தேனைப் பற்றிய சந்தேகம்

தேனைப் பற்றிய சந்தேகம். காலையில் எழுந்ததும் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.அதற்கு பதிலாக பாலில் கலந்து சாப்பிடலாமா?ஒரு டம்ளர் பால் (அ) தண்ணீர்-க்கு எத்தனை ஸ்பூன் தேன் கலப்பது.எத்தனை நாட்களுக்கு குடிக்க வேன்டும்.இதை குடித்த பின் காபி குடிக்கலாமா?

நீங்க உடம்பு குரைப்பதற்க்காக தேன் சாப்பிடுவதாக இருந்தால் வெந்நீர்ல தான் கலந்து குடிக்கனும்.பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் உடம்பு குன்டாகும்.

எல்லாம் நன்மைக்கே

தோழி சசி சொன்னமாதிரி பாலில் தேன் கலந்து குடிப்பது சதை போட உதவுமே தவிர இளைக்க உதவாது. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சுத்தமான தேன் கலந்து குடித்து வர உடல் இளைக்கும். இதுபோல உடல் இளைக்க முயற்சிக்கும் நேரத்தில் காஃபி டீ போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது. நான் நீரில் தேன் கலந்து குடித்துவந்தபோது காஃபி டீ குடிக்காமல்தான் இருந்தேன். மேலும் வெறும் வெந்நீரில் தேன்மட்டும் கலந்து குடிப்பதை விட பாதி எலுமிச்சையின் சாறும் சிட்டிகை உப்பும் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த சுவை சிலருக்கு பிடிக்காது. ஆனால் நிச்சயம் நல்ல பலன் கிடைத்தது எனக்கு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேன் தினமும் பயன்படுத்தலாமா? எவ்வளவு, எப்படி பயன்படுத்தலாம்?

அன்புடன்
ஜெயா

அன்புள்ள‌ ஜெயாவிற்கு நித்தியா கூறியது போல் தேன்+எலுமிச்சைச் சாறு+
மிதமான‌ வெந்நீர்+ தகுந்த‌ உப்பு (மலை உப்பானால் மிகவும் நல்லது)
கலந்து குடிப்பது மிகவும் நல்லது, வெறும் தேனாகவே குடிப்பதும் மிகவும்
நல்லது. தினமும் குடிக்கலாம். நல்லதே, பல‌ விதங்களில் உடம்பைச் சீராக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள‌ பூங்கோதை,

தங்கள் பதிலுக்கு மிக்க‌ நன்றி. கீழ்க்கண்ட‌ சந்தேகங்களையும் நேரம் கிடைக்கும்போது தெளியபடுத்தவும்.

1) மலை உப்பென்றால் கல் உப்பா? அல்லது வேறா?
2) இந்த‌ கலவையை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டுமா?
3) அருகம்புல் சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடிக்கலாமா?
4) அருகம்புல் எங்கள் வீட்டு தொட்டியில் நட்டிருக்கிறேன். நன்கு
வ‌ளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் நிறைய‌ பூக்கள் பூக்கின்றன‌. அருகம்புல்லில்
பூக்கள் பூக்குமா?

அன்புடன்
ஜெயா

//கல் உப்பா?// இல்லை. rock salt என்று தான் சொல்வார்கள். ஆனால் கல் உப்பு இல்லை. கடல் நீரிலிருந்து கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன். இங்கு Himalayan salt / pink salt என்று விற்கிறார்கள். பெயரைப் போல் நிறமும் பிங்க் ஆக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

என் அப்பாவிற்கு வயது 56. இவருக்கு 15 வருடங்களாக சர்க்கரை மற்றும் BP உள்ளது. தற்போது 2ம் கட்ட சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது உப்பு ½ அளவுதான், காய்கறிகளை நன்றாக கழுவி ½ மணி நேரம் ஊற வைத்து பிறகு சுடுநீரில் கழுவி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு நல்ல டயட் உணவு முறைகள் இருந்தால் சொல்லுங்களேன்.

நன்றி இமா. நெட்டில் தேடியதில் இந்துப்பு என்றிருந்தது. இதை சாதாரண உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாமா? இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்குமா?

அன்புடன்
ஜெயா

ஜெயாவிற்கு மலை உப்பு என்பது பாறைகளில் வெட்டி எடுப்பது. உப்பு சுரங்கங்கள் உண்டு அதிலும் வெட்டி எடுப்பார்கள். பொதுவாக‌ மருந்துக்கு
மிகவும் பயன்படும். கல் உப்பு கடலில் உப்பளங்கள் மூலம் எடுப்பது.
வெய்யிலில் உப்பு நீர் சுண்டி உப்பு மட்டுமே பாளம் பாளமாக உருவாகும்.
அதை நொறுக்கினால் கிடைக்கும் கல்லுப்பு. அரிசியை உடைத்து உருவாகும் அரிசி நொய் போல‌.
தேன் எதனோடும் சேரும். அருகம்புல்லில் பூக்கள் வெகு அழகாக‌ இருக்கும். அதன் விதைகள் மைக்ரோ டிப் பேனா முனை போல‌ மிக‌ மிகச்
சிறிதாக‌ இருக்கும். அதைத் தான் புல்லரிசி என்கிறோம். புத்திசாலி எறும்புகள் அந்த‌ முற்றிய‌ விதைகளை கண்ணாமாயமாகக் கபளீகரம்
செய்து விடும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வணக்கம் அம்மா _()_

நான் இப்போது 8 மாத கர்ப்பம்.. இது எனக்கு இரண்டாவது குழந்தை.. :-)

எனக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாக சொன்னதால் அத்திப்பழம் சாப்பிடுகிறேன்.. 2 மாதங்களாக சாப்பிடுகிறேன்.. எனக்கு வெறும் பழமாக சாப்பிட பிடிக்கவில்லை.. நற நறவென்று இருப்பதால் பிடிக்கவில்லை.. பழங்களை தேனில் (மலை தேன்) ஊறப் போட்டிருக்கேன்.. அதை தான் தினம் 3 பழம் சாப்பிடுகிறேன்.. தேனில் ஊறப் போட்டு சாப்பிடலாமா? நான் செய்வது சரியா அம்மா?

அவந்திகா

மேலும் சில பதிவுகள்