கார கோழி இறைச்சி வறுவல்.

தேதி: September 22, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி இறைச்சி எலும்பு இல்லாதது - 1/2 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 4.
சோம்பு - ஒரு தேக்கரண்டி.
சீரகம் - ஒரு தேக்கரண்டி.
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
பொடி செய்ய:
பூண்டு - 10 பல்.
சோம்பு - ஒரு தேக்கரண்டி.


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய், சோம்பு, சீரகம் இவற்றைப் போட்டு, மிதமான தீயில் வெடித்தவுடன், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
நறுமணம் வந்தவுடன், கோழி இறைச்சியை கலந்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது மிளகாய்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளற வேண்டும். நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் பிரட்ட வேண்டும்.
பூண்டு சோம்பு பொடியை கலந்து ஒரு நிமிடம் கிளறி, நீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
கோழி வெந்தவுடன், தக்காளியை கலந்து ஒரு நிமிடம் பிரட்டி, கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறலாம்.


சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு இவைகளுடன் இந்த வறுவல் வெகு பொருத்தமாக சேரும்.
எண்ணெயை வேண்டுமானால் சற்று அதிகமாக்கிக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

intha samaiyalai seithu paartthen migavum arumaiyagah iruntathtu...

vaaltthukkal...

indra,
malaysia...

இந்த குறிப்பை நேற்று செய்து பார்த்தேன். வித்தியாசமான சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.இது வேலூர் ஸ்பெஷலா?

மாலினி