பர்குல் அல்வா

தேதி: December 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

பர்குல்(burgul) -1 கப்
பால்-1 கப்
தண்ணீர்-3 கப்
தேங்காய்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
நெய்-2டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1கப்
ஏலக்காய்-10
சிட்டிகை உப்பு
வறுத்த முந்திரி -10
கலர்பொடி-சிட்டிகை(விரும்பினால் மட்டும்)


 

பர்குலை,தேங்காய்பால் பவுடர் , பால் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில்வரை மிதமான தீயில் வேகவிடவும்.
ஏலக்காயை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடிக்கவும்
வெந்து விசில் அடங்கியதும் சர்க்கரையை கொட்டி கிளறவும்.
ஒட்டும்போது நெய் ஊற்றி கிளறி ஒட்டாத பதம் வந்து சுருளும்போது எடுத்து கொட்டி வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்


முழுவதுமாக பால் அல்லது முழுவதுமாக தண்ணீர் ஊற்றியும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

இளா, பர்குல்-னா என்ன? அது எங்கே கிடைக்கும்? பார்க்க ராகி மாதிரி இருக்கு. இதற்கு மாற்று பொருள் உண்டா? அல்வா பேர் வித்யாசமா இருக்கே.. யார்டா அதுன்னு உள்ளே வந்தேன்.. அட.. நம்மாளு தான் :) இந்த பொருள் இங்கே கிடைக்கலன்னா.. படத்தை பார்த்து மட்டும் ஜொள் ஊத்திட்டு போய்டுறேன் ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சாரிப்பா நான் இத கவனிக்கல தாமதத்துக்கு சாரி.

பர்குல்ன்றது broken wheat (burgul)

இது கோதுமை ரவை மாதிரி இன்னும் கொஞ்சம் டார்க் கலர்ல இருக்கும்.

இது ஹைபர்மார்க்கெட்லயோ அல்லது ஹோல் க்ரைன்ஸ் இருக்க கடையிலயோ இருக்கும்பா

இது கிடைக்கலன்னா கோதுமை ரவையிலும் இதுபோல் செய்யலாம்பா

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.