பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

//அடடே வீட்ல அண்ணாத்த சௌக்யமா இருக்காகளா???!!//ஜெயிக்கப்பொறந்தவங்க சௌக்யத்திற்கென்ன குறை. :-0

ஆனா பாருங்க நாட்டாமை நலம் விசாரித்தல் பட்டிவிதிமுறைகளுக்கு புறம்பானது ஹி..ஹி

//ஆண்களுக்கு சண்டை பிடிக்கறதே பிடிக்காது நடுவரே//சரியாத்தான் சொன்னங்க எதிர் அணியினர். ஆண்களுக்கு சண்டை பிடிக்காது ஆனா
ஜெயிக்கமட்டுமே பிடிக்கும்.

//தன்னையும், தன் பெற்றோரையும் ஏளனமாக பேசிய, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த, தனியார் கல்லூரி பேராசிரியர் போலீசில் சரணடைந்தார்// இது லேட்டஸ்ட் நியூஸ்.

வாய்பேசி ஜெயிப்பதா பீலா விடும் பெண்களே கவனிக்க.மந்திரி ஆலோசனைகளைச் சொல்லலாம். ராஜா மேலே ஏறி நாந்தான் ஜெயிப்பேன்னு சொன்னா..ஹி..ஹி இதுக்கு மேலே நான் சொல்லனுமா?

அன்பு நாட்டாமை,
மனுஷன் பேசவும் சிந்திக்கவும் ? தெரிந்த மிருகம். எந்த மிருக ஜாதியில் பெண் ஆணை ஆதிக்கம் செய்யுது. ராஜா சிங்கத்தாரை எடுத்துக்கோங்க.பெண் சிங்கம் கஷ்டப்பட்டு இரையை அடித்தா சிங்க ராஜா சாவகாசமா பதறாம நடந்து வந்து சாப்பிடுவார். மிச்சம் இருப்பதுதான் அம்மணி சிங்கத்துக்கு. கிட்ட போய் சண்டைபோட்டு ஜெயிக்கச்சொல்லுங்க பார்ப்போம்.இந்த அடிப்படையான ஆணாதிக்ககுணம் எல்லா இனங்களிலும் உண்டு. அடக்கி ஆண்டு ராஜாங்கம் பண்ண வெளியே பெருசா எதும் இல்லைனாலும் வீட்டில சம்சாரமாவது இருக்கே.

இயற்கை விதிப்படி பெண்களுக்கு சகிப்புத்தன்மையும், சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைக்கும் திறனும் அதிகம். ஆண்களுக்கோ ஆளுமை குணம் அதிகம். இதில் எங்கே பெண்களுக்கு அடங்கி போகும் ஆணினம்.மதுரை மீனாட்சிபோல விதிவிலக்குகள் உண்டு. ஆனா அதையே விதிமுறையா எடுத்துக்கக்கூடாது .இப்போ சொல்லுங்க பெண்கள் தான் சண்டையில் ஜெயிப்பது என்று சொல்வது போன் ஒயர் பிஞ்சி ஒருவாரமாச்சு கதையாட்டம் இருக்கு.ஹையோ ... ஹையோ

ஆண்கள் பெண்களை ஜெயிக்கவிட்டு வேடிக்கைபார்ப்பது எல்லாம் திருமணவாழ்வின் ஆரம்ப கால காதலில். அப்புறம் சண்டையில் ஜெயிக்கிறேன்னு கோதாவில் பெண்கள் இறங்கினால் வெற்றி கிடைக்காது. சக்களத்திதான் கிடைப்பாள்.இது எங்கம்மா வீட்டு தெருவில் உள்ள வீட்டில் நடந்த உண்மை சம்பவம்.பெண்புத்தி பின்புத்தின்னு சொல்வாங்களே. சீக்கிரமே உணர்ச்சிவசப்படுவதும் பெண்ணினமே. சண்டையில் தாங்களே ஜெயிப்பதா கொக்கரிச்சிட்டுடிருக்கிற பெண்டீரே இதை மனசில் வைங்க.

என் பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படுவதில்லை.Chat Room க்கு உள்ளே கூப்பிட்டு கும்முவது, வேற ID யில் வந்து தாக்குவது இதெல்லாம் வேண்டாம். ஜெயந்தி ஒரு அப்பாவி.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

கொர்,கொர், ப்ளிர்,ப்ளிர், ர்,ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,ற்ற்ற்ற்ற்ற்ர்ர்ர்
அடா அடா நாட்டமை அய்யா, வல்லினம்,மெல்லினம்,இடையினம் வெச்சு கொறட்டை உட்டது போதும் எந்திரிங்க. இப்பிடி காலைல வெகுநேரம் தூங்கறது ஒடம்புக்கு ஆகாது. எந்திரிங்க சீக்கிரம்.
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ், மண்ணாங்கட்டி நீயாட எழுப்புனது ஆவ்வ்வ்வ்வ்வ்!!
ஆமா நாந்தேன் எழுப்புனே எந்திருச்சு மூஞ்சி கழுவிட்டு வாங்க, சலவாய் வடிஞ்சு ,கெடக்குது பாருங்க. எல்லாரும் வந்து வெய்ட்டீஸ் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரம் மேக்கப்போட்டு கெளம்புங்க...
ஜல்,ஜல்,ஜல் ஹோவ்வ்வ்வ்ஹோவ்வ்வ் ஆலமரம் வ்நதாச்சு எறங்குங்க நாட்டமை ஐயா!! அப்பிடியே போய் சேர்ல உக்காருங்க மெதுவா, வயசான காலத்துல எதுக்கு உங்களுக்கு இந்த வேல, வீட்ல அம்மா கோச்சுக்கிறாங்க.. உங்கய்யாவுக்கு எதுக்குடா இந்த வேலைனு..பாத்து உக்காருங்க...
ஐய்யோ அம்மா???!!!!
என்னாச்சுங்கய்யா????
ஆரடா சேர்ல கத்தாழ முள்ள கொத்தோட வெச்சது,

ஹீஹீஹிஹி,அது வந்துங்கய்யா எப்பவுமே நடுநிலமையாளர்களுக்கு எதிரிகள் சாஸ்திங்கய்யா.. எடுத்து போட்டுட்டு உக்காருங்க...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//மண்டையில் பல்பு வெளிச்சம் தெரியும் போதெல்லாம் வந்துடுறேன்.//
ஏப்பா மண்ணாங்கட்டி அதோ தூரத்துல என்னமோ ரைட் வெளிச்சம் தெரியுதே அது என்றா அது .. அய்யா நீங்க நெத்திமேல கைகண்ணாடி வெச்சு பாருங்க, ஆபரேசன் பண்ணுன கண்ணுல ஓவரா வெளிச்சம் பட்டா கண்ணுக்கு ஆவாது. இருங்க நாம்பாக்கிரேன்!! ஐயா,ஐயா அது நம்ம வனிதாம்மா வந்திருக்காங்கய்யா. நீங்க எதுக்கும் ஸ்டெடியா உக்காருங்கோ...
////எத்தனை ஆண்களை கெட்ட பழக்கங்களில் இருந்து பெண்கள் மீட்டாங்கன்னு ;)
ஒரு வார்த்தை சொன்னாலும் மண்டைல நச்சுனு ஆணி அடிக்கிறமாதிரி சொல்லிட்டீங்க.. ஆனா இதுக்கு பெண்களே அணி பதில் சொல்லமுடியும்னு நினைக்கிறீங்க..

தம்மும், தண்ணியும் அடிச்சா ஏன்னு கேள்வி கேட்டு அழ தான் முடியும் இவங்களால.... அவரு ஜம்முன்னு என் இஷட்ம் நீ யாருடி கேட்கன்னு தூக்கி போட்டு நாலு மிதி வேணும்னா மிதிப்பார். எதிர்த்து அடிக்கவும் உடம்புல பலமில்லாத ஜீவனுங்க மனைவி. அப்பறம் எங்குட்டு இவங்களை ஜெயிக்க???
கண்டிப்பாக
அந்த தம்முலயே சூடு வக்கவும் தயங்க மாட்டாங்கனு நான் சொல்லல வனி சொல்றாங்க..
//// “எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் புருஷன் கூட வாழுறது தான்மா ஒரு பொண்ணுக்கு அழகு”னு இங்கையே துரத்தி விட்டுடுவாங்க.////
கள்ளக்குடிச்சாலும் கணவன், ஃபுல்லக்குடிச்சாலும் புருசன் அவங்கூடவே இருன்னு சொல்லிருவாங்களாம்....
///அவங்களூக்கென்ன நடுவரே... ஒன்ன துரத்தினா அடுத்த பொண்ண கட்டிக்கலாம்... 4 பொண்ணை கட்டினாலும் பேசாம இருக்க உலகம்,////
அந்த காலத்து ராஜாக்களோட அரண்மனைல 1000 கணக்கான பெண்களின் கண்ணீர் வெயில் படாமலே காய்ஞ்சு போச்சாம், சரித்திரம் சொல்லுதுனு நம்ம வனி சொல்றாங்க...
////கணவர் தான் எதாச்சும் நம்மகிட்ட பெர்மிஷன் கொடுதிருப்பார்... ஆனா மாமியார் நம்ம பண்ணோம்னு நம்மை பிடிச்சு சந்த்தம் போடுறாங்கன்னு வைங்க... வந்து “நான் தான் சொன்னேன்”னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்... சரியா கழண்டுக்குவாங்க////
சத்தம் கேட்ட உடனே கை செல்பேசி எடுக்கும் அழைக்காத காலுக்கு அழகா பதில் பேசிட்டெ நடைய கட்டிருவாங்கனு நாஞ்சொல்லுல சாமி!!!!!

/////எவ்வளவு பிரெச்சனை வந்தாலும் “சாரி”னு கூட சொல்ல பல ஆண்கள் நினைப்பதில்லை ///
சாரி எடுக்க போகலாம்னு சொன்னாக்கூட நமக்குதான் சாரி சொல்றாங்கனு நாம நினைப்போம்னு, பல பேர் அழகா புடவைனு தமிழ்லதான் சொல்வாங்க..அதுவரைக்கும்,ஈஸு,வாஸுனு பேசிட்டிருப்பாங்க அப்படினு சொல்ல வர்ரீங்க இல்லியாப்பா???!!
////எங்க இருந்து நடுவரே நாமலாம் ஜெயிக்க???///
இப்படியெல்லாம் மனம்தளரக்கூடாதும்மா ,மனச பாதிக்குது உங்களோட இந்த கேள்வி நானும் ஓசனை பண்டி பாக்கிறேன், பெண்களே அணி இத கவனிச்சீங்களா??
///எதிர் அணி சொல்லும் அழுகை எனும் ஆயுதம் வருஷத்தில் 1 முறை இருந்தா கை கொடுக்கும்...///
சீரியல் பாத்துட்டு அலரீனு நெனச்சேனு சொல்வாய்களாம், பாக்றது பூரா அவிங்க பட்டபேரு நமக்குனு வனி குமுறிப்போய் சொல்றாங்க..

இளகின மன்சுள்ள உங்களுக்கு வேர்க்கடலையும், குச்சிக்கிழங்கும் 2மூட்டை பார்சல்.. மண்ணாங்கட்டி அப்பிடியே இளநி ஒண்ணு சீவிக்கொடுத்துருப்பா..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவோட வாங்க பட்டுனு அள்ளுங்க, கூவ்ல வராம இப்பிடி இடயில வரப்புடாது
உங்களுக்கான பொருளு பத்திரமா சாக்கு மூடி போட்டு வெச்சிருக்கேன்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

///சண்டைன்னு வந்தால் ஆண்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு சண்டைய நிறுத்த வேண்டி விட்டு கொடுத்து போவாங்க. ஆனால் பெண்கள் இருக்காங்களே அவ்வளவு சீக்கிரம் ஒரு பிரச்னையை விடவே மாட்டாங்க, ///
கன்னித்தீவு கதையோட மறு ஒளிபரப்புனு சொல்லவராங்க நம்ம சுதா..
///அப்பாடா எப்படியோ ஒரு பாய்ண்டு சொல்லிட்டேன் :)///
1பாயிண்டு எல்லாம் பத்தாது இன்னும் எதிர்பார்க்கிறது இந்த பட்டி தங்களிடமிருந்து..
///எங்க அம்மா ,சித்தி, அத்தை எல்லார்துகிட்டயும் ஒரு சர்வே எடுத்துட்டு ஒரு பெரிய பதிவோட வரேன். அதுவரை கொஞ்சம் பொறுத்தருளுங்கள் நடுவரே.///
கண்டிப்பா எடுங்க...

பாவம் என்னய விட கொஞ்சம்தான் வயசுல பெரிய பொண்ணா இருக்கு கேட்டத கொடுத்தனுப்புங்க மந்தாணி.குந்தாணி....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

///பெண் சிங்கம் கஷ்டப்பட்டு இரையை அடித்தா சிங்க ராஜா சாவகாசமா பதறாம நடந்து வந்து சாப்பிடுவார். மிச்சம் இருப்பதுதான் அம்மணி சிங்கத்துக்கு.///
ஒருவேளை அந்த இரைல பெண்சிங்கம் சாப்பிட்டுச்சுனா ஆண்சிங்கம் அந்த இரைய வாயில வைக்காதாம், ஆனா ஆண் சாப்பிட்ட இலையில பெண்சாப்பிடலாமாம் அப்ப்டினு செய்ந்தி சொல்றாங்க..

///ஆண்கள் பெண்களை ஜெயிக்கவிட்டு வேடிக்கைபார்ப்பது எல்லாம் திருமணவாழ்வின் ஆரம்ப கால காதலில்.////
சரியான பாயிண்ட சரமாரியா சொல்றாங்க பெண்களே அணி ஓடிவாங்க..
ஆண்களே ஜெயிப்பர் என செயந்தி அறைகூவல் விடுத்துப்போயிருக்காங்க....

///என் பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படுவதில்லை.Chat Room க்கு உள்ளே கூப்பிட்டு கும்முவது, வேற ID யில் வந்து தாக்குவது இதெல்லாம் வேண்டாம். ஜெயந்தி ஒரு அப்பாவி.///
அடுத்த பதிவிடும்போது கைப்பையில பொடிடப்பாவை புடுங்குமாறு மந்தானிக்கும்,குந்தாணிக்கும் உத்தரவிடப்பட்டுளது. தோழிகளே ஆரும் பொடிவகைகள் கொண்டுவரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது...

சொன்ன சொல் காப்பாற்றியவருக்கு 10கிலோ சி.வெங்காயம் பரிசாக கொடுப்பதில் இந்த பட்டி பெருமிதம் அடைகிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இங்கே நிறைய காயம்பட்டதுனாலே என் பாதுகாப்புக்கு ஒரு வரி எழுதுனேன். நாட்டாமைக்கு ஒரு வேண்டுகோள் என் பதிவை படிக்கும் போது அந்த மஞ்ச கண்ணாடிய கொஞ்சம் கழட்டி வெச்சுடுங்கோ !

நாட்டாமை,

பெண்கள் பாதுகாப்பு சட்டம்னு பலது இருக்கே. சண்டயில் ஜெயிக்கறவங்க எதுக்கு சட்டத்தைப்போட்டு பாதுகாப்பு தேடறாங்க.சண்டையில் எப்போதும் ஜெயித்து தன் பலத்தை நிரூபித்தவர்களுக்குத்தான் ரயிலில் பெண்கள் வகுப்பு, பேருந்தில் பெண்கள் இருக்கைன்னு இருக்கா?

தனது திறமையாலும், அறிவாலும் எத்தனையோ சாதித்த பெண்கள் தன் துணையின் ஈகோ முன்னால் சிக்கி தவிப்பதை செய்திதாளில் படித்திருக்கிறேன்.பொதுவான போட்டி என்று வந்தால் எந்த ஆணையும் வெல்லும் வல்லமை பெண்ணுக்கு உண்டு. ஆனால் வீட்டுக்குளே, நான் உனது அடிமை என்று சொல்லாவிட்டாலும் உங்களுக்கு மேலே இல்லை என்று புரியவைக்கணும். உடல் உறுதியால் ஆணும் உள்ள உறுதியால் பெண்ணு உயர்ந்தவர்கள். ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நியாய தர்மம் பார்க்காமல் ஈகோவை நிலைனாட்டத்தானே சண்டையே நடக்குது.

அப்போ யாரு ஜெயிக்கிறது. ஆண்தானே?

இத்துடன் என் வாதத்தை முடிச்சிக்கிறேன். நான் இந்தியா போக பிஸியா இருப்பதால் பொங்கல் முடிஞ்சி வாரேன்.பட்டிக்கல்ல பட்டிமுடிவைப்பார்க்க.

அப்புறம் நாட்டாமை 500 ரூபா வெங்காயத்துக்கு 5000 ரூபா ஃப்ளைட் சார்ஜ் கேட்கிறாங்கோ. என் வெங்காயத்தை எல்லோருக்கும் பிரிச்சிகொடுத்துடுங்கோ. எதுவும் சாப்பிடாம போறியே ஏன் கேட்கறீங்களா? நான் ஆஸ்துமா பேஷண்ட். எனக்கு குளிர் காலம் ஒத்துக்காது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

////பெண்கள் பாதுகாப்பு சட்டம்னு பலது இருக்கே. சண்டயில் ஜெயிக்கறவங்க எதுக்கு சட்டத்தைப்போட்டு பாதுகாப்பு தேடறாங்க.சண்டையில் எப்போதும் ஜெயித்து தன் பலத்தை நிரூபித்தவர்களுக்குத்தான் ரயிலில் பெண்கள் வகுப்பு, பேருந்தில் பெண்கள் இருக்கைன்னு இருக்கா?///
அதானே சரியா சொன்னீங்க...
//// உடல் உறுதியால் ஆணும் உள்ள உறுதியால் பெண்ணு உயர்ந்தவர்கள். ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நியாய தர்மம் பார்க்காமல் ஈகோவை நிலைனாட்டத்தானே சண்டையே நடக்குது.////
கரக்டா சொன்னீங்க செயந்தி...

நீங்க சொன்னதும் சரிதான்... மந்தாணி,குந்தாணி அக்கா சொல்றபடியே கேளுங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே குடிக்கும் கணவன்மார்கள் பலரை திருத்தி அவர்களோடு சந்தோசமாக வாழும் பெண்களே நம் ஊரில் அதிகம். இப்போவெல்லாம் குடி அப்படீங்கறதே ஏதோ தகுதியாகி போச்சு. இப்போ வர சினிமாவா இருக்கட்டும்,சீரியலா இருக்கட்டும் குடிக்காத ஹீரோவ பார்க்க முடியுதா? அது ஏங்க இப்போல்லாம் பொம்பளைங்களே குடிக்கிறாங்க.
அப்பறம் எதிரணியில சொல்றாங்க, பெண்ணுக்கு தனி இருக்கை எதுக்கு? பெண்கள் பாதுகாப்பு சட்டம் எதுக்குனு? அதேல்லாம் நாம ஜெயிக்கறதுக்கு உதவியா தான் இருக்கு. பெண்ணுக்குனு முன்னுரிமை கொடுத்துதான் தனியிருக்கையே தவிர ஆணுக்கு பயந்து அல்ல. சில ரோமியோக்கள் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளும் போது அவர்களை பிண்ணி பெடலெடுப்பதும் நம்ம பெண் போலிஸ் தானுங்களே?
அப்புறம் பெண் புத்தி பின் புத்தின்னு சொன்னாங்களே, அதுக்கு அர்த்தமே நிறைய பேருக்கு தெரிவதில்லை. பெண் மட்டுமே பின்னாடி வரும் அதாவது எதிர்காலத்தில் வருவதை பற்றி யோசித்து முடிவெடுப்பாள் என்று அர்த்தம்.
நிறைய பழமொழிகளை இப்படித்தான் ஆண்கள் தனக்கு சாதகமாக திரித்து வைத்துள்ளனர்.
ஆணதிக்கம் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்போஇல்லை. அதெல்லாம் நமக்கு முந்தின தலைமுறையோட முடிஞ்சிபோச்சு.
இப்போ எல்லா துறைகளிலும் பெண்ணே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறாள்.
ஒருபோதும் ஆண் ஜெயிக்க பெண்கள் விட்டுகொடுத்து போய்விடுவது இல்லை.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

\\\\குடிக்கும் கணவன்மார்கள் பலரை திருத்தி அவர்களோடு சந்தோசமாக வாழும் பெண்களே நம் ஊரில் அதிகம். இப்போவெல்லாம் குடி அப்படீங்கறதே ஏதோ தகுதியாகி போச்சு.\\\\
குடிக்கிறத லைட்டா டிரிங்க்ஸ் பண்ணுவார்னு லைட்டா சொல்றாங்கனு சொல்றாங்க ஷமீனா..
// இப்போ எல்லா துறைகளிலும் பெண்ணே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறாள்.//
ஆமாங்க ஸ்பேஸ்ஸ கூட விட்டு வக்கலீனு சொல்லவர்றீங்க அப்படித்தானே..
நாலு பாயிண்ட் சொன்னாலு நறுக்குதெரிச்ச மாதிரி பெண்களே ஜெயிக்கிறாங்கனு சொல்லி இருக்காங்க ஷமீனா..

வேர்க்கடலை தோலெல்லாம் உரிச்சு குடுங்கம்மா அக்காவுக்கு..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்