கும்பகோணம் வெள்ளை குருமா ( சைவம் )

தேதி: September 18, 2006

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 300 கிராம்.
நெய் - 25 கிராம்.
எண்ணெய் - 75 கிராம்.
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி.
பட்டை - சிறு துண்டு.
ஏலக்காய் - 2.
கிராம்பு - 2.
வெங்காயம் - 100 கிராம் (நீளமாக அரிந்தது).
தக்காளி - 50 கிராம் (பொடியாக அரிந்தது).
பச்சை மிளகாய் - 10 லிருந்து 15 (நீளவாட்டில் வெட்டியது).
தயிர் புளித்தது - 100 மில்லி லிட்டர்.
எலுமிச்சை - ஒன்று (சாறு பிழிந்தது).
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
மிக்ஸியில் அரைக்க :
கசகசா - ஒரு தேக்கரண்டி (ஊற வைத்தது)
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி.
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி.
முந்திரிப் பருப்பு - 20.


 

அரைக்க வேண்டிய 4 பொருட்களையும் நீர் ஊற்றி நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ப்ரஷர் குக்கரில் நெய், எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை போட்டு, வெடித்தவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சி பூண்டு விழுதை கலந்து, வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இந்த நிலையில் உருளைக்கிழங்கை சேர்த்து, மிதமான சூட்டில் கிளறி விட வேண்டும்.
பச்சைமிளகாய், தக்காளி, தயிர் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது தனியா தூள், அரைத்த பேஸ்ட், உப்பு கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து, குக்கரை மூடி விசில் வந்தவுடன் 5 நிமிடம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், திறந்து, எலுமிச்சைச்சாறு கலந்து, மிதமான சூட்டில் எண்ணெய் மிதந்து வரும் வரை அடுப்பில் வைத்து, பின்னர் கொத்தமல்லித் தழை தூவி பரிமாற வேண்டும்.


வெள்ளை நிறத்துடன், அழகாகவும் நறுமணத்துடனும் காட்சி தரும் சுவைமிக்க இந்த குருமா கும்பகோணம் சுற்றுப் பகுதியில் பிரபலமானது. வெஜிடபிள் பிரியாணிக்கு மாற்றாக நெய் புலாவ் சோறும், அதோடு இந்த வெள்ளை குருமாவும் அருமையாகப் பொருந்தும்.
தேவையானால் உருளைக்கிழங்குடன், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜுபைதா அவர்களே...உங்கள் வெள்ளை குருமா வித்தியாசமாக நன்றாக இருந்தது.சப்பாத்திக்கு துட்டு சாப்பிட்டோம்.நீங்கள் கடைசியில் குறிப்பிட்டது போல் நான் காலிஃபிளவரும் சேர்த்து கொண்டேன்.
மிகவும் நன்றி ஜுபைதா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொட்டிக்கு ரொம்ப நன்றாக இருந்தது.

ஜுபைதா, இந்த குருமா கல்யாணத்துல எல்லாம் தேங்காய் பால் சாதத்துக்கு side dish ஆ சாப்பிட்டு இருக்கேன். குக்கர் திறந்து taste பார்த்ததும் தான் தெரிஞ்சது, அந்த குருமான்னு - அதே சுவை. அருமை, நன்றி !!! நான் கும்பகோணம் பக்கமா வந்தது கூட இல்ல, இந்த குருமா ஊரிலேயே சாப்பிட்டு இருக்கேன் :-)

இப்படிக்கு,
சந்தனா