ஸ்டஃப்டு சிக்கன் பராத்தா

தேதி: December 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

1. கோதுமை மாவு - 3/4 கப்
2. மைதா மாவு - 1/4 கப்
3. உப்பு
4. எண்ணெய் - சிறிது

ஸ்டஃப் செய்ய:

5. எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
6. வெங்காயம் - 1
7. தக்காளி - 1
8. முட்டை - 1
9. கறிவேப்பிலை, கொத்தமல்லி
10. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள்
12. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
13. உப்பு
14. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
15. எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கோதுமை மாவு + மைதா மாவு + உப்பு கலந்து தேவையான நீர் விட்டு எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வந்தங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பின் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
நன்றாக வதங்கியதும் பொடியாக கொத்திய சிக்கன் துண்டுகள் / சிக்கன் கீமா சேர்த்து உப்பு போட்டு மூடி வேக விடவும். (தேவைப்பட்டால் நீர் சேர்க்கலாம். ஆனால் நீர் அதிகம் சேரக்கூடாது.)
சிக்கன் முழுவதும் வெந்ததும் கடைசியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விடவும். முட்டை வெந்ததும் எடுத்து வைக்கவும்.
மாவை சின்னதாக தேய்த்து அதில் இந்த கலவை வைத்து மூடி மீண்டும் பராத்தாவாக தேய்க்கவும்.
வழக்கமாக பராத்தா செய்வது போல் சுட்டு எடுக்கவும். சுவையான ஸ்டஃப்டு சிக்கன் பராத்தா தயார்.


கோதுமை மாவு மட்டுமோ, அல்லது மைதா மட்டுமோ கூட பயன்படுத்தலாம். காரம் உங்கள் சுவைக்கு ஏற்றபடி சேர்க்கவும். சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய் + தனியா காம்பினேஷனாகவும் பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்