பூசணிக்காய் சாம்பார்

தேதி: December 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் (சிறிய பூசணிக்காயில் கால் பங்கு)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு - அரை கப்
கொத்தமல்லித் தழை
உப்பு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

பருப்பை களைந்து வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
பருப்புடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். (ஒரு விசில் வரும் வரை விட்டு சிறுந்தீயில் 10 நிமிடம் வைக்கவும்).
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வேக வைத்த பருப்பு கலவை ஊற்றி அதில் நறுக்கிய பூசணிக்காய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் நீர் விட்டு மூடி வேகவிடவும்.
காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான வெள்ளை பூசணிக்காய் சாம்பார் தயார். சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அருமை, நானும் இப்படித்தான் பூசணி சாம்பார் செய்வேன்:)
வாழ்த்துக்கள் தோழி!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பூசணிக்காய் சாம்பார் அருமை.இது வரை இந்த காயில் சாம்பார் செய்தது இல்லை.அடுத்த தடவை கண்டிப்பா இதே மாதிரி செய்றேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள் வனி .

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

குறிப்பு மிக அருமை,வாழ்த்துக்கள்.வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி அக்கா பூசனிக்காய் சாம்பார் ஆஸ்யூஸ்வல் வனி அக்கா ஸ்டைல் ல ஈஸி டிஷ் அன்ட் சீக்ரமே சமைக்ர ஒரு டிஷ் அக்கா சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி, நான் இதுவரை பூசணிக்காய் பக்கமே போனதில்ல.. வருஷம் ஒருமுறை வரும் பொங்கல் டைம்ல மஞ்சள் பூசணிக்காய் வாங்கி அம்மாகிட்ட தந்துடுவேன். இந்த சாம்பார் ஊருக்கு போய் செய்து பார்க்கறேன்.. போட்டோலயே இது வனியோட குறிப்புன்னு எழுதியிருந்தது. அதை பார்த்து தான் உள்ளே வந்தேன் :) எளிய, சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் வனி..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூசணிக்காய் அவ்வளவ்வா வாங்கினது கிடையாது பட் இந்த சாம்பாரை செய்வதற்காக கண்டிப்பா வாங்கணும் என்ற ஆவல் வந்து விட்டது சோ பூசணிக்காய் வாங்கி சாம்பார் வச்சி டேஸ்ட் பார்த்திட்டு சொல்லுறேன்க்கா...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

அருமையான குறிப்பு வாழ்த்துகள் வனி :)................

வனி,
பளிச் பளிச்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா பூசணிக்காய் சாம்பார் ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க. கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனி எனக்கு பிடிச்ச பூசணி சாம்பார் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.சாம்பார் கலரும்,பவுல் கலரும் சேர்ந்து மயக்குது போங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

அருள்.... மிக்க நன்றி :)

சம்னா... மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க :)

முசி... மிக்க நன்றி :)

கனி... மிக்க நன்றி :) நம்ம சமையல்னா சுலபமா தானே இருக்கனும்.

கல்பூ... மிக்க நன்றி. நானும் இதில் சாம்பாரெல்லாம் வைப்பதில்லை. உண்மையில் சிரியாவில் இருந்த போது இதெல்லாம் கிடைக்காது. அதனால் மாலே வந்ததும் இவர் வாங்கி கொடுதப்போ இதில் எதை குழம்பில் போட, எதை நீக்கன்னே புரியாம வேலை ஆட்களை கேட்பேன். எங்க வீட்டில் நீர் காய் எல்லாம் அலர்ஜின்னு அதிகம் சமைக்க மாட்டாங்க. எங்க கிராமத்தில் செய்வாங்க, இவர் கேட்டாருன்னு அம்மாவை கேட்டு கத்துகிட்டு இப்போ அடிக்கடி இதை செய்யறேன். :)

சமீஹா.... மிக்க நன்றி :) நானும் சாப்பிட்ட பின் சுவை பிடிச்சு தான் அடிக்கடி சமைக்கிறேன்.

ரூபி...மிக்க நன்றி :)

கவிதா... மிக்க நன்றி :)

ஹலீலா.... மிக்க நன்றி :)

சுவா.... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாருடா அது பூசணிக்காய் சாம்பாருக்கு நன்றி சொல்றாங்கன்னு வந்து பார்த்தேன் :). நீங்கதானா அது :)

பூசணி சாம்பார் விரைவில் (எப்போன்னு கேட்கப்படாது எப்போ கிடைக்குதோ அப்போ) எங்கள் டைனிங் டேபிளுக்கு வரும் :). சுவையான குறிப்புக்கு நன்றி வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி நாங்க வெள்ளைப்பூசனியை மோர்க்குழம்பில்தான் சேர்ப்போம். சாம்பாருக்கு மஞ்ச பூசனிதான் சேர்ப்போம்.உங்க குறிப்பு படி செய்து பார்க்கிரேன்.

கவிசிவா.... ஹிஹிஹீ. நானே தான் ;) மொட்டையா நன்றின்னு எல்லா இடத்திலும் போட்டா எதுன்னு புரியாதில்லை அதுக்கு தான். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

கோமு.... இதிலும் செய்யலாம். எங்க கிராமத்து பக்கம், கணவர் ஊர் பக்கம், மாமியார் வீட்டில் எல்லாம் செய்வாங்க. :) செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா