பனானா கேக்

தேதி: December 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

பழுத்த வாழைப்பழம் - 3
மைதா - 200 கிராம்
சீனி - 150 கிராம்
முட்டை - 2
பால் - ஒரு கப்
வெண்ணெய் - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி

தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.
வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
முட்டையுடன் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதில் பால் சேர்க்கவும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
உருக்கிய வெண்ணெய் கலவையையும், முட்டை, சீனி கலவையையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
கடைசியாக வாழைப்பழக் கலவையை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலந்து, மைதாவையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
நன்றாக குழைத்து கேக் பானில் ஊற்றவும்.
நெய் தடவிய தட்டில் 180 டிகிரி சூட்டில் அவனில் வைத்து சுமார் 25 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.
சுவையான பனானா கேக் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நல்ல சுவையான ரெசிபி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசினா

கடைசி படத்தில் கட் பண்ணி வெச்சிருக்கறது அருமையா இருக்கு
வாழ்த்துக்கள் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

assalamu alaikum muhsina..epdi irukeengama?azhaha senju irukeenga cake..cut panni vachu irukra pieces wonderful..vazhthukkal ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா பனானா கேக் பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா.....

முசி அக்கா அருமையான குரிப்பு பனானா கேக் சிம்பில் அன்ட் ஈஸி கேக்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா ம்ம்ம்... பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்குமா...சூப்பர் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்...

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா பனானாகேக் பார்க்கும்போதே அருமையாயிருக்குமா சாப்பிடதோனுது நிச்சயம் செய்துபார்க்கிரேன்.வாழ்த்துக்கள்

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Unga banana cake receipe paakum pothae saapidanum pola iruku. Insha allah seithu paakanum

மிக்க நன்றி.வனி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி,ரம்யா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் சம்னாஷ்,நல்லா இருக்கேன்மா,நீங்க எப்படி இருக்கீங்க.வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் சாதிகா, பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.கனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் ஹலிலா,வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் நிஷா பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பனானா கேக் சூப்பர். நானும் செய்து பார்கிறேன். நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Naanga nalla irukom muhsina..neenga yaen arattai ku varavae matirkeenga.neram kidaikum podhu arattai pakkathirku vandhu engaludan pesungalaen ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பேசனும்ன்னு ஆசை தான்,எனக்கு 11/2 வயது குழந்தை இருக்கீறான்,சரியான வால்.அவன் தூங்கும் போது தான் நான் நெட்டில் அமர முடியும்.அதனால் தான்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Oh apdiya mahan epdi irukaar? Peyar enna? Enakum oru mahan irukiraan..avanum sariyaana vaal tan..avan thoongum bodhu tan naanum varuhiraen ma..ungaluku endha oor?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

நான் நாகூர் பக்கம்,மகன் பெயர் நபில்,10 வருடம் கழித்து பெற்றேன்,அதனால் எனக்கு அவன் தான் எல்லமே.அவனுக்காக தான் அடிக நேரம் செலவிடுகிரேன்.அதான் அரட்டைக்கு வர முடியதில்லை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

muhsina apdiya alhamdulillah..allah sirappaki vaipan ma kulandhayai..en mahan peyar abdur rahman..engaluku kayal patnam ma..ok kandippa kulandhaikaha tan adhiha neram selavidanum corect tan..ungalala mudinja time arattaiku vaanga..vara mudiyalanaalum engaluku kuripuhal thavaraama kudukreenga vazhthukkal muhsina

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கேக் அப்படியே ஒரு பீசை எடுத்து வாயில் லபக்குன்னு விடனும் போல் உள்ளது...சூப்பர் வாழ்த்துக்கள் முஹ்சீனா....:)

SSaifudeen:)

முசி,
சுவையான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.ஷமீஹா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பனானா கேக் செம்ம டக்கரா செஞ்சிருக்கீங்க. ஓவன் இல்லாத என்னைப்போன்ற ஆளுங்களுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன் கேக் செய்ய:) வாழ்த்துக்கள் முஷ்ஹினா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் முசி(:-
மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவு சேர்க்கலாமா தோழி??!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அஸ்ஸலாமு அலைக்கும் முசி,
பனானா கேக் சூப்பர்....முகப்பை பார்த்ததுமே கண்டுபுடிச்சுட்டேன் இது நம்ம முசி குறிப்புன்னு :)
லேட் பதிவிற்க்கு சாரி.......

நித்யா மிக்க நன்றி.பிரசர் குக்கரில் ட்ரை பண்ணி பாருங்கள்,நல்லா வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.கோதுமையிலும் செய்யலாம்,நானும் கோதுமையில் செய்து உள்ளேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் ஷமீலா, பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான, சுவையான, சிம்பிளான ரெசிபி. வாழ்த்துக்கள்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.