சோயாபீன்ஸ் தோசை

தேதி: December 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா பீன்ஸ்- 1கப்
இட்லி அரிசி -4 கப்
உளுத்தம் பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -1/4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு

தாளிக்க:

கடுகு-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்-1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழை-1/2 கப்
கறிவேப்பிலை -சிறிது


 

சோயாபீன்ஸ் ,அரிசி,உளுந்தை ஒன்றாக 8 மணி நேரம் ஊறவைக்கவும்
நைசாக அரைக்கவும்.
அதனுடன் உப்பு சேர்த்து கலந்து புளிக்கவைக்கவும்

வாணலியில் எண்ணை விட்டு கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி,அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி இழை சேர்க்கவும்.
தாளித்ததை புளித்த மாவில் கொட்டி திட்டமான தோசைகளாக ஊற்றவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

சோயாபீன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது சேர்த்து நீங்க தோசை செய்துருக்கீங்க.. நானும் ட்ரை பண்றேன்.. வெங்காயம் - 1/4 டீஸ்பூன் எப்போ சேர்க்கனும். மாவு அரைக்கும் போதா?

கலை