வாழைக்காய் பூண்டு ரோஸ்ட்

தேதி: December 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

வாழைக்காய் - ஒன்று
பூண்டு - 5
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
மிளகு தூள், உப்பு - தேவைக்கு
எண்ணெய், கடுகு, சீரகம் - தாளிக்க


 

பூண்டுடன் பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தோல் நீக்கி, சதுரமாக நறுக்கி வைக்கவும்.
தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, பின்பு வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவை சேர்த்து பிரட்டி நீர் விட்டு வேக விடவும்.
நன்கு வெந்ததும், மேலும் எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும்.
அடி பிடிக்காத அளவு கிளறிவிட்டு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி சாதாரணமாகவே வா,காய் பிடிக்கும் அதிலும் பூண்டு சேர்த்து செய்தா கேட்கவா வேனும் கண்டிப்பா செய்துடுறேன் வா,காய் கைவசம் இருக்கு. வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழைக்காய் ரோஸ்ட் பார்க்கும் போதே சாப்பிட சொல்லுது வாழ்த்துக்கள்....

கவிதா
வழக்கம் போலவே கலக்கலான குறிப்பு....
கைவசம் வாழைக்காயும் இருக்கு..செஞ்சுட வேண்டியது தான்..
பூண்டு 5 என்று சொல்லி இருப்பது 5 பல் தானே?

ஹ்ம்ம் கிர்ஸ்பி வாழைக்காய் ரோஸ்ட் ஈஸியான செய்முறை சூப்பர் கவிதா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாழைக்காய் ரோஸ்ட் அருமையாக செய்து இருக்கீங்க.சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் நல்லா செய்துருக்கீங்க... செய்முறையும் ஈஸியா இருக்கு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இன்னைகு நீங்கள் சொல்லி கொடுத்த வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.என் குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.மிக்க நன்றி தோழி.மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

ரொம்ப எளிமையான, சுவையான குறிப்பு கொடுத்து இருக்கிறீங்க! நன்றி!

அன்புடன்,
ஹலீமா

கவிதா அருமையான வாழைக்காய் ரெஸிபி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழைக்காய் புது விதமா செய்திருக்கீங்க. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,

அவசியம் முயற்சித்து பாருங்க.வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சாதிகா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீலா,

ஆமாங்க!!அவசியம் முயற்சித்து பாருங்க.

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மீனா,

செய்து பார்த்து சொன்னதற்கு நன்றிங்க..
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹலீமா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி ,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆர்மையான எளிதான குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் கவி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழைக்காயை பூண்டு சேர்த்து அழகா செய்து இருக்கீங்க.இது வாயு கோளாறு உள்ள வாழக்காய் பிடித்த எல்லோரும் பயப்பாட்டாமல் சாப்பிடலாம் என்று நினைக்கறேன்...வாழ்த்துக்கள் கவி:)

SSaifudeen:)

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சமீஹா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா