மஷ்ரூம் மசாலா

தேதி: December 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

1. மஷ்ரூம் - 250 கிராம்
2. வெங்காயம் - 1
3. தக்காளி - 1
4. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
5. தனியா தூள் - 4 தேக்கரண்டி
6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. உப்பு
9. பாதாம் - 10
10. முந்திரி - 10
11. பால் - 1/2 கப்
12. கறிவேப்பிலை, கொத்தமல்லி
13. பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
14. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
15. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டி பின் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
முந்திரி, பாதாமை ஊற வைத்து நைசாக அரைத்து இதில் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்து வந்ததும் கடைசியாக பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லி இலை தூவி எடுக்கவும்.


சப்பாத்தியுடன் சாப்பிட சுவையான மசாலா.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஷ்ரூம் மசாலா செய்முறை நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள். எனக்கு ஒரு டவுட்டு. மஷ்ரூம் 20 எண்ணமா இல்ல 20கிராமா? என்ன மஷ்ரூம் அக்கா நல்லா இருக்கும் இந்த மசாலா செய்ய? எனக்கு மஷ்ரூம்னா ரொம்ப இஷ்டம் அக்கா. பதில் சொல்லுங்க நாளைக்கே பண்ணிட்டு சொல்றேன் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி.... அது 250 ;) டைபோ... ஹிஹீ. நீங்க சொன்ன பிறகு தான் கவினிச்சேன். மாற்றிட்டேன். தேன்க்ஸ் நித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா