பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

ஆண் இல்லையேல் பெண் இல்லை, பெண் இல்லையேல் ஆண் இல்லை. அப்படியென்றால் இருவரும் முக்கியத்துவம் வாந்தவர்கள் தானெ. இதில ஆண் மட்டுமே உயர்ந்தவன் என்ற நினைப்பும், ஆணுக்குகே முதல் மரியாதை என்னும் கொள்கையும் எப்படி வந்தது? ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? ஆணை உலகினிற்கு அறிமுகப்படுத்தியவளும் ஒரு பெண்தானே!
ஆணுக்கு அடங்கி போனால்தான் அவள் நல்ல பெயரை எடுக்கமுடியும். இல்லையேல் அவளுக்கு அடங்காபிடாரி பட்டத்தை இச்சமூகம் வாரி வழங்கிவிடும். எவ்வளவுதான் உயர் பதவிகளும், பட்டங்களும் பெற்றாலும் ஆண் துணையில்லாமல் வாழும் பெண்களின் மனதை பதம் பார்ப்பதில் வல்லமை உடையதாக விளங்குகிறது ஆண் சமுதாயம்.
ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்னும் எடுத்துக்காட்டுக்கள் அதிகமாகிக்கொண்டேயிர்ந்தாலும், ஒரு சில வக்கிர புத்தி கொண்ட ஆண்களால் பெண்களுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
எடுத்துக்காட்டாக ஒரு அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்கள் அடையும் துன்பத்தை எடுத்துக்கொள்ளலாம்., அலுவலகத்தில் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாலும், அங்கு ஒரு சூழ்நிலை கதைதியாகவே காலந்தள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். மகளிர் மட்டும் திரைப்படத்தில் வரும் நாசர் கதாபாத்திரம் ஒரு எடுத்துக்காட்டாகும்..
ஏன் பஸ்ஸில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் வேதனையை அளக்க எந்த அளவுகோலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மையே!!
மது அருந்தி விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் கணவனை கட்டிய தாலிக்காக எத்தனையோ பெண்கள் பொருத்து போய்கொண்டுதானே இருக்கிறார்கள்.
ஈன்று புறந்தருதல் தாயிற்கு கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே
என்னும் முதுமொழிக்கேற்ப தாய் தன் குழந்தையை நல்ல படியாக பெற்றெடுத்து தந்தாலும், அக்குழந்தையை சான்றோனாக்க வேன்டிய தந்தை விழுந்து கிடப்பார் போதை தலைக்கேறி சாக்கடையில். பிறகென்ன தன் குழந்தையை தாய்கோழி குஞ்சுகளை வல்லூறுகளிடம் இருந்து காப்பது போல சமுதாயத்தில் உலவும் சிறு நரிக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவாள்.தன் ரத்தத்தை வேர்வையாக்கி ஊண் , உறக்கமின்றி காப்பாற்றுவாள் அத்தாய். கூடவே ஊரிலுள்ள அத்தனை சீக்கையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் தன் கணவனுக்கு கஞ்சியும் ஊற்றுவாள்.
தன் வீட்டு சண்டை வெளி உலகிற்கு தெரியக்கூடாது என்பதில் பெண் பெரிதும் அக்கறை காட்டுவாள், ஆனால் ஆணோ தன் நண்பர்களிடம் சொல்ல ஆரம்பிக்கும் முதல் வார்ததையே தன் மனைவியைப் பற்றிய புகார் பட்டியலாகத்தான் இருக்கும். ஆண் சாம,பேத,தான,தண்டத்தை பயன்படுத்தி தன் பக்கமே நியாயம் என் எடுத்துக்கூறுவதில் வல்லவர். <<<<<<நான் கூறும் விஷயங்களில் விதிவிலக்காக இருக்கும் ஆண்களும் உண்டு,பெண்களும் உண்டு>>>>>> அவர்களைப்பற்றிய விளக்கங்கள் அல்ல நாம் பேசுவது.
கணவனின் துன்பத்தையும் பொருத்துக்கொண்டு கல்லிலும்,மண்ணிலும் ஓடாய்த்தேய்ந்து கலவை சட்டி சுமந்து தன் குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் பெண்களையும், தன்மானத்தோடு வாழும் பெண்களையும் எளிதில் குற்றவாளியாக்கி சமுதாயத்தில் தலைகுனிவு ஏற்படுத்தி அவளை முடக்குவதில் எத்துணையோ ஆண்கள் வல்லவர்களாகத்தான் இருக்கின்றனர். ஏன் வாழ்வில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் பெண்களை முடக்குவதில் இன்றைய இணைய தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கின்றது. தான் விரும்பிய பெண்ணோ, கட்டிய மனைவியோ தன் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை எனத்தெரிந்தால் அந்த ஆண்மகன் உபயோகப்படுத்தும்மிககப் பெரிய ஆயுதம் இணையத்தில் அவதூறு செய்திகளையும், ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் பதிவேற்றம் செய்வதையும் தான். அவள் ஆய்சுக்கும் அவளால் அந்த இழிச்சொல்லிருந்து வெளிவரமுடியாது. நெருப்பு இல்லாமல் புகையாது என்னும் பல(ழ)மொழிகளுடன் உலா வர வேண்டிய நிலைதான். எந்தப்பெண்ணும் இதுபோன்ற வேலைகளை செய்வதில்லை.

ஆனால் பெண்களும் வீட்டில் ஏற்படும் சிறு சண்டைகளையும் பெரிதாக்கி திருமண பந்தத்தையே கேள்விக்குறியாக்கி விடுகினறனர். தன் வாயினால் கெட்ட பெண்கள் ஏராளமானோர் உண்டு. ஏன் முகமறியா இடத்தில் இருந்துகொண்டு நாம் எழுதிய எழுத்துக்கள் யாரையும் புண்படுத்தியிருக்குமோ என நினைத்தால் மன்னிப்பு கேட்கும் மனநிலை காலம்பூராவும் துணை நிற்கும் கணவனிடம் ஏன் கேட்க தயக்கம். ஆரம்பத்திலேயே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டால் என்ன. முணுக்கென்றால் அம்மா வீட்டிற்கு ஓடுவது, அங்கிருந்து படைபலத்துடன் வருவது , கணவனையும் கணவன் வீட்டாரையும் அதிகாரம் செய்வது, எந்த ஆண்மகனும் தன் தாயையும்,உறவுகளையும் நிந்திப்பதை பொறுத்துக்கொள்ளமாட்டார். அப்படி இருக்கையில் உறவுகளின் முன்னிலையிலே கணவனையும், கணவன் வீட்டாரையும் குறைகூறுவது தவறல்லவோ. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சமாளிக்கும் திறன் படைத்தவள் பெண். அதனால்தான் பல்வேறு வகையான துன்பங்களை நாம் இழைத்தாலும் பொறுத்துபோகும் பூமியை தாய் என பெண்ணாக உருவகப்படுத்தி உள்ளனர். அதுபோலவே நீர்நிலைகளை பாழ்படுத்தி துன்புறுத்தினாலும் அந்நதிதான் நாம் உயிர்வாழ தேவையான குடிநீரை வாரி வழங்குகிறது, அதனாலேயே பெண்களின் பெயர்சூடி மகிழ்கின்றனர்.
தாய்த்திருநாடு என்றுதான் கூறுகிறோம்,தாய்மொழி எனத்தான் சொல்கிறோம்.
இப்பேற்றினை பெற்ற நாம் நல்ல சமுதாயம் படைத்து அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்..
பெண்கள் அன்பினால் சாதிப்பவர்கள்,

*********ஆண்களே சண்டையில் ஜெயிப்பவர்கள்*********

என்று கூறி ,எனக்கு இந்நல்வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி அமைகிறேன் நன்றி,வணக்கம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பட்டியில் ஆண்களே அணியில வாதாடிய
வனிதா, ஜெயந்தி ,மீனாள் ,சுமிபாபு,கார்த்திகா, ஷமீலா
பெண்களே அணியில வாதாடிய
கல்பனா, ஷமீனா, பூர்ணிமாஜ், சுதாலாவண்யா
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். பார்வையாளார்களுக்கும் எனது வணக்கங்கலந்த நன்றிகள். புதிதாக வருபவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து,அவர்களையும் தன்னுள் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளும் அறுசுவைத்தோழிகளே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அண்ணாவிற்கும்,அட்மின் குழுவினருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நாட்டாமை தங்களைப்போல் முன்னுரை கொடுத்தாரும் இல்லை முடிவுரை ( தீர்ப்பு) கொடுத்தாரும் இல்லை. கலக்கீடீங்க.
நான் வாதிட்ட முதல் பட்டியிலேயே வெற்றியா. அடுத்து சுப்ரீம்கோர்ட்தான்டோய்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நடுவர் அவர்களே . உங்கள் முதல் பட்டியிலேயே இருவரை (மந்தா, குந்தா) உதவிக்கு வைத்து
பட்டியினை திறம்பட நடாத்தி நல்ல தீர்ப்பினை வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

ஈஸ்வரன்

நடுவரே... புது முகமா வந்து அடிதடியா பட்டியை முடிச்சு, அட்டகாசமா தீர்ப்பையும் சொல்லிபுட்டீங்க... வேறென்ன சொல்ல.. அருமை. நல்ல கருத்துக்களையும் சேர்த்து சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள். பட்டியை நகைச்சுவையா நல்லா கொண்டு போனதுக்கு நன்றிகள் பல. கை தட்டினேன்... கோயமுத்தூருக்கு கேட்டுச்சா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செயந்தி உங்களோட பதிவிற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி :)
ஆமாங்க நீங்க எப்ப ஜட்ஜ் ஆகப்போறீங்க??!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி சகோதரரே! உங்கள் பதிவிற்கும், பாராட்டிற்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாங்க வனி நீங்க அனைவரும் கொடுத்த ஊக்கமும், உற்சாகமுமே பட்டிய நல்லபடியா நடத்த முடிஞ்சது. ஏதோ இடி இடிச்சாப்ல சத்தம் கேட்டுது அது நீங்க கைதட்டின சத்தமாப்பா!! மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே, உங்களுக்கு இது முதல் பட்டி என்பதே மறந்து போனேன் தீர்ப்பை பார்த்து..அத்தனை முதிர்ச்சி இருந்தது உங்கள் எழுத்துக்களில். இரண்டு கைப்புள்ளைகள் துணையுடன் உங்களுக்கே உரிய கோவை மண்ணின் (நகை)சுவையோடு பட்டியை நடத்தியது வெகு அருமை. வாதங்களுக்கு நடுவே அவ்வபோது சிறு தீனி தந்தும்,அத்தியாவசிய பரிசுகளை தந்தும் உற்சாகத்தோடு நடத்தி சென்றீர்கள். வெல்டன் அருள் :) உங்க எழுத்துகள் எனக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு..இந்தாங்க தேங்காய் பர்பி..வாழ்த்துக்கள்,பாராட்டுகள் அருள்..

பட்டியில் வாதிட்ட இரு அணி தோழிகளும் சிறப்பாக தங்கள் வாதங்களை முன் வைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இருமுறை பதிவாகி விட்டது...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்