கத்தரி மாங்காய் பாஜி

தேதி: January 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பாசி பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கத்தரிக்காய் - 3
மாங்காய் - பாதி
பூண்டு - 3 பல்
பெரிய தக்காளி - ஒன்று
புளி, உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க - கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், நெய், எண்ணெய்
கொத்தமல்லித் தழை - சிறிது
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி (http://www.arusuvai.com/tamil/node/24050 )


 

மசூர் பருப்பை 5 மணி நேரம் ஊற விட்டு, ஊறியதும் அதனுடன் மற்ற பருப்பு வகைகள், பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும். மாங்காயை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய காய்கறிகளுடன், புளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதிக நீர் விடாமல் வேக வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் அதில் தக்காளி சேர்க்கவும்.
தக்காளி வெந்ததும், மாங்காய் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும் உப்பு, வேக வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை தூவவும். நெய்யுடன் சுடு சாதத்தில் பரிமாறவும்

தக்காளி, மாங்காயின் புளிப்பை பொறுத்து புளி சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு பிச்ச காம்பினேஷன் :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா அக்கா சூப்பர் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ம் நல்லா இருக்கு பாஜி:) இது சாதம் கூட சாப்பிட நல்லா இருக்குமா இல்ல டிஃபன் ஐட்டங்களுக்கும் சூட் ஆகுமா? நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள் கவி:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பாஜி செய்திருப்பது நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவிதா கத்தரி மாங்காய் பாஜி ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கத்தரி மாங்காய் பாஜி சூப்பரா செஞ்சி அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் கவி :)

SSaifudeen:)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சமீஹா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி பாஜி சூப்பர் :) எனக்கு கத்தரி,மாங்காய் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா இன்று நான் கத்தரி மாங்காய் பாஜி செய்தேன்.நன்றாக வந்தது.ரொம்ப சுவையாகவும் இருந்தது.நன்றி

பரணிகா:)