பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

////நடுவரே... அடுப்புல சமையல் பாதியில் கெடக்கு... நீங்க திங்க தரதா சொன்னதி நம்பி உட்டுப்போட்டு வர முடியாது பாருங்க ;) அதனால சொல்ல வந்ததை கொஞ்சமே கொஞ்சமா சொல்லிப்போட்டு போறேன்.... ;)////
அதானே சண்டைனு வந்தாதானே நாம சமையல பாதியா குறைப்போம். பட்டி காரணத்த சொல்லிப்புட்டு பாதிசமையல்னு சொன்னா நல்லா இருக்காது,அதுனால நீங்க கொஞ்சமாவே இப்போதைக்கு சொல்லுங்க, சமையல் முடிச்சுட்டு மீதிய சொல்லுங்க!!
//நம்ம அறுசுவையில் நம்ம 1000 கணக்கான பெண்கள் இருக்கோம்... ஒரு ஆண் எப்பவும் இங்க தான் இருக்கார்... வந்து போறவங்களை விடுங்க... இருக்கவரை பார்ப்போம்...//
நீங்க ஆரு, நான் எங்கிருக்கேன், இங்க என்ன நட்க்குது, கண்ணெல்லாம் ஒரே மசமசங்குதே, நான் ஆருகிட்ட பேசிட்டிருக்கேன். ஒரு நிமிஷம் இத்தா வந்திர்ரேன்..

ஐயோ நல்ல நல்ல பாயிண்டாதான் கொண்டுவர்ரீங்க வனி!!

மந்தாணி, குந்தாணி எல்லாத்தையும் ஏறக்கட்டுங்கடி, மண்ணாங்கட்டி,கல்லுமுட்டி வண்டிய பூட்டுங்கடா.. சீக்கிரம், ஆலமரமா? பட்டியா? அது எங்கிட்டு இருக்கு!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி, வாழ்த்திற்கும்,வருகைக்கும் மிக்க நன்றி(:-
////நடுவரே...(முந்தா நேத்து முக புத்தகத்துல பேசும் போது நீங்க சொல்ல்ல, உங்க வீட்டுல சண்டையினு வந்தா நீங்க தான் செய்பிங்கன்னு.///
இதுதான் பொதுசபைல கட்டுசோத்து மூட்டைய அவுக்கிறதாப்பா!!
//(வெங்காயத்தஉறிச்சுட்டே தான் நடுவரே அப்போ தானே கண்ணில தண்ணியோட ஒரு கோர்வையா சொல்ரதுக்கு வரும்.//
இந்த மாதிரி ஒரு ஆயுதம் இருக்கிறத இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுறது..
//நீங்க நாலும் அறிஞ்சவர்//
ஆமாங்க நாலு மட்டுமில்ல கிலோ கிலோவா காய்கறி,வெங்காயம்னு அறிஞ்சுக்கிட்டுதானே இருக்கோம்.
அப்ப நீங்களும் பெண்களேனு சொல்லிட்டீங்க எதித்தாப்புல என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.

மந்து,குந்து அவங்க கேட்டா மாதிரியே இளநீ வெட்டிக்குடுங்கடி,, பாய்ண்ட் எடுத்துச்சொல்லி வேர்த்து விருவிருத்து போயிருக்காங்க பாருங்கடீ...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நீங்க இந்த வேலை பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுதான் நான் ஆள் கூட்டியாந்தேன். டேய் லாரன்ஸ்ஸூ, மாத்யூ இந்த நாட்டாமையை புடுச்சு ஆலமரத்துலா கட்டுங்கடா.தீர்ப்பு சொல்லர வரைக்கும் கட்டவுக்க கூடாது

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

செயந்தி, பதிவிற்கு மிக்க நன்றி(:-
// "முன்னுரை முனைவர்" பட்டம் குடுத்து என்னுடைய முதல் வாதத்தைத் தொடங்குறேன்.//
ரெம்பநாலா இந்த பட்டத்துமேல ஒரு கண்ணு எப்புடிஆவது முனைவர் பட்டம் வாங்கியே ஆகணும், பேருக்கு முன்னால முனைவர்னு போடணும்னு அதுக்க்காகவே உங்களுக்கு 15கிலே சி.வெங்காயம் பார்சல் செய்யப்படுகிறது.

இப்போ நீங்க என்னதான் சொல்லி இருக்கீங்க, இந்த நாட்டாமை ஒரு டூப்லைட்டு, எத்துனாலும் பிட்டுபிட்டு வெச்சாதான் இந்த நல்ல மண்டைக்குள்ள ஏறும்!!
இன்னோருக்கா வந்து நல்லா வெலக்கினீங்கனாதான் எனக்கு பிரியும்.

மந்தா,குந்தா இருங்கடி செயந்தியக்கா வருவாங்க அப்புறமா பார்சல் பண்ணலாம்.
ஒரே களப்பா இருக்கு எனக்கு அப்பிடியே எளநி ஒண்ணு வெட்டுங்கடி.. அடி, புடினு சொன்னதாலே உள்ளாற எச்சைய துப்பிறக்குடாது ஆமா.. அதெல்லாம் எல்லார் முன்னாடியும் ஒரு பில்டப்புக்குத்தேன்.. சரியா..கண்ணுங்களா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

புரியலைங்களா நாட்டாமை அப்ப சரி. நான் சரியான ரூட்லதான் போறேன்.நீங்கன்னு இல்லே அதை என்னைத்தவிர யாருபடிச்சாலும் புரியாது. இது நம்ம ஸ்பெஷாலிடி.

மொத்தத்திலே சண்டையில் காலங்காலமா ஜெயித்தது ஜெயிப்பது ஜெயிக்கப்போவது ஆண்களேன்னு சொன்னேன்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நடுவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நடுவருக்கு என் வாழ்த்துக்களுடன் முதற்கண் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்...

சண்டையில் ஜெயிப்பது ஆண்களே என்ற அணிக்காக பேச வந்துள்ளேன்.

//என்ன தான் நம்ம கண்ணுல டேம் கட்டினாலும் கல்லு மாதிரி இருந்து காரியத்தை சாதிக்கிற திறமை அவங்களுக்கு தான் அதிகம்...//தோழி சொன்னது உண்மை தான் தோழி.சின்ன சின்ன விஷயத்திற்கு நமக்காக விட்டு கொடுக்கும் ஆண்கள்,பெரிய விஷயங்கள் வரும் போது நான் ஆம்பிளை நீ பெண் நீ தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்பார்கள்...

//ஒரு பொண்ணு அழத் தொடங்கி விட்டால், ஆண்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது, எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்றே நினைப்பார்கள் . சரி அவீங்க தான் சமாதனம் செய்றாங்களே, அப்படின்னு அப்பவாது பெண்களுக்கு அழுகை குறையும்ன்னு நினைக்றீங்க? இல்லவே இல்ல, அப்போ தான் அதிகமாக அழுவாங்க, அவர்கள் கேட்டது நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறையும். இப்படி காரியத்தில் கண்ணும் கருத்தமாக இருக்கிற பெண்களா தோத்து போவாங்க? //நடுவரே மேலே கூறியவை எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் நடப்பது மிகவும் குறைவு.பெரும்பாலான குடும்பங்களில் இவ்வாறு நடப்பதில்லை.நடக்கும் பிரச்சனையில் ஆண்கள் வெற்றி பெற்றாலும் பெண்கள் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் ஆண்களை பகைத்து கொண்டு அம்மா வீட்டிற்கு போவது சரிவராது. அப்படி போகிறவரும் இருக்கிறார்கள்.நான் கூறுவது பெரும்பாலான பெண்களை..

எதிர் அணியில் சொன்னார்கள் மாமியார் விஷயத்தில் கணவர் கேட்டவுடன் நாம் அழுதால் அவர் சமாதானம் ஆகிவிடுவார் என்று..நடுவரே இந்த சமாதானம் எல்லாம் நாம் வெளிநாட்டில் இருக்கும் வரை...விமானம் தரை இறங்கும் வரை...அப்புறம் நம்மளை கண்டு கொள்ளமாட்டார்கள்.நம்மிடம் சொல்லியே கூட்டிபோவார்கள்..ஏதாவது பிரச்சனை என்றால் நீ தான் விட்டு கொடுக்க வேண்டும் நான் பல வருஷங்கள் கழித்து என் அம்மாவை பார்க்கிறேன் என்று....இதிலிருந்தே தெரிகிறதே ஜெயிப்பது ஆண்கள் என்று..

நடுவரே இது எனது முதல் பட்டி...ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும். வ்ருங்காலங்களில் திருத்தி கொள்கிறேன்...மேலும் சில கருத்துகளுடன் வருகிறேன்..

Expectation lead to Disappointment

நடுவர் அம்மிணி,

நம்ம எதிர் அணி அம்மணி சொன்னாப்படி,ஏரோப்பிலேனுல ஏரும் போதே அவுரு சொல்லுவாராம,என்ர அம்மால நெம்ப நாலு கழிச்சு பார்க்கிரேன்,நீ தான் எப்பிடியாச்சும் அனுசரிச்சுப் போகனும்னு... ( கவனிங்க நடுவரே...எப்பிடியாச்சும்) இதுல என்கிட்டு அம்மிணி பொம்பிளை தோத்து போரா? நாளைக்கு நாலு பேரு மின்னாடி (மாம்ன்,அயித்த,நங்கையா,கொலுந்தியா தான் அந்த நாலு பேரு)இவரு நம்மல செயிக்கிரதுக்கு,முந்தானாலே தயவு பண்ணி உட்டு குடுத்துடுன்னு கொஞசி, ,கெஞ்சினதுனால ,போனப் போகுது மனுசன், அவிய ஆளுக மின்னாடி கெத்தா இருக்கட்டும்னு சரின்னு சொன்னா, நாங்க தோத்தாங்கோழிஸ் ஆயிடுவமா?நம்ம உட்டு குடுக்காட்டி இவியளுக்கு டெப்பாசிட் மட்டும் இல்ல வாழ்க்க பட்செட்டுலேயே வேட்டி,(சாரி,டங் ச்லிப்) இல்ல துண்டு உலுகும்னு தெரியாதா அம்மிணி? ஏம்மணி அந்த வடிவேலு படத்துல அடி வாங்கினது நானு ,அதனால கப்பு எனக்கு தான்னு சொல்லுவானல்லோ அது மாதிரி இருக்குது நீங்க சொல்ரது, உட்டு குடுத்தாலும் அந்த எடத்துல செயிக்கிரது பொம்பளைங்க தானுங்கோ..

அப்புற்ம் சொன்னாங்கோ இவிய மாமனுக்கு கம்பூட்டரு மின்னாடி உட்காந்த்தா கடுப்பு வரும்னு, ஏம்மினி அப்பாலே நீயு அடுப்பே பத்த வைக்காமே ,முக புத்தகதுல போயி எல்லாத்தேஉம் லைக்கிட்டே இருந்தினா கடுப்பு இல்லாம வேர என்ன வரும்னு நினைக்கிரெ? கம்பூட்டரு பார்க்கிர நேரத்துல மாமன பார்க்கலயே மயிலு ன்னு தான் மாமனுக்கு கடுப்பு கண்ணு,அந்த ட்ய்முல ஏதோ ரெண்டு வார்த்தை அப்பிடி இப்பிடி சொல்ரது தான்,அதப் போயி ஆணாத்க்கம், அவிய தான் செயிப்பாங்கன்னு சொல்லுவியா அம்மிணி,மாமனுக்கு தெரிஞ்சா நெம்ப வெசனப்படுவாஙல்லோ,என் சாமி, இனிமே அப்பிடி பேசக் கூடாது சரியா?

இன்னொரு அம்மிணி சொல்லுச்சு சின்ன விசியத்துக்கு உட்டு குடுத்துட்டு, பெரிய விசியத்துக்கு அவிய முடிவுலேயே னின்னு செயிப்பாங்கன்னு.செயிக்கிரத தான் பார்க்கோனுமோம், விசயம் கடுகா இல்ல மலையா ன்னு பார்க்கப்புடாது, என்ன நான் சொல்ரது,

( எமோஷ்னல் வீக்னஸ் கொண்டவர்களாகிய பெண்களை சமாளிக்கவே சில இடங்களில் அடங்கி போவதுபோல் நடிப்பர்.) அந்த எமோசனலு தான் என்னைக்கும் எங்க ஆயுதம்னு னான் சொல்ரென். எங்க ஆம்பிளைகல எமோசனலா அழுக சொல்லுங்க பார்ப்போம். முடியாது, கிளிசரின் போட்ட கூட அவியளுக்கு முடியாது.நம்ப அப்பிடியா ?

(நம்ம அறுசுவையில் நம்ம 1000 கணக்கான பெண்கள் இருக்கோம்... ஒரு ஆண் எப்பவும் இங்க தான் இருக்கார்... வந்து போறவங்களை விடுங்க... இருக்கவரை பார்ப்போம்...அவரு நமக்கு எப்பவுமே விட்டுக்கொடுத்து சப்போர்ட் பண்றாப்பலயே இருக்கும்... நாமலும் ”ச... நம்ம என்ன பண்ணாலும் தாங்குறாருய்யா... ரொம்ப நல்லவருன்னு” ;) இருப்போம். இதே இவரு... எதாச்சும் பிரெச்சனைன்னு ஆச்சுன்னு வைங்க... நம்மை லெஃப்ட் ரைட்டு வாங்கிபுடுவாரு.) அம்மிணி அவரு கிட்டக்க நல்லா கேளுங்க ,அவர ஊட்டுல ஆரு லெஃப்ட் ரைட்டு வாங்கி செயிக்க்ரதுன்னு...

கடைசியா நான் சொல்ரது என்ன அப்பிடின்னா பெரிசோ,சின்னதோ(அட விசயமுங்கோ) சண்டையில செயிச்சா கிடைக்கிரது ஈயமோ, பித்தாளையோ 95% செயிக்கிரது பெண்கள் தான், மிச்சம் 5% கூட நாங்க உட்டு குடுக்கரனால வந்த் வெற்றி தான்.அதனால எப்பொவுமெ ,எந்த சூழ்நிலைலுமே செயிக்கிரது பெண்கள்,பெண்கள்,பெண்கள்,தான் அப்பிடின்னு சொல்லி என் சின்ன வாதத்த (?)
முடிச்சுக்கிறேன்.

( நடுவரே இது எனது முதல் பட்டி...ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும்.)

( ஏனுங்க நடுவரே போன வாட்டி தந்த இளநீ இனிப்பே இல்லிங்கோ(உங்க தோட்டத்து காய் ஆக்கும்) அதனால குந்தாண்கிட்ட மாங்காயிம், இளநீல் கொஞ்சம் பனங்கல்கண்டும் போட்டு விரச குடுக்க சொல்லுங்கோ.அப்பிடியே தீர்ப்பும் நான் சொன்னப்படி போட்டுடுங்கோ.நான் புறவு வாரேன்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இது பட்டிய மேல தூக்கி விட, வந்து பட்டிய ஒரு கலக்கு கலக்குங்கப்பா, பாவமுல்லோ நம்ம நடுவர் அம்மினி, யாருமே வருலென்னு எப்பிடி அலுகுது பாருங்க. அது மட்டும் இல்ல,வச்சு இருகிர திண்பன்டம் எல்லாதெயும் தனியா ரவுன்டு கட்டலான்னு யோசிச்சுட்டு இருக்காபிடி, வாங்க அப்பு, பட்டிய ஒரு கை பார்க்க....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே எதிரணியில இருக்கிறவகளுக்கு ஒண்ணுமே புரியல போல. நம்மலாண்ட கெஞ்சி கேக்குறதையே அவிங்க செயிக்கரதா சொல்லுறாங்களே அததேன் சொல்லுதேன்.
அட அக்கா மக்கா, நாலு நாள் சண்டையில மண்ட ஒடஞ்சாலும் ஆஸ்பத்திக்கு கூட்டிட்டு போயி திரும்பி வரசொல அவுக ஏன் புள்ள என்கிட்ட கோவபடுத? நீ கோவங்காட்டுனா மச்சான் மனசு சில்லு சில்லா உடையுதேன்னு சொல்லுவாக.
என்னதேன் சண்டையா இருந்தாலும் மல்லிப்பூவ தலையில வச்சி அவுகளுக்கு பிடிச்ச பொடவைய கட்டுனா மச்சான் கோவமெல்லாம் கரஞ்சி ஓடிடாதா?
கண்ணு தண்ணீ மட்டும் எங்க ஆயுதமில்ல, இன்னும் இருக்கு. அட நாலு வார்த்த அன்பா பேசினா போதும் மாமா டக் அவுட்டு.
மாமா மனசு கல்லுனே வச்சிக்கிங்க. நாமதேன் எறும்பாச்சே, எறும்பூர கல்லும் தேயும். சரிதானே?
அப்புறம் சொன்னாங்க உப்பு பெறாத விசயத்துலதேன் நாம செயிக்கறோம் னு
யாருங்க சொன்னது வீட்டுல பல முக்கியமான முடிவுகள்ள பொம்பளைங்க சொல்றதாங்கோ நடக்குது, இன்னும் பல வீட்டுல முக்கிய முடிவுனு வரும்போது
மாமியாரும் மருமளும் ஒன்னாயிடுவாங்க. மாமந்தேன் தனியா பொலம்பனும்.
அப்புறம் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க! மாமியார் விசியத்துல மாமன் செயிக்கல, அங்கிட்டு மாமியாருன்னு இருக்கிற பொம்பளதேன் செயிக்கிறா!%
சமீபத்துல நெருப்பு மனுசி ஒருத்தவங்க இந்தியாவுக்கு அதுவும் கேரளாக்கு வந்துட்டு போனாங்களே, அவுக விசியத்துல செயிச்சது யாரு? ஆம்பிளையா? பொம்பளையா?
நம்ம வீட்டுல இருக்கிற மாமன் மச்சான வச்சி மட்டும் வாதாடதீங்க.
ஏன்னா தலைப்பு வீட்ட மட்டும் மனசில வச்சி இல்ல, நாட்டயும் மனசுல வச்சிதேன்.
நம்ம பிரதமரை வழிநடுத்துறதே நம் பொம்பள சமூகத்த சேர்ந்தவங்கதேன்.
இதையெல்லம் மனசுல வச்சி எதிரணியில இருக்கிறவங்க வாதாடுங்கோ..............
ய்ப்பா ரொம்ப களைச்சி போயிட்டேன். நாட்டாம யக்கா ஒரு எளனி கொடுக்க சொல்லுக, இல்ல பச்சதண்ணீயாவது கொடுக்க சொல்லுக.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நடுவர் அவர்களே, உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு ;( எப்படித்தான் எங்ககிட்ட இருந்து மீண்டு, ஜெயிச்சு வெளியே போக போறீங்களோன்னு... சரி மேட்டருக்குள்ளே நுழைஞ்சுடறேன்..

ஆண்கள் சின்ன சின்ன விஷயத்தை பெண்களுக்கு விட்டு தந்துட்டு, பெரிய விஷயத்துல உடாபிடியா நின்னு காரியத்தை முடிச்சு ஜெயிச்சுடுவாங்களாம்.. எதிரணில சொன்னாங்க. நடுவரே, ஒரு பெரிய கப்பல்ல ஒரு சின்ன ஓட்டையை போட்டு விடுங்களேன்.. அந்த ஓட்டையோடயே கப்பல் சல்லுனு பறந்து நம்ம வீட்டு வாசல்ல நம்மை இறக்கி விட்ருமா? ஒட்டை போட்ட நேரமே தண்ணி சல்லுன்னு பிச்சுட்டு வந்து கண்ணை மூடி திறக்கறதுக்குள்ளே கப்பலையே நிரப்பி, கடல்ல சாய்ச்சுறாது. ஆக அந்த சின்ன ஓட்டையால அந்தா பெரிய கப்பலுக்கே அந்த கதியென்றால், வாழ்க்கை என்னாகும் யோசிச்சு பாருங்க. சின்ன பிரச்சனைதான் பெரிய பூகம்பத்துக்கு அடிபோடும்னு ஆண்களுக்கு நல்லாவே தெரியும். அதனால் அவங்க கொஞ்சம் நெளிவு சுளிவோட போய் அங்கேயே அந்த சின்ன விரிசலை சிமெண்ட் போட்டு அடைச்சுடுவாங்க.

பெண்கள் ஆண்களை ப்ளாக்மெயில் செய்வதில பல விதங்கள் உண்டு. வாடிக்கையான பிரயோகம் கண்ணீர் விடுவது. அதே மாதிரி சமயம் பார்த்து கவுக்கறதுலயும் பெண்கள் கில்லாடிகள் தான். அந்த டேலண்டாலயே ஆண்களை அடிச்சு சாய்ச்சு வெற்றிகொடி கட்டிடுவாங்க. கணவன் வீட்டுக்கு ஒரே பையனாகி போய்விட்டால் மனைவிக்கு பல விதங்களில் கொண்டாட்டம் தான். கணவன் உடன் பிறந்த அக்கா, தங்கைகளின் பிள்ளைகள் திருமணத்தில் முன்னின்று செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் தாய்மாமன். அந்த சமயத்தில் மனைவியிடம் கோச்சுட்டு கல்யாண பந்தலில் தாய்மாமா தனியாக நிற்க முடியுமா? அந்த டைம்ல மனைவி கொடி உச்சியில் பறக்கும். அப்ப எதுவும் கோச்சுக்கவே முடியாது. எல்லா குடும்பங்களில் இதை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், ஒரு சில குடும்பங்களில் நடப்பதை பார்க்கலாம். குடும்பத்தின் மானம் போக கூடாது, பிள்ளைகள் மனம் வருந்த கூடாது என்பதற்காகவே அந்த ஆண் மகன் அனுசரித்து செல்வதாக நினைத்து தோற்று போவார். வயதான அம்மாவை மனைவி எங்கே வீட்டை விட்டு ஓட்டி விடுவாளோ என்ற பயத்திலும் அடங்கி போவார். தன்னிடம் சண்டை போட்டுவிட்டு தன் உயிரை போன்ற குழந்தைகளை தூக்கி சென்று விடுவாளோ என்ற பயத்திலும் விட்டு கொடுத்து செல்வார்.

இன்னும் நல்ல சம்பாத்தியம் மற்றும் படிப்பு கொண்ட பெண்ணாக இருந்தால், அந்த பெண்ணே வேண்டாம் என்று சொன்னாலும் அவரே எல்லாவற்றையும் விட்டுகொடுத்து வலுக்கட்டாயமாக தோற்பார். ஒவ்வொரு பண்டிகையின் போதும் பாருங்க ஜவுளிக்கடைகள் வெளியே அட்ரஸ் தெரியாம வந்த புள்ளைங்க மாதிரி பாவமா காவல் காத்துட்டு இருப்பாங்க கணவன்மாருங்க. ஜெயிச்சவங்களாங்க ஜவுளிக்கடை வாசல்ல நிப்பாங்க. அப்படி ஜெயிச்சிருந்தா அவங்க வீட்டு வாசபடியையே தாண்டி இருக்க மாட்டாங்களே. நான் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை இங்கே சொல்லியிருப்பேன் என நினைக்கிறேன். என் பின் பக்க வீட்டில் இருக்கும் பெண் சமையல் வேலை தவிர வேறெந்த வேலையும் செய்ய மாட்டார். பெண்ணின் புடவையை தோய்ப்பதில் இருந்து, பாத்திரம் தேய்த்து தோட்டம் பெருக்கி எடுப்பது, கடைக்கு செல்வது, ரேஷன் செல்வது எல்லாமே அந்த வீட்டின் ஆண் மகன் தான் செய்வார். இத்தனைக்கும் அவரும் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். காலையில் வேலைக்கு செல்லும் போதே எல்லா வேலையும் முடித்து விட்டு, மாலை வீடு திரும்பியதும் மிச்ச வேலைகளை செய்வார். நல்ல நாள் வந்தால் கோணி கிழியும் அவரூக்கு. பார்க்கும் நமக்கே பாவமாகி போய்விடும். மனுஷன் சாமான் உருட்டும் சத்தம் ஊருக்கே கேட்கும். பின்னே அவர் கோவத்தை எப்படி காட்ட முடியும். கோவப்பட்டா சாப்பாடு கிடைக்காதே.. வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே.. அய்யோ.. கோவபட்டுட்டேனே.. சோத்துல விஷம் வச்சுடுவாளேன்னு.." அந்த மாதிரி கதை தான் இவரும். இங்கே இவரை ஜெயிக்க விட்ருவாங்களா வீட்டம்மா? இங்கே தான் இப்படியென்றால் என் எதிர் வீட்டம்மா ஒரு பட்டி மேலே போனவங்க. அவங்க நல்ல உயரமா இருப்பாங்க.. வீட்டுக்காரர் சுமார் உயரம் தான். எதாவது வாக்குவாதம் வந்து முற்றி விட்டால், முதலில் அந்தம்மா ஜல்லிக்கரண்டியை தூக்கி அடிக்கும் வீட்டுக்காரர் மேல். அது ஒருமுறை அவர் மேல் பட்டு நல்ல காயத்தையும் ஏற்படுத்தியது. இன்னொரூமுறை சண்டை வந்தபோது சுட சுட டீயை கணவர் மேல் கொட்டி விட்டார். பெண்கள் அடிவாங்க மட்டும் தான் பிறந்திருப்பதாக ஒரு பக்கம் நினைச்சுட்டு இருப்போம். அவங்க அடி கொடுத்தா ஆண்கள் என்ன கடவுளே தாங்க மாட்டார்னு விஷயம் தெரிஞ்சவங்களுக்கு நல்லாவே தெரியும் ;)

நடுவர் அவர்களே, மீதியை நாளை தொடர்கிறேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்