உதவவும்

எனக்கு காரமான உணவுகளே ரொம்ப பிடிக்கும். எனது அம்மா அப்பா கணவன் மாமியார் மாமனார் எல்லாருமே காரத்தை தவிர்க்குமாறு சொல்கிறார்கள். எனக்கு சிறிது காரமாவது இருக்க வேண்டும். கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது. 4 மாதங்களுக்கும் முன் நான் கர்ப்பம் தரித்து குழந்தைக்கு இதயத்துடிப்பு வரவில்லை DNC என்று செய்தோம். நான் காரம் சாப்பிடுவதை குறைத்துவிட்டேன். இப்போ மறுபடியும் தொடங்கி விட்டேன். இதனால் ஏதாவது பாதிப்பு வருமா? சமைக்கும் போது மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகு தூள் பாவிக்கலாமா? காய்ந்த மிளகாய் or பச்சை மிளக்கய் is better.

முற்றாகத் தவிர்க்கவேண்டும் என்பது இல்லை. எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சினை இல்லை. முடியாவிட்டால் மிளகு பயன்படுத்துங்கள். //காய்ந்த மிளகாய் / பச்சை மிளகாய்/// இரண்டும் ஒன்றுதானே!

காரம் என்று மட்டுமல்ல, 'ஸ்பைசஸ்' எதுவானாலும், குறைவாகப் பயன்படுத்துவது நல்லது என்பார்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப தாங்ஸ்... காய்ந்த மிளகாயில் பச்சை மிளகாயை விட அதிக காரம் இருக்கும் என்ற சந்தேகம்.கண்டிப்பாக மிளகையே பயன்படுத்துகிறேன்..

பச்சை மிளகாயை விட காய்ந்த மிளகாய் பெட்டர்... காய்ந்த மிளகாயை விட மிளகு பெட்டர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ சந்தேகம் தீர்ந்தது....ரொம்ப நன்றி

மேலும் சில பதிவுகள்