா இருந்தது ...ஆனா இதுக்கு முதல் நான் அத த`டேஸ்ட் பண்ணினதில்ல .. அதனால நான் செய்தது சரியா எண்டு தெரியல . அதனோட டேஸ்ட் கிட்டத்தட்ட குலாப்ஜாமூன் மாதிரி இருக்குமா ?...

ரூபிணி ,

அழகான,அருமையான குறிப்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹ்ம்ம் கிறிஸ்மஸ் கு என்ன புதுசா அ வீட்லயே ஸ்வீட் பனலாம் நு ஓசிசுட்டெ இருந்தேன் சூப்பர் பாதுஷா ரெசிபி குடுத்துடீங்க நன்றி கண்டிபா ட்ரை பனிடலாம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் .இரண்டும் வேறு வேறு

இன்று உங்கள் Bஆதுச செய்தென்,ஸுபெர்ப் .சக்கரை பாகு கொஞ்சம் தன்னியா இருந்தது.றேஸியோ என்ன சக்கரை பாகு செய்ய?

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

நான் பேகிங் பௌடர் போட்டு தான் ஸெஞ்சென் நல்லா தான் வந்தது பா.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

குலாப்ஜாமுன் ரொம்ப softa இருக்கும் .பாதுஷா மேலே மொருமொருபாகவும் உள்ளே softa இருக்கும் .செய்த 1 நாள் பிறகு சாப்பிட நன்றாக இருக்கும்

ரொம்ப நன்றி .சர்க்கரை மூழ்கும் அளவு நீர் சேர்த்து (1 கப் சர்க்கரைக்கு 1/4 கப் நீர் ) கொதிக்கவிடவும் .தொட்டு பார்த்தல் பிசுபிசுப்பாக இருந்தாலே போதும் சரியாக இருக்கும்

ரூபிணி பாதுஷா பார்க்கவே அழகா இருக்கு…. அவசியம் செய்து பார்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரூபிணி,

பாதுஷா அழகா செய்திருக்கிங்க! கண்டிப்பா ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். 'யம்மி'யான இந்த முதல் குறிப்புக்கும், தொடர்ந்து இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கவும் வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

நான் இதை செய்து பார்த்தேன் , மிகவும் நன்றாக வந்தது. எனது கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு சின்ன மாற்றம் செய்திருந்தேன். கூடுதல் சுவைக்காக கொஞ்சம் பால் சேர்த்தேன்.
அல்ஹம்துலில்லாஹ் சூப்பர் !!!