தன்டி ஆலுவி போகிபா (Dhandi Aluvi Boakiba)

தேதி: December 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

1. மரவள்ளிக்கிழங்கு துருவியது - 3 கப்
2. சர்க்கரை - 3 கப்
3. இளம் தேங்காய் (gabulhi) துருவியது - 3 1/2 கப்
4. வெண்ணெய் - 10 கிராம்
5. ஜாஸ்மின் / ரோஸ் வாட்டர் - சிறிது (3 - 4 மேஜைக்கரண்டி) [விரும்பினால்]


 

வெண்ணெயை ஒரு அவன் பாத்திரத்தில் தடவி வைக்கவும். அவனை 160 C’ல் முற்சூடு செய்யவும்.
மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
இந்த கலவையை பாத்திரத்தில் பரப்பி அவனில் 30 - 40 நிமிடம் பேக் செய்யவும்.
சுவையான தன்டி ஆலுவி போகிபா தயார்.


இது மாலத்தீவில் பிரபலமான கேக் வகை. காபுலி என்பது இங்கே இனிப்புக்கு பயன்படுத்தும் தேங்காய். நாம் சட்னி அரைக்க பயன்படுத்திவதற்கும், இளநீரில் உள்ள தேங்காய்க்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள தேங்காய். தண்டி ஆலுவி என்றால் மரவள்ளிக்கிழங்கு / குச்சிக்கிழங்கு. இதில் விரும்பினால் தேங்காய் துருவலை 3 கப்பாக்கி ஒரு முட்டையை அடித்து கலந்து, 1 மேஜைக்கரண்டி மைதாவும் சேர்க்கலாம். முட்டை இல்லாமல் மைதா மட்டுமே கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Nalla kurippu... Seimurai vilakkathudan ungal kurippu vandhal thaan oru thirupthi.. Migavum nalla kurippu...

மிக்க நன்றி :) செய்முறை விளக்கப்படத்தோட கொடுக்க தான் இத்தனை நாள் காத்திருந்தேன் ஆனால் என் நேரம் எனக்கு இப்போ மழையால் அந்த கிழங்கு இங்கே கிடைக்கல. கிடைக்கும் போது கட்டாயம் படத்தோடு அனுபறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா