இறால் புட்டு

தேதி: December 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்

இறால் மசாலாவிற்கு
இறால் - 20
வெங்காயம் - 2
இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது
எண்ணை - 1 மேஜைக்கரண்டி


 

முதலில் அரிசிமாவை இடியப்ப மாவு போல் திரட்டி எடுக்கவும்
அரிசி மாவில்,உப்பு, கொதிநீர் கலந்து(தேவையான அளவு மட்டும்) குழைத்து எடுக்கவும்
அதனை ஒரு எலுமிச்சையை விட சற்று பெரிய உருண்டைகளாக பிரித்து வைக்கவும்
எண்ணை காயவைத்து வெங்காயம் வதக்கவும் ,பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கவும்
அதன் பின் பொடிகளை சேர்த்து இறாலையும் சேர்த்து கறிவேப்பிலை தூவி வதக்கி 15 நிமிடம் மூடியிட்டு தண்ணீர் வற்றவிட்டு எடுக்கவும்
சூடு ஆறிய பின் உருட்டி வைத்த மாவை கைகளால் தட்டி தோசை போன்று பரப்பவும் அதன் நடுவே இறால் மசாலா 1 ஸ்பூன் வைத்து எல்லா ஓரங்களையும் உள்ளிழுத்து உருண்டையாக உருட்டி விடவும்
அதனை தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்
இதனை ஆவியில் கொழுக்கட்டை அவிப்பது போல் அவித்து எடுக்கவும்
சுவையான இறால் புட்டு ரெடி


முதலில் மசாலா செய்து வைக்கவும்.பின்பு அரிசி மாவு கலந்து கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்