பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு

தேதி: December 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பாசி பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பட்டர்நட் ஸ்குவாஷ் - பாதி
பூண்டு - 3 பல்
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
நெய், எண்ணெய்


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். மசூர் பருப்பை 5 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பருப்புடன் மற்ற பருப்பு வகைகள், பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும்.
நறுக்கிய பட்டர்நட் ஸ்குவாஷ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி சேர்த்து அதிக நீர் விடாமல் பதமாக குழையாமல் வேக வைக்கவும்.
வெந்ததும் உப்பு, வேக வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
நெய்யில் தாளிப்பு சேர்த்து தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்

சாம்பார் பொடி குறிப்பிற்கு இங்கு சொடுக்கவும் : <a href="/tamil/node/24050"> சாம்பார் பொடி </a>

நெய்யுடன் சுடு சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். பட்டர்நட் ஸ்குவாஷ் என்பது பூசணி வகை சார்ந்த காய்.பார்பதற்கு பூசணி போலவே இருக்கும். வாங்கும் போது சற்று காயாக வாங்கினால் அதிக இனிப்பு இருக்காது. பழமாக வாங்கினால் இனிப்பாக இருக்கும். இங்கு பை, சூப், டெசெர்ட் செய்தும், கிரில் செய்தும் சாப்பிடுகிறார்கள். இதனை சில இடங்களில் பட்டர்நட் பம்ப்கின் என்றும் சொல்வதுண்டு.நிறைய வைட்டமின் மற்றும் தாதுக்களை கொண்டது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய காய் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹை... இங்கையும் இந்த காய் நிறைய பார்க்கலாம். செய்திருக்கேன். நல்ல குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்தியான குறிப்பு:) வாழ்த்துக்கள் கவிதா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கவிதா பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க.வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு நல்ல குறிப்பு,நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவி குறிப்பு பார்க்காவே அருமையா இருக்குப்பா ஆனால் இந்தா காய் நான் பார்த்ததே இல்லை கிடைச்சா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி டிஷ் செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள்...இப்பத்தான் இப்படி ஒரு பேர் கேள்வி படுறேன்...இதன் தமிழ் நேம் என்ன?சொன்னா வாங்கி சமைக்கலாம் இல்லையோ....

SSaifudeen:)

ஹெல்தி டிஷ் கவி..வாழ்த்துக்கள் :)

Kalai

பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க.....வாழ்த்துக்கள்!!!
இங்கு இந்த காய் கிடைக்கும் கண்டிப்பா ட்ரை பண்றேன் :)

பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு ரொம்ப நல்லா இருக்கு...
இங்கும் அந்த காய் கிடைக்கும்..கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்...
வாழ்த்துக்கள் ...

கவிதா,
பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டு சூப்பரா செய்து இருக்கிங்க. கடைசியில‌ குறிப்பில் சொல்லியிருக்கும் காய் பற்றிய செய்தி அருமை. கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பு மிக அருமை,
வாழ்த்துக்கள்!!
கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

வனி ,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சமீஹா,
தமிழில் தெரியலை ;( இங்கே தான் நானே ட்ரை பண்ணேன்..
பூசணியில் செய்யும் முறையில் தான் இந்த கூட்டையும் செய்தேன்.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கலா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரூபி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீலா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சுஸ்ரீ,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா