வெண்டைக்காய் ரெய்தா

தேதி: December 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வதக்க:

வெண்டைக்காய்- 10
வெங்காயம்-1
அரைக்க:

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளைமிளகுத்தூள்-சிட்டிகை
உப்பு
கலந்து சேர்க்க -தயிர் அரை கப்


 

முதலில் தேங்காய்துருவல்,வெள்ளைமிளகுத்தூள் ,உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தயிர் சேர்த்து அரைக்கவும்..

வெங்காயம் ,வெண்டக்காயை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு வெங்காயம் மற்றும் வெண்டக்காயை நிறம்மாறும்வரை வதக்கவும்.

வதக்கிய காய்களோடு அரைப்பையும் சேர்த்து தேவைக்கு தயிர்விட்டு கலக்கவும்.

சுவையான வெண்டைக்காய் ரெய்தா ரெடி..


ஒருமுறை வசந்தபவனில் பிரியாணி ஆர்டர் செஞ்சப்ப இதுமாதிரி ரெய்தா கொடுத்தாங்க அது ரொம்ப பிடிச்சுது .சுவைய வச்சு இப்படித்தான் ட்ரை பண்ணிருப்பாங்களோன்னு கற்பனையில் உதித்ததுதான் இந்த ரெசிப்பி...ஆனா அதைவிட இது சுவையாகவே இருந்துச்சு..

மேலும் சில குறிப்புகள்