பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

அன்புத்தோழி அருட்செல்வி, பட்டிமன்றம் வெகு சிறப்பாக உங்கள் தலைமையில் நடத்தி முடித்ததை படித்ததில் மகிழ்ச்சி:) சில பல காரணங்களால் என்னால் பட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போதுதான் உங்க பட்டியில் கலந்துக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு:( அந்த அளவுக்கு ரொம்ப சிரிக்க சிந்திக்க வெச்சிருக்கீங்க:) அடுத்தமுறை கண்டிப்பா உங்க தலைமையில் கலந்துகொண்டு வாதாட ஆவலாக இருக்கிறேன். வாழ்த்துக்கள் அருள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நெஞ்சம் நெகிழ்ந்த மன்மார்ந்த நன்றிகள் கல்பூ:)
நான் புதிதாக இருந்தாலும் என்னை உற்சாகப்படுத்தி, உத்வேகப்படுத்தி பட்டியை சிறப்பாக நடத்த உதவியாக இருந்த தோழிகளை பெற்றிருக்கிறேன் என்பதில் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
இதுக்குமேல எனக்கு பேச நா எழவில்லை. தோழிகள் அனவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களொட மனமுவந்த பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிப்பா!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவர் நாற்காலியில் அமர்ந்து மிகவும் அருமையாக,நகைச்சுவையோடு நல்ல பல விஷயங்களையும் நமக்கு எடுத்து சொல்லி நல்லதொரு தீர்ப்பு வழங்கிய அருட்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.சில காரணங்களால் என்னால் ஒரு பதிவுக்கு மேலே போட முடியவில்லை.ஆனால் அருள் தலைமையேற்ற பட்டியில் நான் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மேலும் பல பட்டிக்கு தலைமை பொறுப்பேற்று நடத்த எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டு பக்கமும் வாதாடிய எனது தோழிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

இப்பிடி முதல் பட்டிலெயெ என்னய சாச்சுப்புடியெ நடுவர் அம்மினி. ஹ்ம்ம், தோல்வி தான் வெற்றிக்கு முதல் படியாக்கும்.ஆனா பெண்கள் அன்பால ஜெயிப்பாஙகன்னு சொன்னிங்க பாருஙக, அது சூப்பருங்கோ.. (, நான் வாதடுனது பெண்கள் அணி அம்மிணி,)எப்பிடியோ ஜெயிச்ச பக்கமா என்ர பேர போட்டதுக்கு ஒரு தேங்ஸ்சு.ஆனா இது உங்க முதல் பட்டின்னு இன்னுமும் என்னாலே நம்ப தான் முடில. நல்ல நகைச்சுவையா பட்டிய கொண்டு போய், தீர்ப்புக்கு தகுந்த கருத்துக்கலும் சொல்லிருக்கிரது அருமை, வாழ்த்துக்கள்..

பட்டில கலந்துக்கிட்ட எல்லா தோழிஸ்க்கும் வாழ்த்துக்களுங்கோ!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மிக்க நன்றி மீனாள். ஒரு பதிவு போட்டாலும் நல்ல பல கருத்துக்களை சொல்லிச்சென்றுள்ளீர்கள் தோழி. தங்கள் வருகையும்,பதிவும்,பாராட்டும் மனமகிழ்ச்சியளிக்கிறது தோழி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றினு சொல்றதுக்கு மின்னால மன்ச்சூ சுமி பேர அணிமாத்தி அறிவிச்சதுக்கு.
ஆனால் முதன் முதலா பட்டிக்கு வந்தேனு சொல்லிட்டு கோவை தமிழ் பேசி அசத்திட்டீங்க சுமி. தங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி தோழி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே
அருமையான தீர்ப்பு...எங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொன்ன நடுவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து.....வாழ்த்துக்கள் அருட்செல்வி...

உண்மையை எந்த அந்நிய தீய சக்திக்கும் பயப்படாம சொல்லிருக்கிங்க... வாழ்த்துக்கள்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

பாருங்கடி மந்தாணி, குந்தாணி, சர்வே எடுக்க போன பொண்ணு பட்டி முடிஞ்சு இப்போ தா வருது பாருன்னு நீங்க சொல்றது என்னோட காதில விழுதுங்க நாட்டாமை... :) கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. அதனால் தான் பட்டிக்கு மறுபடி வர இயலவில்லை.

தீர்ப்பு மிக அருமை. முதலில் நீங்கள் பட்டியை நடத்திய விதத்திற்கு வாழ்த்துக்கள் அக்கா. மற்ற பட்டியுடன் ஒப்பிடும் பொழுது , நீங்கள் இந்த பட்டியை நகைச்சுவையாக நடத்திய விதம் வித்தியாசமாகவும், உற்சாகமாகவும் இருந்தது அதுக்காகவே உங்களுக்கு ஒரு பூங்கொத்து, பிடிங்க :)

தீர்ப்பு எவ்வளவு விளக்கமா அருமையாக தெளிவாக சொல்லி இருக்கீங்க. இதே மாதிரி பல பட்டிகளில் உங்களை நடுவராக நாங்கள் எதிர்பார்க்கிறோம். ரியலி குட் ஜாப் அக்கா. மீண்டும் வாழ்த்துக்கள் :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்