இறால் மஞ்சூரியன்

தேதி: December 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குட்டி இறால்(சுத்தம் செய்தது) - 250கிராம்
பெரிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 2கொத்து
பூண்டு - 10பல்
சில்லி ஃப்லேக்ஸ் - 1டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
ரெட்சில்லி சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
டொமெட்டோ சாஸ் - 3டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - 1டீஸ்பூன்
எண்ணெய் - 8டேபிள்ஸ்பூன்


 

முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு மிளகு தூள் சேர்த்து பிரட்டி 15நிமிடம் ஊற வைக்கவும்.

குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தையும்,பூண்டையும் பொடியாக(துவரம்பருப்பு சைஸ்) நறுக்கி வைக்கவும்.வெங்காய தாளையும் நறுக்கி கொள்ளவும்.

இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும்.

இப்போது பொரித்த எண்ணெயிலேயே, வெங்காயத்தை போட்டு சிம்மில் வைத்து 10நிமிடம் நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் சில்லி ஃப்லேக்ஸ், இந்த கலவைக்கு மட்டும் தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு குடை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.


சில்லி ஃப்லேக்ஸ் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். இதை சேர்ப்பதால் மஞ்சூரியன் சுவை கூடும்.

இதே முறையை பயன்படுத்தி, சிக்கன்,மட்டன்,காளிஃப்ளவர்,பேபிகார்ன்,காளான் போன்றவற்றிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Manjurian எனக்கு பிடித்த ஐடெம்.இனிமெல் விதவிதமா செஇவென்.thanks for four manjurian tips.