பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஷமினா(:-
//சண்டைன்னு வந்தாலே எங்கேயும் எப்போதும் ஜெயிப்பது பெண்களே. ஆண்கள் பார்க்கத்தான் வீரமா இருப்பாங்க நம்ம வடிவேலு மாதிரி, உள்ள கோவைசரளாக் கிட்ட மாட்டி டர்ராவது வெளிய காட்டிக்க மாட்டாங்க!//
குழாயடிச்சண்டை முதல் குத்து சண்டை வரை ஜெயிப்பது பெண்களேனு ஷமீனா சொல்றாங்கோ, எதிதாப்புல ஆராவது இருக்கீகலா இல்லனு சொல்ல!!

//அச்சச்சோ முக்கியமானத மறந்துட்டேனே!!! நடுவரே எனக்கு பிடித்தமான ஐட்டங்கள் அத்தனையும் எனக்கு எடுத்து வைய்யுங்க. எல்லோரும் வீட்டுலேயே சாப்பிட்டுட்டு வந்துடுவாங்க???? வர்றவங்க எல்லாம் அவ்வளவு நல்லவுங்க.........> அதனால எல்லாமே எனக்கு மட்டும்தான்............//
ஏ புள்ளங்கலா குந்தாணி, மந்தாணி ரெண்டு பேரும் உசாரா இருங்கோ, ரொம்ப நல்லவீக வந்திருக்காக எதுக்கும் தின்பண்ட மூட்டக்கிட்ட மண்ணாங்கட்டியையும், கல்லுமுட்டியையும் உக்கார வெய்யுங்கடீ..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கோவ (மன்னிச்சுப்புடுங்க... கோவை) கார நடுவர் அக்கா வணக்கமுங்க.. எல்லாம் திங்கள் ஆரம்பிக்கிற பட்டியை நேத்தே ரொம்ப அட்வான்ஸ் ஆரம்பிச்சு கலக்கிக்கிட்டு இருக்கீங்க... நல்லது... வாழ்த்துக்கள்..

சரி குடும்பத்துக்குள்ளே கலகத்தை மூட்டி விட்டு பின்னால தான் வந்து நடுவர் தீர்ப்பு சொல்லுவார் போல... சரி எல்லாம் வீட்டுல போயி ஒரு முறை சண்டை போட்டு யார் ஜெயிச்சிங்கன்னு சொல்லுங்க பார்ப்போம் அப்படினு நம்ம நாரதர் சாரி நடுவர் நாட்டாமை சொல்லுறாக.

சரி பட்டிக்குள்ள போகலாம் நடுவரே... உப்பு , புளிக்கு பெறாத விஷயத்துக்கு கூட சில நேரங்கள் ல சண்டை வரும் நடுவரே... அப்போ எல்லாம் பாத்தீங்கன்னா ஜெயிக்கிறது என்னவோ நம்ம தான்... அட பெண்கள் தான்... ஆனா உண்மைலே பெரிய , விஷயம் இருக்கிற மேட்டர் ல சண்டை வருதுணு வைங்க.. அப்போ நாம என்ன தான் தலைகீழா நின்னாலும் நாம சொல்றது எடு படாது... ஏன் னு சொல்றேன் ..

நாம கண்ணுல கட்டி வச்சு இருக்க டாங்க் எல்லாம் திறந்து கூட விடுவோம்.. டாங்க் ஆ அப்போதைக்கு அணை கட்டி நிறுத்தி வைப்பாங்க(நல்லவுக மாதிரி) ஆனா அவங்க செய்யுர சமாதானம் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா ..அழுக வச்சதுக்கு சாரி தான் சொல்லுவாங்க.. நாம கேட்ட விஷயத்துக்கு சரி சொல்ல மாட்டாக மக்களே.. இந்த சமூகமே ஆண் ஆதிக்கம் மிக்கது... அப்படி இருக்க நாம எங்க நடுவரே ஜெயிக்க முடியும்.. திரும்ப வரேன் நடுவரே..

எதிர் அணி இல்லாம நீங்க பொலம்புனது இங்க வரை கேட்டுச்சு நடுவரே.. அதான் ஓடியாந்து சீட் போட்டுட்டேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

புது நடுவருக்கு வாழ்த்துக்கள்...தலைப்பை நல்லாதான் புடிச்சு இருக்கிங்கோ :)
திண்பண்டம் எல்லாம் தற்றதா சொன்னதுனால வந்ததா நினைக்காதீங்க...உங்க நல்ல மனசுக்கு சும்மாவே தருவீங்க...
சண்டையில் ஜெயிப்பது ஆண்கள் தான் என்கிறது என்னோட கருத்து..
என்ன தான் நம்ம கண்ணுல டேம் கட்டினாலும் கல்லு மாதிரி இருந்து காரியத்தை சாதிக்கிற திறமை அவங்களுக்கு தான் அதிகம்...
ஏதோ நம்ம கண்ணு சுத்தமாச்சேன்னு சந்தோஷப்பட மட்டும் தான் நம்மலால முடியும்....
விரிவான வாதங்களுடன் பிறகு வருகிறேன்...

அவர்களுக்கு வணக்கம்!!! வாழ்த்துக்கள்!!!

சுவாரசியமான தலைப்பு!!! எனக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு கொடுத்து இருங்கீங்க. எப்படி யாரு பக்கம்,என்ன பேசறதுன்னு ஒண்ணுமே தெரியலை. இப்படி பட்டிக்குள் வந்து விட்டு என்ன பேசறதுன்னு தெரியலன்னு முழிச்சுட்டு இருந்தா வேலை ஆகுமா? சட்டு புட்டுன்னு யாரோ ஒரு பக்கம் பேசி தானே ஆகணும். அதனால் நான் நம்ம பக்கமே (பெண்கள்) வாதடுகிறேன்.

சண்டையில் ஜெயிப்பது கண்டிப்பாக பெண்களாக தான் இருப்பாங்க நடுவரே. ஏன் என்றால் அவீங்க பக்கம் தான் கண்ணீர் என்ற ஒரு பெரிய ஆயுதம் இருக்குதே!!! இவ்வளவு பெரிய ஆயுதம் பெண்கள் கையில் இருக்கும் வரை ஆண்கள் எப்படி ஜெயிப்பாங்க நடுவரே? நீங்களே சொல்லுங்க?

கொஞ்சம் அதட்டி பேசினாவே கண்ணுலே தண்ணிய வர வெச்சு ஆண்கள ஆஃ ப் பண்ணிருவாங்க. அப்புறம் எங்க ஆண்கள் சண்டை பிடிக்கிறது? ஜெயிக்கறது? அவீங்களே சமாதான படுத்தவே நேரம் போயிரும் ஆண்களுக்கு.

//என்ன தான் நம்ம கண்ணுல டேம் கட்டினாலும் கல்லு மாதிரி இருந்து காரியத்தை சாதிக்கிற திறமை அவங்களுக்கு தான் அதிகம்//

அதெல்லாம் இல்லை நடுவரே.. ஆண்கள் எத வேணாலும் சகித்து கொள்வார்கள். ஆனால் பொண்ணுங்க அழறது மட்டும் தாங்கிக்கவே மாட்டாங்க. ஒரு பொண்ணு அழத் தொடங்கி விட்டால், ஆண்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது, எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்றே நினைப்பார்கள் . சரி அவீங்க தான் சமாதனம் செய்றாங்களே, அப்படின்னு அப்பவாது பெண்களுக்கு அழுகை குறையும்ன்னு நினைக்றீங்க? இல்லவே இல்ல, அப்போ தான் அதிகமாக அழுவாங்க, அவர்கள் கேட்டது நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறையும். இப்படி காரியத்தில் கண்ணும் கருத்தமாக இருக்கிற பெண்களா தோத்து போவாங்க?

அதனால் நிச்சயம் ஜெயிப்பது பெண்களாகத்தான் இருப்பார்கள் நடுவரே.

விரிவான வாதங்களுடன் பிறகு வருகிறேன் நடுவரே.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

இந்தா சொன்ன மாதிரியே எதிர் அணிக்கு வந்துட்டோம்ல ;)

நடுவரே... அடுப்புல சமையல் பாதியில் கெடக்கு... நீங்க திங்க தரதா சொன்னதி நம்பி உட்டுப்போட்டு வர முடியாது பாருங்க ;) அதனால சொல்ல வந்ததை கொஞ்சமே கொஞ்சமா சொல்லிப்போட்டு போறேன்.... ;)

நம்ம அறுசுவையில் நம்ம 1000 கணக்கான பெண்கள் இருக்கோம்... ஒரு ஆண் எப்பவும் இங்க தான் இருக்கார்... வந்து போறவங்களை விடுங்க... இருக்கவரை பார்ப்போம்...

அவரு நமக்கு எப்பவுமே விட்டுக்கொடுத்து சப்போர்ட் பண்றாப்பலயே இருக்கும்... நாமலும் ”ச... நம்ம என்ன பண்ணாலும் தாங்குறாருய்யா... ரொம்ப நல்லவருன்னு” ;) இருப்போம். இதே இவரு... எதாச்சும் பிரெச்சனைன்னு ஆச்சுன்னு வைங்க... நம்மை லெஃப்ட் ரைட்டு வாங்கிபுடுவாரு. நாம இத்தனை நாள் விட்டுக்கொடுத்ததை நினைச்சு பேசாம வாங்கிக்குவோம் :) ஹிஹிஹீ [அண்ணாத்தை என்னை உதைக்காம இருந்தா சரி]

இது தான் ஆண்கள் :) சின்ன சின்ன விஷயத்தில் விட்டுக்கொடுத்து பெரிய காரியங்களை சுலபமா சாதிச்சுடுவாங்க. வீட்டில் சாம்பாரில் உப்பில்லாத மேட்டருக்கு வர சண்டைக்குலாம் நம்மை சமாதானம் பண்ணி தாஜா பண்ணிட்டு அவங்க அம்மா நம்மை திட்டு திட்டுன்னு நம்மை திட்டினா “உனக்காக நான் எவ்வளவு விட்டு கொடுத்திருக்கேன், எனக்காக எங்க அம்மாவுக்கு கொஞ்சம் விட்டுக்கொடேன்”னு மேட்டரை சுலபமா முடிச்சுடுவாங்க. :) ஏன்னா அவங்களுக்கு தெரியும், தனியா இருக்கும் போது இது போல சின்ன சின்ன விட்டு கொடுக்கும் விஷயம் அடுத்த முறை இந்தியா போகும் போது உங்களை உங்க அம்மா வீட்டுக்கு போக விடாம அவர் வீட்டுலேயே தங்க வைக்க உதவும்னு.

பெண்கள் சும்மா கத்தவும் அழவும் தான் செய்வாங்க நடுவரே... காரியத்தில் கெட்டியாக நின்னு ஜெயிப்பவர்கள் ஆண்களே.

இப்போதைக்கு பதிவு தமாசா தான் போட்டேன், யாரும் சீரியசாகி கோச்சுக்கபுடாது... நான் அப்பறம் வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே ,உங்களுக்கு என்னோட முதற்கண் வணக்கமுங்கோ... இது அறுசுவையில் நடக்கும் 80 ஆவது பட்டி, ஆனா நான் கலந்துக்கிற முத பட்டிங்க. அதனால நடுவர் அவர்களே தயவு செய்து எனக்கு சாதகமான தீர்ப்பு தான் சொல்லோனுமாக்கும். இனி எந்த பக்கம் நானு அப்பிடிஙகிரத சொல்லட்டா? (சொல்லிட்டு இடத்த காலி பன்னுனு நீங்க சொல்ரது என்க்கு கேக்க்துங்கோ) சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா? இது தானே உங்க கேள்வி,சந்தேகம் என்ன, பெண்கள் தாங்கோ நடுவரே...(முந்தா நேத்து முக புத்தகத்துல பேசும் போது நீங்க சொல்ல்ல, உங்க வீட்டுல சண்டையினு வந்தா நீங்க தான் செய்பிங்கன்னு. அதுக்கப்புறமும் நடுவருக்கு ஒரே டவுட்டு.... )

என் அணி சக தோழி சொன்னது போலசண்டையில் ஜெயிக்க ஏகப்பட்ட அஸ்திரம் இருக்குதுங்கோய்..அதுல முதல் இது தானுங்கோ.. இப்போ நம்ம மாமியாரம்மா நம்மல பத்தி ஏதாவது சொல்லி அதுக்கு நம்மாளு நம்மள திட்ட டிஸ்யூம் வருதுன்னு வைங்க நீ எதுக்கு எஙக அம்மாகிட்ட அப்பிடி சொன்னே அப்பிடின்னு மட்டும் தான் கேட்டு இருப்பார் நம்மாளு..அதெப்ப்டி உஙக அம்மா சொன்னதெ நம்பி நீங்க எங்கிட்ட அப்பிடி கேட்கலாம்னு தொடங்கும்டிஸ்யூம் , அப்போ ,நாங்க (அதாகப்பட்டது பெண்கள் ) சன்ட போடும் போது கஷ்டப்பட்டு பேசி எல்லாம் ஆண்கள்ட்ட செயிக்க மாட்டோம். ,பாதி சண்டயில டெப்பாசிட்டு போக போகுதுன்னு தோனிடுச்சுன்னு வைங்கோ கொஞ்சூண்டு வெங்காயத்த எடுத்து உறிச்சுட்டே(ன்ய்ட் டிப்பனுக்கு சட்னி செய்யோனுமுல்லோ அதுக்கு தான்கோ) அப்பிடியே சன்டய கன்டினியு பன்னுவோமாக்கும்., அப்பிடியே அழுகாச்சி பிச்சுட்டு டேமு திறந்த தண்ணீயாட்டமா வருமுல்லோ.(வெங்காயத்தஉறிச்சுட்டே தான் நடுவரே அப்போ தானே கண்ணில தண்ணியோட ஒரு கோர்வையா சொல்ரதுக்கு வரும்.
அப்புறம் கல்யாண ஆனதுல இருந்து ஒன்னொனா நடந்தத வராத த்ண்ணிய வரவெச்ச்சுட்டே சொல்லுவொம்ல( செய்தது, செய்யாதது ...அறிந்தது .. அறியாதது .இப்பிடினு,...) , இதெல்லாம் நடக்கும் போது அப்பிடியே வூட்டுக்காரரே சய்டுல ஒரு பார்வை(நீங்க நினைக்கரது புரியுது,, நோ சய்ட்டு, இந்த நேரத்துல அப்பிடி எல்லாம் பார்க்க முடியுமாங்கோ, பாவமா பர்க்கோனுமாக்கும்,ஐயோ உங்குளுக்கு போய் நான் சொல்ரேன் பாருங்கோ, நீங்க நாலும் அறிஞ்சவர்.எப்பிடியோ நடுவருக்கு ஐஸ் வச்சாச்சு.. ) , நம்ம அழுகாச்சிக்கு முகத்துல ஒரு எபக்ட் இருக்குதான்னு பார்க்கோனுமுல்லோ அதுக்கு தான்.. ஆனாளும் வாய் மூடாம பேசிட்டே இருப்போம், இதுக்கு அப்புறமும் சன்ட தொடருவாங்கன்னு நினைக்கிரிஙளா நடுவர் அவர்களே.. ? அப்புரம் நம்ம ஆளு , கிட்ட வந்து(எட்டி எல்லாம் பார்க்கப்புடாது .. அது தப்பு...) கண்ண தொடச்சுட்டு, (என் கண்ண தான்) போகட்டும் உடு, நான் ஏதோ ரோசனைல பட்டுன்னு பேசிட்டேன், மன்னிச்சுடு , இதுக்கு போய் இப்பிடி அழுகுவியா தலைவலி வந்துடும்ன்னு சொல்லி செல்லமா ... ( அப்புறம் என்னமொ நடக்கட்டும் நடுவரே)சொல்லிட்டு வெள்ளை கொடிய காட்டுவார் பாருஙக..அஙக தான் நடுவர் அவர்களே பெண்கள் செயிக்கிராங்க. (இதுல நமக்கு டெப்பாசிட்டு பிளஸ் போனஸ்ம் கிடைக்கும் பாருங்க நடுவர் அவர்களே. (வெளிய கூட்டிட்டு போறது + ஹோட்டல் + பரிசு)(அவிய கண்ண அவிய வெளிய வந்து தொடச்சுக்குவாஙக,இனிமே வெங்காயமே வாஙக கூடாதுங்கர முடிவோட) நம்ம வாதம் எப்பிடி இருந்துதோ தெரியாது, ஆனா நாக்கு வறன்டு போச்சு, அந்த இளநீர் ஒன்னு போட்டு குடுங்க நடுவரே. மகன் எழுந்திரிச்சுட்டார் , அதனால அடுத்த அஸ்த்திரம் என்னன்னு முடிஞ்சா இரவு இல்ல நாளை பதிவு போடரேன், இப்போ வர்ட்டா....

பின் குறிப்பு/ நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால்(எல்லாமே தப்பு தான்னு நீங்க சொல்ரது எனக்கு கேட்குது, என்ன செய்ய , நடுவர்னு வந்துட்டா எவலோ அடிச்சாலும் தாங்கி தான் ஆகனும்)எனக்கு இதுவே முதல் பட்டி என மனதில் கொண்டு மன்னித்து, அருட்செல்வி மகமாயி துணை நிற்க என்ற பக்கமே தீர்ப்பு அருள வேண்டுகிறேன்..( எப்புடி...).

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இம்மாநீள முன்னுரை குடுத்து எங்களைக்கூவி அழைத்த நாட்டாமைக்கு "முன்னுரை முனைவர்" பட்டம் குடுத்து என்னுடைய முதல் வாதத்தைத் தொடங்குறேன்.அப்படி பாக்காதீங்க நாட்டாமை. இந்த வெள்ளைப்புறா எப்பவும் என் தோளில்தான் உட்கார்ந்திருக்கும். இப்படி நான் சமாதானசின்னத்துடன் சுத்தும்போதே சண்டையில் சிக்கவெச்சி சின்னாபின்னமாக்கிடறாங்க.மாமன் வருவான் மல்லிகைப்பூ தருவான்னு இத்தனைநாளா நான் அமைதிகாக்கலை. என் மானமருவாதி என் மக்க முன்னாடி மங்கிடகூடாதுன்னு இருந்தேன். நான் கணினி முன்னெ உட்கார்ந்தால் மச்சானுக்கு கடுப்பு.

இப்ப புரிஞ்சிருக்குமே அன்னைக்கு நான் எந்த அணிக்கு சீட் போட்டேனு.ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள்னு கேள்விபட்டிருப்பீங்களே!அந்த அறுபது நாள் ஆரம்ப கட்ட துள்ளலில் இருப்பவங்கதான் எதிரணியினர்.அந்த மோகதிற்கப்புறமல்லாம் சண்டையில் வெற்றியாவது, சுயமரியாதையாவது.குடுபத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் காக்க சரண்டர் தவிர வேறு வழியுண்டா.குடும்ப மானம் வெளியே போவது இருக்கட்டும், பெற்ற குழந்தைகள் முன் போகாம காப்பாத்தனும்னா எனக்கு தெரிந்த வழி என் பக்கம் நியாயம் இருந்தாலும் சண்டையின்போது அமைதியா போவதுதான்.
அடிப்படையில் ஆதிக்க குணம் கொண்டவர்கள் ஆண்கள். எமோஷ்னல் வீக்னஸ் கொண்டவர்களாகிய பெண்களை சமாளிக்கவே சில இடங்களில் அடங்கி போவதுபோல் நடிப்பர். இந்த சலசலப்பில் பெண்களே சண்டையில் வெற்றிபெறுவதாக நம்பி சிலிர்க்கின்றனர்.இப்போதைக்கு இத்தோட கிளம்பறேன்.நேரமாச்சு மரியாதையைக்காப்பாத்தோனும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

கார்த்திகா,அசத்தலா வந்து ஆண்களே ஆதிக்கம் உடையவர்கள்னு சொல்லி உங்களோட அணிய தீர்மானிச்சுட்டீங்க எதிரணிக்காரகளுக்கு கண்டிப்பா வயித்துல உப்புல துவட்டின புளிய கரைக்கும்னு நினைக்கிறேன்(:-
//எதிர் அணி இல்லாம நீங்க பொலம்புனது இங்க வரை கேட்டுச்சு நடுவரே.. அதான் ஓடியாந்து சீட் போட்டுட்டேன்//
என்னோட பொலம்பலுக்கு செவிசாய்ச்ச தங்களோட செவிக்கு என்முதற்கண் வணக்கமும், நன்றியும்!!
நிறைய எதிர்பார்க்கிறார் இந்த நடுவர் தங்களிடமிருந்து, வெடுக்குனு ஓடியாங்க சீக்கிரம்!!

மந்தாணி இந்தக்காளுக்கு கருப்பட்டி ஒண்ணு எடுத்துக்கொடுத்துரும்மா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஷமீலா, வாழ்த்திற்கு மிக்க நன்றி(:-
///திண்பண்டம் எல்லாம் தற்றதா சொன்னதுனால வந்ததா நினைக்காதீங்க...உங்க நல்ல மனசுக்கு சும்மாவே தருவீங்க...///
நீங்க ஒருத்தராவது என்னோட நல்ல மனச புரிஞ்சுக்கிட்டிங்களே!!
நீங்களும் ஆண்களேங்கிற அணியா, கண்டிப்பா எதிரணிகாரங்க கொஞ்சம் நடுங்கித்தான் போவாய்ங்க!!
நாம கண்ணுல டேம் கட்டினா அவிய்ங்க கெணத்துல போட்ட கல்லாட்டம் கம்னு இருப்பாங்கனு சொல்லவர்றீங்க அப்படித்தானே!! எனக்கு பிரிஞ்ச இந்த வெஷயம் எதிரணிக்காரவுகளுக்கு பிரியாம போய்றுமா இன்னா?

குந்தாணி ஷமீலா அக்கா வேண்டாம்னு சொன்னாலும் உடப்படாது ஆமா, பனங்கிழங்கும், குச்சிக்கிழங்கும் கொடுத்தனுப்புமா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுதா வாழ்த்திற்கு நன்றி(:-
/// எனக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு கொடுத்து இருங்கீங்க. எப்படி யாரு பக்கம்,என்ன பேசறதுன்னு ஒண்ணுமே தெரியலை//
அப்படியெல்லாம் சொல்லப்புடாது ஆமா!!
//அதெல்லாம் இல்லை நடுவரே.. ஆண்கள் எத வேணாலும் சகித்து கொள்வார்கள். ஆனால் பொண்ணுங்க அழறது மட்டும் தாங்கிக்கவே மாட்டாங்க//.
பாவம் சும்மாவே பார்க்க அழகா இருக்கிற முகத்தை அழுகையோட, அழுகலா பாக்கிறதுக்கு எந்த ஆணுக்குத்தான் மனசு வரும். மனசு சுக்குநூறா நொறுங்கில்ல போயிரும். நல்ல வாஸ்தவமான பாயிண்ட்தான்.
இன்னும் இதுமாதிரி கருத்துள்ள பாயிண்டுகளை இந்த நாட்டாமை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

மந்தா,குந்தா 2 பேரும் சுதாப்பொண்ணுக்கு நல்ல இளநொங்கா பாத்து வெட்டிக்கொடுங்க பாக்கலாம்..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்