கும்பகோணம் வெள்ளை குருமா ( அசைவம் )

தேதி: September 19, 2006

பரிமாறும் அளவு: 5 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ஆட்டு இறைச்சி - 500 கிராம்.
நெய் - 25 கிராம்.
எண்ணெய் - 75 கிராம்.
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி.
பட்டை - சிறு துண்டு.
ஏலக்காய் - 2.
கிராம்பு - 2.
வெங்காயம் - 100 கிராம் (நீளமாக அரிந்தது)
தக்காளி - 50 கிராம் (பொடியாக அரிந்தது)
பச்சை மிளகாய் - 10 லிருந்து 15, (நீளவாட்டில் வெட்டியது).
தயிர் புளித்தது - 100 மில்லி லிட்டர்.
எலுமிச்சை - ஒன்று (சாறு பிழிந்தது.)
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
மிக்ஸியில் அரைக்க :
கசகசா - ஒரு தேக்கரண்டி (ஊற வைத்தது).
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி.
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி.
முந்திரி பருப்பு - 20.


 

அரைக்க வேண்டிய 4 பொருட்களையும் நீர் ஊற்றி நைசாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ப்ரஷர் குக்கரில் நெய், எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை போட்டு, வெடித்தவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சி பூண்டு விழுதை கலந்து, வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இந்த நிலையில் ஆட்டிறைச்சியை சேர்த்து, மிதமான சூட்டில் 5 நிமிடம் கிளறிவிட வேண்டும்.
பச்சைமிளகாய், தக்காளி, தயிர் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது தனியா தூள், அரைத்த பேஸ்ட், உப்பு கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து, குக்கரை மூடி விசில் வந்தவுடன் 5 நிமிடம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், திறந்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான சூட்டில் எண்ணெய் மிதந்து வரும் வரை அடுப்பில் வைத்து, பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டும்.


வெள்ளை நிறத்துடன், அழகாகவும் நறுமணத்துடனும் காட்சி தரும் சுவைமிக்க இந்த குருமா கும்பகோணம் சுற்றுப் பகுதியில் பிரபலமானது. பிரியாணிக்கு மாற்றாக நெய் புலாவ் சோறும், அதோடு இந்த வெள்ளை குருமாவும் அருமையாகப் பொருந்தும்.
தேவையானால் கோழி இறைச்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி ஜுபைதா,

அஸலாம் ஆலெக்கும்

தங்களுடைய இந்த சமையல் குறிப்பினைக்கண்டேன். ஆனால் இதில் கறி மசாலா அதிகம் சேர்க்கவில்லையே. குறிப்பாக கரம் மசாலா.

உங்கள் குறிப்பிற்கு நன்றி.
செய்முறையில் சொல்லியது போல் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளை சேர்ப்பது போதுமானது.கரம் மசாலா போடும் போது நிறம் கொஞ்சம் மாறிவிடும். சுவையிலும் மாற்றம் வரும். வெள்ளை நிறம் முக்கியம் என்பதால் கரம் மசாலாவைப் பற்றி குறிப்பிடவில்லை.

அன்புடன்,
ஜூபைதா.

அன்புடன்,
ஜூபைதா.

நன்றி ஜுபைதா..உங்கள் குருமா ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது...நன்றி..ருக்சானா..

வாழு, வாழவிடு..