வாடா

தேதி: December 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

 

வாடா செய்ய:
சாதம் - ஒரு கப்
ரவை - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
வாழைப்பழம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வறுத்த இறால் (அ) காய்ந்த இறால் - 20
எண்ணெய் - பொரிக்க
மேவா(உள்ளடம்) செய்ய:
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 2
வறுத்த இறால் - 8
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய்ப்பூ - ஒரு கப்


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
சாதம் மற்றும் வாழைப்பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றுடன் ரவா மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறி 6 மணி நேரம் வைத்து விடவும்.
மாவு புளிப்பேறியதும் சிறிது உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து உளுந்து வடை போல தட்டி, வறுத்த இறாலை அதன் மேல் வைக்கவும்.
வாணலில் எண்ணெய் விட்டு சூடேறியதும் தட்டி வைத்துள்ள வாடாவை பொரித்து எடுக்கவும்.
மேவா செய்வதற்கு வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது நெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம போட்டு தாளிக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இறால், உப்பு, மஞ்சள் தூள அனைத்தையும் சேர்த்து நெய்யில் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும்.
வாடாவை, மேவாவுடன் சேர்த்து பரிமாறவும்.

இது கடலோர இஸ்லாமிய ஊர்களில் காலை, மாலை சிற்றுண்டியாக சாப்பிடப்படுகின்றது. மாவை இடித்து, கஞ்சியாக காய்ச்சி செய்வது தான் பழமையான முறை. மேற்கூறிய முறையில் செய்தாலும் அதே சுவையுடன் எளிதாக செய்து விடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரூபி வாடா சூப்பர் பார்த்ததும் எனக்கு பாட்டுதான் வருது. எனக்கு ஒரு சந்தேகம் ரூபி இறால் இல்லாம செய்ய கூடாதா? முதல்குறிப்பே முத்தான குறிப்பா தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள் ரூபிம்மா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரூபி சூப்பர்மா. நான் கேட்டதை அனுப்பிட்ட.அதை அட்மின் அன்னாவும் போட்டுட்டார். நன்றி. நித்யாம்மா இரால் போடாமல் செய்ய்லாம்.ஆனால்.அது..வாடியாயிருக்கும்

ரொம்ப சுலபமா நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரூபி வாடா பார்க்கா அருமையா வந்திருக்கு வாழ்த்துக்கள்:) முதலில் அரிசி மாவு நடுவில் மேவா அப்பறம் திரும்ப அரிசி மாவு வைத்து தட்டி தான் எங்கள் ஊரில் வாடா சுடுவோம் .இது புது மாதிரியா இருக்கு வாழ்த்துக்கள்:)இது மாதிரி நிறைய குறிப்பு அனுப்பனும் சரியாமா:)

SSaifudeen:)

ரூபி இது உங்களோட முதல்குறிப்பா(:- அழகா படம் எடுத்திருக்கீங்க இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாடா பார்க்க ரொம்ப அழகா இருக்கு. ஆனா எங்க ஊர்லயும் ஷமீஹா சொன்ன மாதிரி அரிசி மாவை வட்டமா தட்டி அது மேலே அடக்கம் (மேவா) வச்சி அப்றம் அரிசி மாவை வச்சே மூடி பொரிப்போம். இனி உங்க ஸ்டைல்லயும் செய்து பார்த்துட வேன்டியதுதான்.

அன்புடன்,
zaina.

சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க.....
வாழ்த்துக்கள்...இன்னும் நிரைய குறிப்புகளை எதிர் பார்ப்போம்.

ஹசீன்

வாடா அருமையாக செய்து இருக்கீங்க.எங்க பக்கம் வாடா பிரபலம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Arumaya senju irukeengama..enga oorlayum shameeha sonnadhu pola than seivom ma..neenga ulundhu vadai pondru azhaha seidhu irukeengama..vazthukkal rubi..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எனது முதல் குறிப்பை வெளியிட்ட ...........அட்மின் அண்ணாவிற்கும் அட்மின் அண்ணா குழுவினருக்கும் மிக்க மிக்க நன்றி:).................

வாழ்த்துக்கு நன்றிமா.............பாட்டெல்லாம் பலமா இருக்கு :) ..........வெளிய போய்விட்டு இப்போதான் வந்து ஓபன் பண்ணுனேன் இன்ப அதிர்ச்சி என் குறிப்பு வந்தாச்சு ................இறால் இல்லேன்னா காய்ந்த இறாலிலும் செய்யலாம் இல்லாமலும் செய்யலாம் ....... :)

வாழ்த்துக்கு நன்றி :)...........நீங்க கேட்டும் தான் போடணும்னு வாடா செய்து அட்மின் அண்ணாக்கு அனுப்பினேன்................

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி வனி :)...............

வாழ்த்துக்கு நன்றிமா :)..........................\\\\\\\\\\\\\\முதலில் அரிசி மாவு நடுவில் மேவா அப்பறம் திரும்ப அரிசி மாவு வைத்து தட்டி தான் எங்கள் ஊரில் வாடா சுடுவோம் .இது புது மாதிரியா இருக்கு வாழ்த்துக்கள்:)\\\\\\\\

நீங்க சொல்ற மாதிரியும் பண்ணுவோம் அதிகமா இந்த குறிப்பில் உள்ள மாதிரி தான் செய்வோம்மா :) இன்ஷால்லாஹ் இன்னும் குறிப்பு அனுப்ப ட்ரை பண்னுறேன்மா....................

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி :) என் முதல் குறிப்பு தான் அருள்....................

ரொம்ப நன்றி :) ஷமீஹா சொன்னா மாதிரி நாங்களும் பண்ணுவோம்மா...............இது ரொம்ப ஈசியா பண்ணலாம் ட்ரை பண்னி பாருங்க..................இப்போலாம் வரதே இல்லையே? அடிக்கடி வாங்கமா:)

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா :) நீங்க ஏன் குறிப்பு அனுப்ரதே நிருத்திடீங்க நீங்களும் தொடர்ந்து அனுப்புங்க..................

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா :) எங்க ஊர் பக்கமும் பேமஸ்மா..............

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா :) உங்க ஊர் மெத்தத்லயும் செய்வோம்மா...................

அஸ்ஸலாமு அலைக்கும் ரூபி
வாடா சூப்பர்...கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன்...
சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு....நிறைய குறிப்புகள் குடுங்க...வாழ்த்துக்கள்..

ரூபெய் அக்கா அட்டகாசமா இருகு அக்கா வாடா சூப்பர் ரெசிபி அன்ட் அழகா இருக்கு அக்க சொல்லி இருகுர விதம் தான்க்ஸ் சூப்பர் ரெசிபிக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

idhai mulukka saivamakavum muyarchi seyylamo?

ரூபி வாடா நல்லா செஞ்சு இருக்கிங்க... எங்கள் ஊரில் இதை கொஞ்சம் வித்தியாசமா செய்வோம். என்னிடம் ஷமீலா நாகூர் வாடா செய்முறை கேட்டு இருந்தாங்க நான் செவ்வாய் கிழமை அன்று தான் புகைப்படம் எடுத்து அறுசுவைக்கு அனுப்பினேன். இன்று அறுசுவையில பார்த்தா நீங்க குறிப்பு போட்டு இருக்கிங்க. நானும் ஒரு முறை உங்கள் முறையையும் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரூபி,
வித்தியாசமான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ரூபி
வாடா சுலபமா இருக்கு.
இறால் ரொம்ப பிடிக்கும்
கட்டாயம் செய்றேன் மா

வாடா வித்தியாசமா இருக்கு.....அதுவும் இறால் வைத்து செமையா இருக்கும்.துபாய்க்கு வாடா டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்.....

ரூபி முதல் குறிப்பே சூப்பர்......வாழ்த்துக்கள்.....

வாழைப்பழம் சேர்த்து இது வரை சாப்பிட்டதா நினைவு இல்லை , ஊர் போனதும் முதல் வேலை இதை செய்ய சொல்லி சாப்பிட வேண்டியதுதான் :-) .தேங்ஸ் ஃபார் ரெஸிபி :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

வாழ்த்துக்கு நன்றி சமீலா.............கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க...............

வாழ்த்துக்கு நன்றிமா :) இங்கே உன் குறிப்பெல்லாம் இப்பொ வரது இல்லை? சீக்கிரமே உன் குறிப்பையும் எதிர்பார்க்கிறோம்...........

இறால் இல்லாமலும் செய்யலாம் (சைவம்)..............

வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிமா :) ........அப்படியமா! உங்க குறிப்பையும் போடுங்க நானும் ட்ரை செய்யுறேன்..............

வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)

ரொம்ப ஈசியான முறை தான்..........செய்துட்டு சொல்லுங்க :)

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா :) செய்துட்டு சொல்லுங்கமா.............

வாழைப்பழம் சேர்ப்பதால் சாப்ட் & கிரிஸ்பியா இருக்கும்..............ஊருக்கு போனதும் செய்ய சொல்லி சாப்பிடுங்க................வருகைக்கு நன்றி :)