சுவிஸ் சார்ட் பொரியல்

தேதி: January 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

சுவிஸ் சார்ட் கீரை பீட்ரூட் குடும்பத்தை சார்ந்தது. இதில் வைட்டமின் கே, எ, சி, தாதுக்கள், நார்சத்து நிறைய உள்ளது. இதனை சில்வர் பீட், ப்ரைட் லைட்ஸ், கிராப் பீட்ஸ் என்றும் சொல்வர். சிகப்பு, வெள்ளை, ஆரஞ்சு வண்ணத்திலும் இதன் காம்புகள் இருக்கும். அக்சாலிக் அமிலம் அதிகம் உள்ளதால், பச்சையாக சாப்பிட்டால் சிறிது கசப்பாக இருக்கும். சமைத்தால் நீராவியில் அமிலத் தன்மை குறைந்து கசப்பு தெரியாது.

 

சுவிஸ் சார்ட் கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
கடுகு, சீரகம், பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

கீரையின் நடுவே உள்ள பெரிய நரம்பு போல உள்ள பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், நசுக்கிய பூண்டு, பருப்புகள், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரை, உப்பு சேர்த்து வதக்கவும். கீரையில் உள்ள தண்ணீரே போதுமானது.
தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான சுவிஸ் சார்ட் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா, சத்தான குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சத்தான குறிப்பு...இந்த கீரைக்கு வேறு என்ன பெயர் சொல்வார்கள்.எளிமையான குறிப்பு.வாழ்த்துக்கள்...

Expectation lead to Disappointment

ஆரோக்கியமான குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவிஸ் சார்ட் கீரை இங்கேயும் கிடைக்கும்,கண்டிப்பா ட்ரை பண்றேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவி பொரியல் சூப்பரா இருக்குப்பா வாழ்த்துக்கள். ஆனா இந்த கீரைக்கு நான் எங்க போவேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவிதா சுவிஸ் சார்ட் பொரியல் அருமையாக இருக்கு.ஆனால் இந்தா கீரையை நான் பார்த்ததே இல்லை இங்கு கிடைச்சா அவசியம் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா