முளைகட்டிய பயிறு சாலட்

தேதி: December 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

1. பாசிபயிறு - 1/2 கப்
2. கேரட்
3. வெள்ளரி பிஞ்சு
4. எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு - சுவைக்கு
5. சர்க்கரை - 1 தேக்கரண்டி


 

பாசிப்பயிறை கழுவி 6 - 8 மணி நேரம் ஊற விடவும்.
பின் நீரை வடித்து சுத்தமான வெள்ளை துணியில் கொட்டி சுற்றி வைக்கவும்.
6 - 8 மணி நேரத்துக்கு பின் நன்றாக முளைவிட்டிருக்கும்.
கேரட், வெள்ளரி இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை பொடித்தது, மிளகு பொடித்தது கலந்து கொள்ளவும்.
இதை நறுக்கிய கேரட் வெள்ளரியுடன் கலந்து கொண்டு கடைசியாக முளைகட்டிய பயிறு சேர்த்து கலந்து விடவும்.
சுவையான சத்தான சாலட் தயார்.


முளைகட்டிய பயிறு, கேரட், வெள்ளரி எல்லாம் சம அளவில் எடுத்தால் நன்றாக இருக்கும். முளைகட்டிய பயிறு கர்ப்பமாக இருக்கும் போது தினமும் சாப்பிடுவது நல்லது. விரும்பினால் சிறிது தேங்காய் துருவல் தூவலாம். கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல ஹெல்தி ரெசிபி. எல்லோருக்கும் தெரியுமான்னு தெரியலே? கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் அருமையான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய தானியம் பச்சைப்பயறு. அம்மாவுக்கு செர்விக்கல் கான்சர் வந்தப்ப தினமும் இதை சாப்பிட சொன்னாங்க அடையார் கான்சர் இன்ஸ்டியூடில். நல்ல பகிர்வு.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மிகக் நன்றி. எனக்கு முதல்ல அம்மா தான் சாப்பிட சொன்னாங்க, கர்ப்பபை பலமாகும்னு. அதன் பின் டாக்டரும் சொன்னாங்க, சாப்பிட சொல்லி. ஆனா எல்லா பிரெச்சனைக்குமே நல்லதுன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. நான் கர்ப்பமா இருக்கும் போது தான் இது நல்லதுன்னு நினைத்திருந்தேன். நல்ல தகவல்.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜெயந்தி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா