சேமியா, கோழி இறைச்சி சிற்றுண்டி

தேதி: September 22, 2006

பரிமாறும் அளவு: 2 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சேமியா - 200 கிராம் அல்லது ஒரு கப்.
கோழி இறைச்சி எலும்பில்லாதது - 100 கிராம் (பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.)
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி.
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறிக் கொள்ள வேண்டும்)
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி.
பூண்டு உரித்தது - 3 பல்.
தயிர் - 4 மேசைக்கரண்டி.
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
புதினா - சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.


 

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மிதமான சூட்டில் நறுமணம் வரும் வரை கிளறிக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், கோழி இறைச்சியை கலந்து ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும். தக்காளி துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
மிளகாய்தூள், பச்சை மிளகாய், தயிர், பூண்டு பல், கொத்தமல்லி, புதினா, கரம் மசாலாத் தூள், உப்பு இவற்றை கலந்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி, தண்ணீர் தெளித்து மிதமான சூட்டில் 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
கிரேவி சுண்டி எண்ணெய் மேலே மிதந்து வரும் நிலையில், 300 மில்லி அல்லது ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதித்து வரும் போது சேமியாவை போட்டுக் கிளறி மூடி போட்டு மிதமான சூட்டில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
பின்னர் திறந்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து சூடாக பரிமாறலாம்.


எளிதில் செய்யக் கூடிய இந்த சிற்றுண்டி, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பும் உணவு வகை.
கோழி இறைச்சிக்கு மாற்றாக கொத்துக் கறி பயன்படுத்தலாம். ஆனால் சற்று நேரம் குக்கரில் வேக வைக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுபைதா நன்றி, எங்கள் வீட்டில் யாருக்கும் மட்டன் பிடிக்காது நீங்கள் சிக்கனில் செய்து காட்டியது ரொம்ப அருமையாக உள்ளது.