பாதாம் கேக்

தேதி: December 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

மைதா மாவு - முக்கால் கப்
பாதாம் - 2 கைப்பிடி
சர்க்கரை - 3/4 - 1 கப்
எண்ணெய் + வெண்ணெய் - 1/3 கப்
பால் - அரை கப்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
முட்டை - 2
ஐசிங் சுகர் - சிறிது (விரும்பினால்)
வெண்ணிலா எஸன்ஸ் - சில துளி


 

ஒரு கைப்பிடி அளவு பாதாமை நீரில் ஊற வைத்து,. தோல் நீக்கி சீவி வைக்கவும். மீதமுள்ள பாதாமை பொடியாக்கவும். கால் கப் அளவு பாதாம் பொடி எடுத்து வைக்கவும். முட்டை, வெண்ணெயை குளிர்ச்சி குறைவதற்கு ஃப்ரிட்ஜை விட்டு வெளியே வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேவில் எண்ணெய் தடவிக்கொண்டு அதில் மாவு தூவி வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள கால் கப் பாதாம் பொடியை மைதாவுடன் கலந்து (1/4 + 3/4 கப் மொத்தமாக 1 கப்) அதில் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அதில் பால் சேர்த்து பின்பு எண்ணெய் + வெண்ணெய் கலவை ஊற்றி கலக்கவும்.
இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இத்துடன் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.
கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி, அதன் மேல் சீவி வைத்த பாதாமை தூவவும்.
170 - 180 C’ல் 20 - 25 நிமிடம் அல்லது உள்ளே விட்ட டூத் பிக் அல்லது கத்தி சுத்தமாக வெளியே வரும் வரை பேக் செய்து எடுக்கவும்.
விரும்பினால் மேலே ஐசிங் சுகர் தூவலாம். இது எவ்வளவு சாஃப்ட்டாக இருக்கும் என்பதை படத்தை பார்த்தாலே தெரியும். மிகவும் சாஃப்ட் ஸ்பாஞ்சி கேக் கிடைக்கும்.
சுவையான கேக் தயார். மேலே போட்ட பாதாம் க்ரிஸ்பியாகவும். உள்ளே சாஃப்ட் கேக்கும் சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா அக்கா பாதாம் கேக் தூள் பரக்குது ஹ்ம்ம் எனக்குதான அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனிதா அக்கா,
பாதாம் கேக் சூப்பர்...
வாழ்த்துக்கள்...முதல் பதிவு போட்டதற்க்கு பரிசா அந்த கேக் பீஸ குடுங்க :)

பாதாம் கேக் சம சாஃfட் அவசியம் செய்துபார்த்திட வேண்டியது தான்,நான் ஒரு கேக் பிரியை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனிதா பாதாம் கேக் ரொம்ப அருமையாக இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது .... செய்முறையும் ஈஸியா இருக்கு அவசியம் செய்து பார்த்துட்டு கண்டிப்பா சொல்றேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனி பாதாம் கேக் மிக அருமை, இதயவடிவத்துல அழகா சுட்டிருக்கீங்க கேக்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி, இதய வடிவ பாதாம் கேக் இதயத்தை கொள்ளை கொண்டது :) பார்க்கும்போதே சாப்பிட்ட உணர்வு கிடைச்சுடுச்சி.. வேறென்ன சொல்ல எனக்கு இங்கே செய்ய வசதிப்படாது. இந்த கேக் செய்யும் ப்ராப்த்தம் இருந்தால் ஒருநாள் கண்டிப்பா செய்து பேஸ்புக்ல போடுவேன். வழக்கம் போல படங்கள் தெளிந்த நன்னீர் க்ளாரிட்டி..பிரசண்டேஷன் பெர்பெக்ட். விதவித குறிப்புகளுக்கு வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எண்ணெய் + வெண்ணெய் - 1/3 கப்
இது என்ன அளவுப்பா? எண்ணெய் 1 கப் வெண்ணெய் 3 கப்ஆ. சரியாக சொல்லவும்.

அம்மாடியோ... அவ்வளவு வெண்ணெய்யா??? இல்லங்க... எண்ணெய் பாதி, வெண்ணெய் பாதியாக இரண்டையும் சேர்த்து ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு எடுக்க சொல்லி இருக்கேன். நீங்க விரும்பினா எண்ணெய் மட்டுமோ அல்லது வெண்ணெய் மட்டுமோ கூட மூன்றில் ஒரு பங்கு எடுங்க. நல்லா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சூப்பர் கேக், செய்து பாத்துடுறேன் , படங்கள் அழகு.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

சூப்பர்ப் ..அருமை .....சாப்பிடத்தூண்டும் ப்ரசண்டேஷன்பா அள்ளுது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

vani

supera irukku cake, heart shape super, kandipa try panren, valthukkal vani.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. இந்த சீசனுக்கு ஏற்ற dish. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். அருமையான receipe.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

வெண்ணை எவ்வளவு சேர்க்க வேண்டும் ? புத்தாண்டு பரிசாக கேக் செய்து கொடுத்திடலாம்.

வெண்ணை எவ்வளவு சேர்க்க வேண்டும் ? புத்தாண்டு பரிசாக கேக் செய்து கொடுத்து குடும்பத்தாரை அசத்திடலாம்.

வனிதா அக்கா பாதாம் கேக் அழகா,அருமையா வந்துருக்கு.படத்தை பார்த்தாலே சுவையாவும்,ஸ்பாஞ்சியாகவும் இருக்கும்னு தெரியுது.சீக்கிரமா செய்திடுறேன்.
வாழ்த்துக்கள்.

Kalai

வனிதா அக்கா பாதாம் கேக் பார்க்கும் போதே அவ்வளவு சாப்டா சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்துக்கள்...

ஹாய் வனிதா

என்னை ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன், ரொம்ப நாள் கழித்து அறுசுவை வந்தேன் என்னை வரவேற்ப்பு கொடுத்தது உங்கள் பாதாம் கேக் தான் பார்ப்பதற்க்கு எளிது போல உள்ளது செய்து பார்ப்போம்.

என்றும் அன்புடன்
மஹாலஷ்மிபிரகதீஸ்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வனி பாதாம் கேக் அப்படியே எனக்கே எனக்கு :) சூப்பர் ஹார்ட் சேப்ல அட்டகாசமா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி, நான் ஓவன் ல காய்கரி வேக வைக்க, சிக்கன் கிரில் செய்ய மட்டும்தான் பயன் படுத்துரேன். கேக்கும், பிஸ்கெட்டும் எனக்கு ரொம்ப தண்ணி காட்டுது. ஓவன் வாங்கி 8 வருசமாச்சுன்னு வெளிய சொல்லவே வெக்கமா இருக்கு.

பாதாம் கேக் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள் அக்கா...

SSaifudeen:)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கனி... கட்டாயம் கேக் உங்களுக்கு தான் :) இனிய க்ரிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். நன்றி கனி.

ஷமீலா... ஜஸ்ட் மிஸ் ;) கனி தான் முதல் பதிவு. ஹிஹிஹீ. உங்களுக்கு இல்லாத கேக்கா? எடுத்துக்கங்க. மிக்க நன்றி.

முசி... மிக்க நன்றி. :) எனக்கும் கேக் பிடிக்கும், ஆனால் வெளியில் வாங்கி இல்லை, வீட்டில் செய்வது.

ஹலீலா... மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க, சுவையும் அருமையாக இருக்கும்.

அருள்... மிக்க நன்றி ;) என்கிட்ட இருக்குறதே 2, 3 கேக் மோல்டு தான்.

கல்ப்ஸ்... மிக்க நன்றி. ஒவ்வொரு விஷயத்தையும் உத்து கவனிச்சு பதிவு போட்டு சந்தோஷப்படுத்திடுறீங்க. :) உங்க பதிவை படிக்கும் போதெல்லாம் சுஸ்ரீ நியாபகம் வருது.

அனு... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க ;)

இளவரசி... மிக்க நன்றி ;) எக்ஸ்பர்ட் பாராட்டு... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

சுமி... மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லீமா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். :)

சித்ரா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. கப்பின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயும் வெண்னையும் சரி பாதி அளவு கலந்து எடுங்க. 20 கிராம் கிட்ட வரும் வெண்ணெய். :)

கலா... மிக்க நன்றி. :) ரொம்ப ரொம்ப மாய்ஸ்ட் சாஃப்ட் கேக் இது. கட்டாயம் செய்துட்டு சொல்லுங்க.

சாதிக்கா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

மஹாலக்‌ஷ்மி... ஆகா... உங்களை மறப்பேனா? பல முறை உங்களை தேடினேன்... உங்களை தான் காணோம்... நலமா இருக்கீங்களா? எங்க போயிட்டீங்க? இனி அடிக்கடி வாங்க. உங்க பதிவை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மகா. மிக்க நன்றி :)

சுவர்ணா... ஃப்ரெஷா செய்து பார்சல் அனுப்பிடுறேன்... பதிலுக்கு எனக்கு மெதுவடை அனுப்பி போடுங்க ;) டீல் ஓக்கேவா?? மிக்க நன்றி.

பிரியா... கேக் செய்து பழகும் முன் மஃபின் செய்து பழகுங்க. சுலபம்... எல்லாரும் செய்ய முடியும். மிக்க நன்றி :)

ஷமீஹா... மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இருமுறை பதிவு!

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// பதிலுக்கு எனக்கு மெதுவடை அனுப்பி போடுங்க ;) டீல் ஓக்கேவா??//

வனி டபுள் ஓகே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தங்கச்சி, கொஞ்சம் மாற்றங்களுடன் உங்க கேக் இன்று ட்ரை செய்தேன்... செம சூப்பர் :)
ரொம்ப சாப்ட் ... மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுவர்ணா... அப்போ சரி ;) வந்துடும் பார்சல்.

பிந்து அக்கா... ஆகா... படம் பார்த்து நான் அசந்து போய் இருக்கேன்... ;) என்ன மாற்றம்?? அதையும் சொன்னா நாங்களும் அப்படி ஒரு வேரியேஷன் ட்ரை பண்ணிடுவோமில்ல. :) மிக்க நன்றி அக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா இன்னைக்கு உங்க பாதாம் கேக் செய்து,சாப்பிட்டாச்சு.நல்லா இருந்துச்சு.செம சாஃப்ட்.குறிப்புக்கு நன்றி.முகநூலில் படங்கள் போட்டுருக்கேன்.முடிந்தால் பார்க்கவும் :)

Kalai

Enga veetla oven illa ms.vanitha
Microwave la intha recipe epdi pandrathu?

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. படம் பார்த்து பார்த்து எனக்கு திரும்ப பண்ண ஆசை, இப்ப அவன் இல்லையே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு மைக்ரோவேவில் செய்ய தெரியலைங்க. சாதாரணமா அறுசுவையில் குக்கர் கேக் இருக்கு பாருங்க. மனல் போட்டு, போடாம இரண்டு முறையிலும் இதை செய்யலாம். நல்லா வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா