சிம்பிள் அரைத்துவிட்ட சாம்பார்

தேதி: December 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

துவரம்பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம்-1/2 கப்
முருங்கைக்காய்-2
தக்காளி-1
புளி-எலுமிச்சையளவு
வதக்கி அரைக்க:
சாம்பார்த்தூள்-1டேபிள்ஸ்பூன்
தேங்காய்துருவல்-1/4கப்
உப்பு தேவைக்கு
தாளிக்க
எண்ணை-1டீஸ்பூன்
கடுகு-1டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
சிகப்புமிளகாய் -2
கறிவேப்பிலை-1கொத்து
கடைசியில் தூவ:
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை


 

முதலில் தக்காளி,முருங்கையை கழுவி நீளவாக்கில் நறுக்கவும்
சின்னவெங்காயம் கழுவி தோலுரித்து வைக்கவும்.
புளியை 3 கப் நீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்
துவரம்பருப்பை மஞ்சள்த்தூள் ,பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
பருப்பு வேகும்போது வேறொரு பாத்திரத்தில் வெங்காயம்,தக்காளி,முருங்கையை நீர் சேர்த்து வேகவைக்கவும்..பாதி வெந்ததும் புளி கரைசல் சேர்க்கவும் .
பின் வேகவைத்த பருப்பை மசித்து சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
மிதமான தீயில் எண்ணையில் சாம்பார்த்தூள் வதக்கி அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் சாம்பாரில் கொட்டி மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்
வாணலியில் கடுகு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலை,சிவப்புமிளகாய் தாளித்து கொட்டவும்.
கடைசியா பொடியாக மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்


இதில் அதிக காரம் விரும்பினால் சாம்பார்த்தூளை கூட்டி கொள்ளலாம்.
சின்னவெங்காயம் மட்டும்நிறைய சேர்த்து காயில்லாமல் வைக்கலாம்.அல்லது விருப்பமான வேறு சாம்பார்காய்கள் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்