பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

எதிர் அணியில் பெரிய கப்பல் ல சின்ன ஓட்டை விழுந்தா கப்பலே மூழ்கிடும் னு எல்லாம் ஒப்பிட்டு காட்டுனாங்க... உண்மை தான் நடுவரே ... ஆனா அப்போ அதை சரி பண்ணின நம்ம மாலுமி (கணவர் ) பெரிய அளவுல பிரச்சனை வந்தா முதல்ல அவங்க நாம தான் சரி பண்ணனும்(விட்டு கொடுக்கணும், தோற்கனும் ) னு எதிர் பார்க்கிறதை நம்மளை தான்.... ஆண்கள் எல்லாம் விவரமானவங்க... நோகாம நொங்கு எடுத்துட்டு, நம்மள நோகடிப்பாங்க ...

/*அக்கா, தங்கைகளின் பிள்ளைகள் திருமணத்தில் முன்னின்று செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் தாய்மாமன். அந்த சமயத்தில் மனைவியிடம் கோச்சுட்டு கல்யாண பந்தலில் தாய்மாமா தனியாக நிற்க முடியுமா? */

நடுவரே வாஸ்தவமான பேச்சு தான் நம்ம எதிர் அணி தோழி சொல்றது... நடுவரே இவங்களுக்கு எல்லாம் விசேச காலம் னா தான் கொண்டாட்டம்... ஆனா நம்ம நிலைமை ... சும்மா பிறந்த வீட்டை எட்டி பார்க்கணும் னா கூட புருஷன் தயவு, வருகை நமக்கு ரொம்ப முக்கியம்.. அப்போ இவுக அக்கா வீட்டு விஷேசத்துல முறுக்கிட்டு நின்னோம் னா நம்ம புருஷர்கள் நம்ம அம்மா வீட்டு பக்கம் எட்டி பார்ப்பாங்களா?? ஆனைக்கும் ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் னு சொன்னாங்க... பெண் பூனைகளுக்கு அந்த காலமும் இல்லையே நடுவரே...

ஜவுளி கடை வாசல் ல நிக்கிறவுக எல்லாம் தோற்று போயி நிக்கிறங்காண்ணு இப்போ தானா நம்ம எதிர் அணி தோழி சொல்லி தான தெரியுது...வீட்டுலே பட்ஜெட் போட்டு இவ்வளவு தான் என்னால தர முடியும்... இதுக்குள்ள எடுத்துக்கோ னு சொல்ல போயி தான நம்ம தோழிகள் அந்த பணத்துக்குள்ள நல்லாத எடுக்க கடை முழுக்க அலசி பாக்குறாங்க.. இதுல எங்க அவரு தோத்தாரு????

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//புரியலைங்களா நாட்டாமை அப்ப சரி. நான் சரியான ரூட்லதான் போறேன்.நீங்கன்னு இல்லே அதை என்னைத்தவிர யாருபடிச்சாலும் புரியாது. இது நம்ம ஸ்பெஷாலிடி.//
ரொம்ப நல்லா புரியுதுங்கோ!!
அடடே வீட்ல அண்ணாத்த சௌக்யமா இருக்காகளா???!!
அப்ப ஆண்களேனு சொல்ல வர்ரீங்க, இன்னும் உங்ககிட்ட இருந்து இந்த பட்டி நிறைய எதிர்பார்க்குது செயந்தி!!

இப்பத்திக்கு 1/2 கிலோ சி.வெங்காயம் மட்டும் பர்சல் பண்ணுங்கப்பா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாங்க மீனாள் உங்க வாழ்திற்கு நன்றி,
மீனாள் தெளிவா ஆண்களேனு வாதட வந்திருக்காங்க, எதிரணிகாரங்களே உஷாரா இருங்க இங்க பாயிண்ட் ஏறிக்கிட்டெ போகுது!!
///எதிர் அணியில் சொன்னார்கள் மாமியார் விஷயத்தில் கணவர் கேட்டவுடன் நாம் அழுதால் அவர் சமாதானம் ஆகிவிடுவார் என்று..நம்மிடம் சொல்லியே கூட்டிபோவார்கள்..ஏதாவது பிரச்சனை என்றால் நீ தான் விட்டு கொடுக்க வேண்டும்//
நான் அடிக்கிற மாதிரிஅடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழுகுனு!! இல்ல நிஜமாலுமே நான் அடிச்சாலும் பொறுத்து போகணும்னு...அப்படீனு நான் சொல்லல ஆண்களேனு வாதடற அணித்தோழிகள் சொல்றாய்களாம்.
//நடுவரே இது எனது முதல் பட்டி...ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும். வ்ருங்காலங்களில் திருத்தி கொள்கிறேன்.//
அக்காங் இத்தயேதான் நானும் நடுவரானதிலுருந்து சொல்லிட்டுத்திரியிருரேன், எனையும் சுட்டுங்கோ..

மீனாளுக்கு மிகவும் பிடித்த கோணப்புளிங்காயும், எளநீயும் கொடுத்தனுப்புங்கடி குந்தாணி,மந்தாணி..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//நாளைக்கு நாலு பேரு மின்னாடி (மாம்ன்,அயித்த,நங்கையா,கொலுந்தியா தான் அந்த நாலு பேரு)இவரு நம்மல செயிக்கிரதுக்கு,முந்தானாலே தயவு பண்ணி உட்டு குடுத்துடுன்னு கொஞசி, ,கெஞ்சினதுனால ,போனப் போகுது மனுசன், அவிய ஆளுக மின்னாடி கெத்தா இருக்கட்டும்னு சரின்னு சொன்னா, நாங்க தோத்தாங்கோழிஸ் ஆயிடுவமா?//
சுருக்கமா வீட்ல எலி வெளில புலினு சொல்லவர்றீங்க அப்படித்தானே இதுக்கு என்ன பதிலடி தரப்போறிங்க எதிரணித்தோழிகளே சீக்கிரம் வாங்க.
//அப்புற்ம் சொன்னாங்கோ இவிய மாமனுக்கு கம்பூட்டரு மின்னாடி உட்காந்த்தா கடுப்பு வரும்னு, ஏம்மினி அப்பாலே நீயு அடுப்பே பத்த வைக்காமே ,முக புத்தகதுல போயி எல்லாத்தேஉம் லைக்கிட்டே இருந்தினா கடுப்பு இல்லாம வேர என்ன வரும்னு நினைக்கிரெ?//
நீ கம்யூட்டர பாரு இல்ல காணாமயே போ ஆளவிட்டா போதுஞ்சாமினு சொல்றாங்க இல்லையா? ஆனா நேரத்துக்கு சமையல் ரெடியாயிரணும், ஆப்பிஸ் லீவுனாக்கூட நாங்க ஆப்பிஸ் போயே ஆகணும்னு, அந்தளவுக்கு வீட்ல பெண்ணாதிக்கம் அதிகம்னு சொல்லவர்றாங்க சுமிபாபு..

/// ///(நம்ம அறுசுவையில் நம்ம 1000 கணக்கான பெண்கள் இருக்கோம்... ஒரு ஆண் எப்பவும் இங்க தான் இருக்கார்... வந்து போறவங்களை விடுங்க... இருக்கவரை பார்ப்போம்...அவரு நமக்கு எப்பவுமே விட்டுக்கொடுத்து சப்போர்ட் பண்றாப்பலயே இருக்கும்... நாமலும் ”ச... நம்ம என்ன பண்ணாலும் தாங்குறாருய்யா... ரொம்ப நல்லவருன்னு” ;) இருப்போம். இதே இவரு... எதாச்சும் பிரெச்சனைன்னு ஆச்சுன்னு வைங்க... நம்மை லெஃப்ட் ரைட்டு வாங்கிபுடுவாரு.) அம்மிணி அவரு கிட்டக்க நல்லா கேளுங்க ,அவர ஊட்டுல ஆரு லெஃப்ட் ரைட்டு வாங்கி செயிக்க்ரதுன்னு...//////

இல்ல இந்த நடுவரு தெரியாமதான் கேட்கிறேன், தூங்கிற மணியாக்காரர எழுப்பி கந்தாயம் எவ்வளவுனு கேட்டா மாதிரி அடிக்கடி ஏன் இப்படி ஒரு பாய்ண்ட எடுத்து விட்டு வயித்துல புளியக்கரைக்கறீங்கோ???????!!!

////( ஏனுங்க நடுவரே போன வாட்டி தந்த இளநீ இனிப்பே இல்லிங்கோ(உங்க தோட்டத்து காய் ஆக்கும்) அதனால குந்தாண்கிட்ட மாங்காயிம், இளநீல் கொஞ்சம் பனங்கல்கண்டும் போட்டு விரச குடுக்க சொல்லுங்கோ.அப்பிடியே தீர்ப்பும் நான் சொன்னப்படி போட்டுடுங்கோ.நான் புறவு வாரேன்...////
தானம் கொடுக்கிற மாட்ட பல்லப்புடிச்சு பாத்த கதையாவுல இருக்கு, உப்பு இல்ல காரம் இல்லனு, ஏ குந்தாணி காதக்கொண்டா இப்புடி மாங்காய்ல ந்ல்ல செவப்பா செங்கல் பொடிய தூவி கொடுத்தனுப்படி.....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அட அக்கா மக்கா, நாலு நாள் சண்டையில மண்ட ஒடஞ்சாலும் ஆஸ்பத்திக்கு கூட்டிட்டு போயி திரும்பி வரசொல அவுக ஏன் புள்ள என்கிட்ட கோவபடுத? நீ கோவங்காட்டுனா மச்சான் மனசு சில்லு சில்லா உடையுதேன்னு சொல்லுவாக//
ஒடஞ்சது ஆரு மண்ட.. இப்ப இந்த நடுவரு மண்டக்குள்ள ஒண்ணுமே வேல செய்ய மாட்டேங்குது..
///மாமா மனசு கல்லுனே வச்சிக்கிங்க. நாமதேன் எறும்பாச்சே, எறும்பூர கல்லும் தேயும். சரிதானே?///
ரொம்பச்சரி, இன்னும் தேன்பூச்சி காதச்சுத்தி ஙொய்,ஙொய் னு பறக்கிறாப்பில, செங்கொளவி முகத்தசுத்தி வட்டமிடுறாப்புல, அதே கொளவி புழுவ கொத்துறாப்புல, எருதுக்கு புண்ணுனா காக்காய்கு கொண்டாட்டமாம், சதா புண்ண கொத்திக்கிட்டே இருக்குமாம் இப்புடியெல்லாம் கொடுமைய ஆண்கள் அனுபவிக்கிறாங்கோ, அதுனால ஜெயிச்சவங்க பெண்கள்னு சொல்லவர்றாங்களாம் ஷமீனா...
எதிரணி என்ன சொல்ல வரீங்க சீக்கிரம் வாங்க.. நல்ல குசியாத்தான் கீது சண்டையப்பாக்கா???!!!!

பொண்ணுங்களா இந்தக்கா கேகிறத சீக்கிரமா கொடுத்தனுப்புங்கடீ....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

////நடுவர் அவர்களே, உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு////
சத்தியமான வார்த்தைகள் ஆழம் தெரியாம ஆர்வக்கோளாறுல கால உட்டுப்போட்டேன். முன் வெச்ச கால நடுங்கிட்டே முன்னால வெச்சிருக்கேன், சரியா சொன்ன உங்களுக்கு ஒரு மூட்டை சி.வெங்காயம் பார்சல்....
////நடுவரே, ஒரு பெரிய கப்பல்ல ஒரு சின்ன ஓட்டையை போட்டு விடுங்களேன்.. அந்த ஓட்டையோடயே கப்பல் சல்லுனு பறந்து நம்ம வீட்டு வாசல்ல நம்மை இறக்கி விட்ருமா? ஒட்டை போட்ட நேரமே தண்ணி சல்லுன்னு பிச்சுட்டு வந்து கண்ணை மூடி திறக்கறதுக்குள்ளே கப்பலையே நிரப்பி, கடல்ல சாய்ச்சுறாது.////
இந்த மரைன் எஞ்சினீரிங்குனு ஒரு படிப்பு இருக்கே அது படிச்சவங்களுக்கு இப்ப வேலைவாய்ப்பு இல்லியாப்பா????!! சின்ன ஓட்டையால கண்டிப்பா கப்பலுக்கு ஆபத்துதே!!! அது நீங்க சொன்னா செரிதே!!

///சின்ன பிரச்சனைதான் பெரிய பூகம்பத்துக்கு அடிபோடும்னு ஆண்களுக்கு நல்லாவே தெரியும். அதனால் அவங்க கொஞ்சம் நெளிவு சுளிவோட போய் அங்கேயே அந்த சின்ன விரிசலை சிமெண்ட் போட்டு அடைச்சுடுவாங்க.////
பாருங்க கண்டிப்பா திருமணத்திற்கு முன்னால பெண்ணுக்கு சமைக்கத்தெரியுமானு கேள்விகேக்குறாப்புல, பையனுக்கு கொத்தனார் வேலை கண்டிப்பா தெரிஞ்சாதான் திருமணமேனு ஒரு கண்டிசன் போட்டே ஆகணும்பா, இல்லனா வேலை ஆகாது...
////கணவன் வீட்டுக்கு ஒரே பையனாகி போய்விட்டால் மனைவிக்கு பல விதங்களில் கொண்டாட்டம் தான். ////
மனைவி இஞ்சி தின்னாப்பில மூஞ்சிய வெச்சுக்கிட்டாலே பல மேட்டர் சால்வு சொல்லவாராங்களாம் காங்கோ கல்ப்பூ..
//// மனைவி கொடி உச்சியில் பறக்கும்.////
மனைவி கொடிபறக்க உடுறதுல அடிச்சுக்க ஆளே கிடையாது, கலர்கல்ரா மொட்ட மாடில, பால்கனி கைப்பிடிசுவர்ல வெய்யில் படற அனத்து இடத்திலும் கொடி கலர்கல்ரால பறக்க உடுவாங்க. சிலசமயம் கிழிஞ்சது,கிழியாத்துனு பேதம் பாக்காம பறக்க உடுவதில் வல்லுனிகள் இந்த மனைவிகள்னு கல்பூ சொல்லவராங்க அங்க எதாவது பாயிண்ட் தேறுமா ஓசிங்க ஆண்கள் அணி தோழிகளே!!!
///வயதான அம்மாவை மனைவி எங்கே வீட்டை விட்டு ஓட்டி விடுவாளோ என்ற பயத்திலும் அடங்கி போவார். தன்னிடம் சண்டை போட்டுவிட்டு தன் உயிரை போன்ற குழந்தைகளை தூக்கி சென்று விடுவாளோ என்ற பயத்திலும் விட்டு கொடுத்து செல்வார்.////
வாஸ்தவமான பாயிண்ட்தான் ஹோம்மெய்டு போட்டா 10000 குடுக்கணும் ....எனக்கு என்னத்த கொடுத்தீங்கனு இடையில பிளாக்மெயிலு பண்ணியே ஆண்கள பயமுறுத்தி வெச்சிருக்காங்கனு நான் சொல்லல கல்ப் சொல்றாங்க...
////ஒவ்வொரு பண்டிகையின் போதும் பாருங்க ஜவுளிக்கடைகள் வெளியே அட்ரஸ் தெரியாம வந்த புள்ளைங்க மாதிரி பாவமா காவல் காத்துட்டு இருப்பாங்க கணவன்மாருங்க. ஜெயிச்சவங்களாங்க ஜவுளிக்கடை வாசல்ல நிப்பாங்க///
ஆமாங்க இப்ப எல்லாம் ஜவுளிக்கடை வாசல்ல காவல்காரர் பக்கத்திலயே வரிசையா சேர் போட்டு வெச்சிருக்காங்க, பாப்கார்ன் கடையும் தெறந்து வெச்சிருக்காங்க, கைக்கொழந்தையோட விளையாட்டு காட்டிக்கிட்டு ஜாலியா பொழுது போக்கிட்டு இருக்காங்கங்க!!

///முதலில் அந்தம்மா ஜல்லிக்கரண்டியை தூக்கி அடிக்கும் வீட்டுக்காரர் மேல். அது ஒருமுறை அவர் மேல் பட்டு நல்ல காயத்தையும் ஏற்படுத்தியது. இன்னொரூமுறை சண்டை வந்தபோது சுட சுட டீயை கணவர் மேல் கொட்டி விட்டார். பெண்கள் அடிவாங்க மட்டும் தான் பிறந்திருப்பதாக ஒரு பக்கம் நினைச்சுட்டு இருப்போம். அவங்க அடி கொடுத்தா ஆண்கள் என்ன கடவுளே தாங்க மாட்டார்னு விஷயம் தெரிஞ்சவங்களுக்கு நல்லாவே தெரியும் ;)///
அய்யகோ பெண்ணினத்திற்கே பேரிழுக்காயிற்றே!! காதுல கேட்ட எனக்கே இந்த நிலைமைனா நேர்ல பாத்த உங்களுக்கும் தங்கள்வீட்டாருக்கும் எப்படி இருந்திருக்கும்..
என்ன கொடுமை சாமி இது???!!!
சற்று மர நிழலில் இளைப்பாறிவிட்டு அடுத்த பதிவினை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன் கல்பூ. மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு தாங்கள் விரும்பிய பொருளை உண்ணுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறது இந்தப்பட்டி... செல்லங்களா அக்காவ கவனிங்க..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கார்த்திகா
///ஆனா அப்போ அதை சரி பண்ணின நம்ம மாலுமி (கணவர் ) பெரிய அளவுல பிரச்சனை வந்தா முதல்ல அவங்க நாம தான் சரி பண்ணனும்(விட்டு கொடுக்கணும், தோற்கனும் ) னு எதிர் பார்க்கிறதை நம்மளை தான்.... ஆண்கள் எல்லாம் விவரமானவங்க... நோகாம நொங்கு எடுத்துட்டு, நம்மள நோகடிப்பாங்க ..///
எங்கியாவது கரை கண்ணுக்கு தட்டுப்படுதா??? கலங்கரை விளக்கம் ஒளி கண்ணுக்கு தெரியுதானு கண்ணாடி வெச்சு பாப்பாங்க, இல்ல எதாவது மரக்கட்டை பிடிச்சாவது கரை ஒதுங்கிடுவாங்க அப்பிடினு நாஞ்சொல்லுல நம்ம கார்த்திகா சொல்றாய்கோ..
//// அப்போ இவுக அக்கா வீட்டு விஷேசத்துல முறுக்கிட்டு நின்னோம் னா நம்ம புருஷர்கள் நம்ம அம்மா வீட்டு பக்கம் எட்டி பார்ப்பாங்களா??//
சரியான பாயிண்ட புடிச்சீங்கப்பா!!!, நீ வேணா காலம்பூரா அம்மா ஊட்லயே கைமுறுக்கு சுத்தி பொழச்சுக்கோனு சொல்வாங்க... பெண்களே அணி கவனிங்க நல்லா...
///ஜவுளி கடை வாசல் ல நிக்கிறவுக எல்லாம் தோற்று போயி நிக்கிறங்காண்ணு இப்போ தானா நம்ம எதிர் அணி தோழி சொல்லி தான தெரியுது...வீட்டுலே பட்ஜெட் போட்டு இவ்வளவு தான் என்னால தர முடியும்... இதுக்குள்ள எடுத்துக்கோ னு சொல்ல போயி தான நம்ம தோழிகள் அந்த பணத்துக்குள்ள நல்லாத எடுக்க கடை முழுக்க அலசி பாக்குறாங்க.. இதுல எங்க அவரு தோத்தாரு????\\\
அதானே இதுகூடவா தெரியில பெண்கள் அணியினரே????????!!!!!
அப்படியே ஜவுளிக்கடை கூட்டத்துல தொலைஞ்சு போய்டமாட்டாங்களானு ஏங்கிப்போயி வாசல குறுகும் நெடுக்கும், குட்டி போட்ட பூனையாட்டம் கைய குத்திக்கிட்டே நடக்கிறாங்களாம், இது நாஞ்சொல்லுல....

அம்மாடி மந்தாணி.குந்தாணி பனங்கிழங்கும், குச்சிக்கிழங்கும் கொடுத்தனுப்புங்கடி..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே.... அப்பப்ப எட்டி பார்க்குறேன்னு கோவிச்சுக்குடாதீங்க ;) மண்டையில் பல்பு வெளிச்சம் தெரியும் போதெல்லாம் வந்துடுறேன்.

நடுவரே... சண்டை ஜெயிப்பது பெண்களேன்னு சொல்லும் மக்களை கேட்டு சொல்லுங்க... எத்தனை ஆண்களை கெட்ட பழக்கங்களில் இருந்து பெண்கள் மீட்டாங்கன்னு ;) தம்மும், தண்ணியும் அடிச்சா ஏன்னு கேள்வி கேட்டு அழ தான் முடியும் இவங்களால.... அவரு ஜம்முன்னு என் இஷட்ம் நீ யாருடி கேட்கன்னு தூக்கி போட்டு நாலு மிதி வேணும்னா மிதிப்பார். எதிர்த்து அடிக்கவும் உடம்புல பலமில்லாத ஜீவனுங்க மனைவி. அப்பறம் எங்குட்டு இவங்களை ஜெயிக்க???

அடியோட விட்டா பரவாயில்லையே... ஒரு சிலர் அம்மா வீட்டுக்கும் துரத்தி விடுறாங்க... கடைசியில் அங்க அட்வைஸ் பண்ணி “எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் புருஷன் கூட வாழுறது தான்மா ஒரு பொண்ணுக்கு அழகு”னு இங்கையே துரத்தி விட்டுடுவாங்க. சொல் பேச்சை கேட்டு அடங்கலன்னா ஆண்கள் கை ஆளும் அருமையான ஆயுதம் இது.... முன்பெல்லாம் பொண்ணுங்க கோச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போவாங்க... இப்பலாம் யாரும் போறதில்லை... போனா இது தான் சாக்குன்னு இவங்க டைவர்ஸ் நோடீஸ் அனுப்பிபுடுவாங்க. அவங்களூக்கென்ன நடுவரே... ஒன்ன துரத்தினா அடுத்த பொண்ண கட்டிக்கலாம்... பொண்ணுங்க சட்டுன்னு இன்னொரு கல்யாணம் பண்ண முடியுமா??? ஆண்கள் 4 பொண்ணை கட்டினாலும் பேசாம இருக்க உலகம், பொண்ணு டைவர்ஸ் / விதவையா இருந்து இன்னொரு கல்யாணம் பண்ணா கூட பிடிங்கிடுவாங்க பிடிச்சு. ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த உலகம்... இப்படி தனியா வாழ கூட முடியாம அடங்கி போகும் மனைவிகள் தானே அதிகம்... அப்பறம் எங்க ஜெயிக்கிறது???

அவ்வளவு ஏன் நடுவரே... கணவர் தான் எதாச்சும் நம்மகிட்ட பெர்மிஷன் கொடுதிருப்பார்... ஆனா மாமியார் நம்ம பண்ணோம்னு நம்மை பிடிச்சு சந்த்தம் போடுறாங்கன்னு வைங்க... வந்து “நான் தான் சொன்னேன்”னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்... சரியா கழண்டுக்குவாங்க நம்மை மாட்டிவிட்டுட்டு. எவ்வளவு பிரெச்சனை வந்தாலும் “சாரி”னு கூட சொல்ல பல ஆண்கள் நினைப்பதில்லை நடுவரே... எவ்வளவு நம்மை நோகடிச்சாலும் சரி. மாசம் ஆனாலும் பேச இருக்க ஈகோ. நாம அவங்க ஒரு நாள் சாப்பிடலன்னா பதரிப்போய் கோவத்தை விட்டுட்டு போனை போட்டு கேட்போம்... சாப்பிட வரலயா... நம்மை பேச வெச்சுட்டதா அவங்களும் பந்தா பண்ணிக்கலாம். ஆனா சமைச்சு வெச்சுட்டு வீட்டில் பட்டினியா இருக்கும் மனைவியை கண்டுக்காம அஃபீஸ் போவாங்க பாருங்க.... எங்க இருந்து நடுவரே நாமலாம் ஜெயிக்க???

எதிர் அணி சொல்லும் அழுகை எனும் ஆயுதம் வருஷத்தில் 1 முறை இருந்தா கை கொடுக்கும்... வாழ்க்கையே போராட்டமா தினம் தினம் சண்டையா இருக்கவங்களூக்கு???? அழுது பாருங்க... அழ ஆரம்பிச்சதும் வீட்டில் இருந்து கிளம்பி போயிடுவாங்க... டேன்க் ஒப்பன் பண்ணிட்டாய்யான்னு ;) ஆயுதம் எல்லாம் எப்பவும் கை கொடுக்காது நடுவரே. அப்பறம் எங்குட்டு நாம ஜெயிக்க???

சரிங்கோ... போய் சமையல் வேலையை முடிச்சுப்புட்டு வாரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே எல்லார்க்கும்,எல்லாத்தையும் பார்சல் பன்னி அமிச்சிராதீங்க, எனக்கும் கொஞ்சம் எடுத்து வயுங்க என்னோட பங்கு இருக்கா காலி ஆயிடுச்சா

ஆண்களுக்கு சண்டை பிடிக்கறதே பிடிக்காது நடுவரே.. இந்த பெண்கள் தான் தேவை இல்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சண்டை பிடிச்சு அவர்களை டார்ச்சர் பன்னுவாங்க. சண்டைன்னு வந்தால் ஆண்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு சண்டைய நிறுத்த வேண்டி விட்டு கொடுத்து போவாங்க. ஆனால் பெண்கள் இருக்காங்களே அவ்வளவு சீக்கிரம் ஒரு பிரச்னையை விடவே மாட்டாங்க, அந்த சண்டையின் முடிவு அவீங்களுக்கு சாதகமா வர வரைக்கும், போட்டு ஆண்கள வாட்டி எடுத்துருவாங்க.

ஒரு விஷயமா சண்டை பிடிச்சுட்டு இருக்கும் போது, அப்படியே திடிர்ன்னு ட்ரேக் மாறி எப்பவோ நடந்த விஷயத்தை எல்லாம் , போட்டு கிளறி ஆண்கள ஒரு வழி பண்ணிருவாங்க நடுவரே. ஆண்கள் தான் ரொம்ப ரொம்ப பாவம், கடைசியில் ஏதும் பேசாமல் அப்படியே அமைதியா இருந்துருவாங்க. இதா சாக்குன்னு எவ்வளோ கும்ம முடியுமோ அவ்ளோ கும்மி எடுத்ருவாங்க.

அப்பாடா எப்படியோ ஒரு பாய்ண்டு சொல்லிட்டேன் :)

என்னடா இந்த பொண்ணு தேஞ்சு போன டேப்ரிகாடு மாதிரி ஒரே பாயின்டிவே சொல்லுதேன்னு நினைக்காதீங்க நடுவரே. என்ன பன்றது கொஞ்சமாவது எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் கூட ஏதாவது பாய்ண்டு வரும். இப்படி எதுவுமே இல்லாமல் எப்படி நடுவரே புதுசா புதுசா பாயின்ட் வரும்? என்ன பன்றது ? கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிகோங்க. நாளைக்கு கண்டிப்பா வேற நல்ல பாயிண்டா எங்க அம்மா ,சித்தி, அத்தை எல்லார்துகிட்டயும் ஒரு சர்வே எடுத்துட்டு ஒரு பெரிய பதிவோட வரேன். அதுவரை கொஞ்சம் பொறுத்தருளுங்கள் நடுவரே. :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்