அதிரடி கோழி மசாலா.

தேதி: September 18, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி இறைச்சி - 1/2 கிலோ.
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி.
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி.
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி.
டொமேட்டோ சாஸ் - 1/2 தேக்கரண்டி.
வினிகர் - 2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - 2 கொத்து.
சோம்பு பொடித்தது - 1/2 தேக்கரண்டி.
சுக்குத்தூள் (அல்லது) இஞ்சி பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லித் தழை - தேவைக்கு


 

கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் முழு மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை இவைகளைப் போட்டு வெந்தயம் பொன்னிறமானவுடன், இஞ்சிப் பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.
வாசனை வந்தவுடன், கோழி இறைச்சியை போட்டு கிளறி 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது இதனுடன் 3 சாஸ்கள், மிளகாய் தூள், உப்பு இவற்றைப் போட்டு ஒரு நிமிடம் கிளறிக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், வினிகர், சுக்குத்தூள், சோம்புத்தூள், கரம்மசாலா இவற்றை சேர்த்து கிளறி, லேசாக நீர் தெளித்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்து எடுத்தால் கோழி மசாலா தயார்.
கொத்தமல்லியைத் தூவி பரிமாறுங்கள்.


விரைவில் செய்யக்கூடிய இந்த மசாலாவின் சுவையும், மணமும் அனைவரையும் கவரும். இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை, இடியாப்பம் மற்றும் ஆப்பம் இவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
இன்னும் ரிச் (rich) ஆக வேண்டுமானால், ப்ரெஷ் க்ரீம் (fresh cream), வெண்ணெய் கஸ்தூரிமேத்தி இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜுபைதா...அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் இந்த அருசுவையை அவ்வபோது வந்து போகிறீர்களா என்று தெரியவில்லை.இருப்பினும் என் கருத்தை இங்கு பதிக்கின்றேன்.
உங்களுடைய இந்த குறிப்பை இன்று செய்து பார்த்தேன்.
மிகவும் நன்றாக இருந்தது.என் பைய்யனும் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
நல்ல குறிப்பை தந்தமைக்கு நன்றி ஜுபைதா அவர்களே...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.