உருண்டைக்கலியா

தேதி: December 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

தேங்காய் துருவல் - ஒரு கப்
இறால் - கால் கப்
முட்டை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பொட்டுக்கடலை - மூன்று மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் - ஐந்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
அனைத்தையும் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கலியாவை சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். (தட்டும் பொழுது கையில் ஓட்டினால் சிறிது தண்ணீர் தொட்டுக் கொண்டு தட்டவும்).
உருண்டைக்கலியா தயார். இதை பருப்பு குழம்பு, சாம்பார் போன்றவற்றுடன் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கும்.

இதே முறையில் இறாலுக்கு பதிலாக மட்டன் கீமா, கணவாய் வைத்து அரைத்தும் செய்யலாம். மட்டன் கீமா என்றால் முதலில் கீமாவை மிக்சியில் அரைத்து பின்பு மற்றவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். வயதானவர்கள் சாப்பிடுவதற்கு நன்கு மென்மையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உருண்டைக்கலியா நல்ல குறிப்பு ..........நாங்க வேற மெத்தத் இல் செய்வோம்..........இது மாதிரி கண்டிப்பா செய்து பார்க்கிறேன்........ வாழ்த்துகள் :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் அட்மின் அண்ணா குழுவிக்கும் மிக்க மிக்க நன்றிகள்:)

SSaifudeen:)

ஹாய் சமீஹா, ஹை..உருண்டைக்கலியா...இத நானும் இறால் கலியான்னு கொஞ்சம் வேற மாதிரி கொடுத்து இருக்கேன்...
இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள்...:)

ஹசீன்

assalamu alaikum ma..urundai kaliya nalla irukuma..thodarndhu kurippa kuduthu asathureenga vazhthukkal ma...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ரூபி...அதான் இறால் ஸ்டாக் உங்களிடம் நிறைய இருக்கே சோ நீங்க தாராளமா ட்ரை பண்ணி பாருங்க:)

SSaifudeen:)

வாங்க எப்படி இருக்கீங்க?அப்பா...உங்க கூட பேசி எவ்ளோ நாள் ஆகுது!!!
அப்படியா ஹசீன்...ரூபி சொன்னாங்க...இதுவும் நல்லா இருக்கும்..ரொம்ப மெதுவா இருக்கும் செய்து பாருங்க.உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி:)

SSaifudeen:)

வ அழைக்கும் முஸ்ஸலாம்...உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி சாம்...ஏன் அரட்டை பக்கம் வர்றது இல்லை..
நித்தி...ரொம்ப பீல் பண்ணுனாங்க உங்களை தேடி நானும் தான்...சோ வாங்க:)

SSaifudeen:)

அஸ்ஸலமு அலைக்கும் தங்கச்சி தினமும் விதவிதமா செஞ்சு அசத்துரம்மா எங்க ஊர்ல இதை உன்டகளியானு சொல்வோம் சூப்பர் வாழ்த்துக்கள்மா

அஸ்ஸலாமு அலைக்கும் சமிஹா
நல்லா செஞ்சு இருக்கிங்க மா...வாழ்த்துக்கள்.............
நாங்களும் இதை உண்டகலியான்னு தான் சொல்வோம்....செய்முறை கொஞ்சம் மாறுபடும்....

நல்லதொரு குறிப்பு வாழ்த்துக்கள் ஷமீஹா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அஸ்ஸலாமு அலைக்கும் சமிஹா, உண்டகலியா அருமையாக செஞ்சு இருக்கிங்க,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஓ இதுதான் உருண்டைக்கலியாவா? ம் சூப்பர் நல்லா யம்மியான டிஷ்ஷாகத்தான் இருக்கு. சாலியா, குப்பத்தாவ எப்ப அனுப்பப்போறீங்க?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வ அலைக்குமுஸ்ஸலாம் அக்கா...நாங்களும் இதை உண்டக்களியான்னு தான் சொல்லுவோம்...பட் இது கொச்சை வார்த்தை மாதிரி இருந்தது அதான் நானே பெயர் மாற்றம் செஞ்சிட்டேன்...எப்படிக்கா இருக்கு நான் வைத்த பெயர்:)
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சமி...உங்கள் செய்முறையையும் முடிந்தால் அனுப்புங்க சமி....

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா உண்டகலியா ரொம்ப நல்லா செய்து இருக்கிங்கமா ... நாங்க கொஞ்சம் வேற மாதிரி செய்வோம். வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நல்லா இருக்குங்க. எல்லாம் பேரே எனக்குலாம் புதுசு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமீஹா, நானும் இப்படி ஒரு பேரோட அயிட்டத்தை இப்பதான் கேள்விபடுறேன். இறாலை அரைக்காம வேக வச்சு உதிர்த்து போட்டு செய்தால் நன்றாக வருமா? படங்களும், செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளன. புத்தம்புது குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி அருட் செல்வி...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி முஹ்சீனா...

SSaifudeen:)

ம்ம்ம்ம் இது தான் உருண்டைக்கலியா....இதோ உங்களுக்காக அடுத்து வந்து கிட்டே இருக்கு....உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி நித்தி...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...உங்கள் வாழ்த்திற்கு மிக்க ஹலீலா...உங்கள் செய்முறையையும் அனுப்புங்கம்மா...
அப்புறம் சமையல் குறிப்புலாம் இவ்ளோ அழகா அனுப்பிட்டு டைப்பிங் ஸ்பீட் வராதுன்னு சொன்னா எப்படி ஹலீலா.....:)அங்கே(அரட்டை) வந்தால் எல்லாம் தன்னால வந்திடும் ...உங்க கூட பேச ஆசையா இருக்கு சோ ஒரு எட்டு வந்திட்டு போகலாம் இல்லையா????:)

SSaifudeen:)

வனிதா அக்கா எப்படி இருக்கீங்க?உங்க கூட பேசி எவ்ளோ நாள் ஆகுது...சாப்பிடவும் நல்லா இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிக்கா...
அப்பறம் என் இறால் பிரியாணியை சுத்தி ஒரு மீனை வச்சி அலங்கரித்து இருக்கேன் பார்த்தீங்களா...அது உங்களுக்காக தான் வைத்தேன் நீங்க அங்கே வராததுனால ஏன்னா கேட்க்க முடியலை...நீங்க நெத்திலி மீன் பக்கோடா செய்தீங்க இல்லையா எங்கள் ஊரில் அந்த மீன் கிடைக்க மாட்டேங்குது சோ நான் பிரியாணியை சுத்தி வச்சிருக்கும் மீனை(தேசப்பபொடி) யூஸ் பண்ணி பக்கோடா செய்தால் நல்லா வருமாக்கா....???

SSaifudeen:)

இது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான உணவுக்கா...இறாலை அரைக்காமல் வைத்து இது வரை செய்தது இல்லை அப்படி செய்தால் வாய்க்கு தருக்கு தருக்குன்னு வரும்ன்னு நினைக்கிறேன்...ஆனால் மத்ததை அரைக்கணும்.இருந்தாலும் நீங்க சொன்ன மெதேட்ல நான் ட்ரை பண்ணி பார்த்திட்டு உங்களுக்கு சொல்லுறன்... உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிக்கா....

SSaifudeen:)

சமீஹா,
புதுமையான குறிப்பு :)
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீஹா உருண்டைகலியா சூப்பர் நானும் இப்ப தான் கேள்விபடுறேன் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுறேன்.....இத குழம்பு மாதிரி செய்து அதுல போட்டு சாப்பிடலாம்னு நிஷா அக்கா சொன்னாங்க அந்த குழம்பு எப்படி செய்யனும்.....

ஷமீஹா: ஹ்ம்ம் யம்மி கலியா சுலபமான செய்முரயில் அருமையானா குரிப்பு சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி கவி...

SSaifudeen:)

நிஷா அக்கா சொல்லுறது தான் குப்பத்தா...இன்ஷா அல்லா அனுப்புறேன்மா...இதையும் செய்து சாப்பிடுங்க நல்லா இருக்கும்.உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சாதிக்கா....

SSaifudeen:)

கனி வருகைக்கும் சூப்பர் பதிவிற்கும் மிக்க நன்றிமா...

SSaifudeen:)

நல்ல குறிப்பு.இறால் வாங்கும் போது செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

Kalai

அவசியம் செய்து பாருங்கள் நல்லா இருக்கும்.உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...

SSaifudeen:)

ஏதோ டவுட்டு கேட்டதா சொன்னீங்களே.. என்ன?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹைய்யா வனிதா அக்காவை பிடிச்சிட்டேன்...:)இதே உருண்டைக்களியாவில் நான் உங்களுக்கு தேங்க் பண்ணி ரிப்ளே பண்ணி இருக்கேன் அதுலயே என் டவுட்டும் இருக்குக்கா பாருங்க:)

SSaifudeen:)

மறுபடி வேலையா போயிட்டேன். நீங்க போட்டதை நான் இப்ப தான் பார்க்கிறேன். அது என்ன மீனுன்னு எனக்கு தெரியலயே சமீஹா. நான் அதை சிப்ஸ்ன்னு நினைச்சிருந்தேன். நீங்க எந்த மீன் வேணும்னா பயன்படுத்தலாம் சமீஹா, ஒன்னே ஒன்னு தான் முல்லு இருக்க கூடாது. சின்ன மீனா இருந்தா நல்லது. அவ்வளவு தான் :) ட்ரை பண்ணிடுங்க அந்த மீனில் கொஞ்சமா ஒரு முறை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா