பட்டர் சிக்கன் - 2

தேதி: December 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 14 ஸ்பூன்
உப்பு = 1/2 ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்

வதக்க
==========
வெங்காயம் - 3
இஞ்சி&பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - ஊற்வைத்தது 15
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி - 1/2 ஸ்பூன்

.


 

முதலில் சிக்கனில் மஞ்சள் ,மிள்காய் ,உப்பு,எண்ணை சேர்த்து 1 மணிநேரம் ஊறவிடவும்
பின்பு அதனை நான் ஸ்டிக் தவாவில் வைத்து தீயை கூட்டி 10 நிமிடம் வைக்கவும்
தண்ணீர் விட்ட பிறகு மிதமான தீயில் 25 நிமிடம் வைக்கவும்
பின்பு அடிக்கடி பிரட்டி தண்ணீர் வற்றவிட்டு இறக்கவும்
மற்றொரு கடாயில் எண்ணை அல்லது சிக்கனிலிருந்து கிடைக்கும் எண்ணை சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பொந்நிறமாக வதங்கியதும் இஞ்சி&பூண்டு சேர்த்து வதக்கவும்
பின்பு தக்காளி,மிளகாய்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி குழைய வதக்கி சூடு ஆறவிட்டு மிக்சியில் முந்திரிப் பருப்போடு அரைத்து எடுக்கவும்
பின்பு வறுத்த சிக்கனில் இந்த கலவையை சேர்த்து 2 கப் தண்ணீரும் சேர்த்து உப்பு சரிபார்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்
கடைசியாக கசூரி மேத்தி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்


பட்டர் சிக்கனில் மற்ற வாசனை பொருட்களாகிய கரம் மசாலா சேர்க்காமல் இப்படி செய்தால் கடையில் வாங்கும் அதே சுவையில் கிடைக்கும்.வாசனை பொருட்கள் சேர்க்காமல் எப்படியிருக்கும் என்று குழம்பவே வேண்டாம் சுவை அபாரமாக இருக்கும்.இதன் க்ரேவி திக்காக கீ ரைஸ்,நான் மற்ற பல உணவுகளோடு அருமையாக பொருந்தும்
பெயரில் பட்டர் சிக்கன் என்றாலும் பட்டர் இல்லாமலேயே செய்தேன்..நீங்கள் மசாலா வதக்கையில் பட்டரில் வதக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

Arumaiyana rusi. anaivarum senju parunga..

yummy yummy....

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றி தனிஷா..செய்து பார்த்து சரியே வந்ததா என்றும் தெரிஞ்சுக்க ஆசை

பட்டர் இல்லாத பட்டர் சிக்கன் குறிப்பு அருமை. வாழ்த்துக்கள் தளி. ஆமா இந்த கசூரி மேத்தின்னா என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கோளேன்?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா கசூரி மேத்தின்னா வெந்தய செடியின் இலை காயவைத்தது..அதற்கு ஒரு நல்ல வித்யாசமான ஃப்லேவர் உண்டு.நாம் கடையில் வாங்கும் பட்டர் சிக்கனில் முக்கியமாக வரும் அந்த ஃப்லேவர் கசூரி மேத்தி தான்

பட்டர் சிக்கன் ரொம்ப நல்லா இருந்துச்சு.முத்தான குறிப்பு.முந்திரிக்கு பதிலா பாதாம் பவுடர் சேர்த்துகிட்டேன்...மிகவும் நன்றி

நன்றி பர்வீன்..பாதாம் பவுடரா அப்போ அது பாதாம் பட்டர் சிக்கன்..பாதாமுக்கு இன்னும் அருமையாக இருக்குமோ