கொத்தவரங்காய் துவட்டல்

தேதி: December 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தவரங்காய் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
கல் உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கொத்தவரங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் வேக வைத்துள்ள கொத்தவரங்காயை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்பு தேங்காய் துருவலை மேலே தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்.
சுவையான கொத்தவரங்காய் துவட்டல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இஙக் கிடைக்காத கொத்தவரைக்கு நான் எங்க போக.. ;( என்னை இப்படி ஆசை காட்டப்புடாது... பார்சல் ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரொம்ப புடிச்ச காய் ல இதுவும் ஒன்னு ஷெண்பகா அக்கா இந்த முரை ல நெக்ஸ்ட் டரி பன்னி பாகுரேன் அக்க தான்க்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கொத்தவரங்காய் துவட்டல் அருமையாக செய்து இருக்கீங்க,சூப்பர்.செண்பகா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பு ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா