சன்னா மஷ்ரூம் கறி

தேதி: January 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

1. வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
2. மஷ்ரூம் - 150 கிராம்
3. வெங்காயம் - 1
4. தக்காளி - 1
5. தயிர் - 1/4 கப்
6. சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 2
8. மஞ்சள் தூள் - சிறிது
9. உப்பு
10. முந்திரி - 10
11. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது
12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
13. பட்டை, லவங்கம் - தாளிக்க


 

கொண்டைக்கடலையை ஊற வைத்து வைக்கவும். மஷ்ரூம் துடைத்து நறுக்கி வைக்கவும். முந்திரியை ஊற வைத்து அரைக்கவும்.
வெங்காயத்தை கறிவேப்பிலையுடன் சேர்த்து மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
தக்காளியை கொத்தமல்லி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி பின் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் தக்காளி விழுது சேர்க்கவும்.
தக்காளி வதங்கிய பின் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி முந்திரி அரைத்த விழுதும் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
கடைசியாக தயிர் சேர்த்து பிரட்டி மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.
இதில் ஊற வைத்த கொண்டைக்கடலை உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு மூடி 1 விசில் 15 நிமிடம் சிறுந்தீயில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சன்னா மஷ்ரூம் கறி தயார்.


விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை வேக வைத்தும் சேர்க்கலாம். அப்படி சேர்த்தால் குக்கரில் வைக்காமல் பாத்திரத்திலேயே வைக்கலாம். இது சப்பாத்தி, பூரி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இது உங்க ரெசிபியா? முகப்பில் வேறு பெயர் போட்டுள்ளது. நல்ல ரெசிபி. ட்ரை பண்னுறேன்

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

மேடம் எல்லாம் இல்லை ;) வனிதா மட்டும் தான். இது என் குறிப்பு தான். இந்த பெயரில் தான் நான் முதல் முறையாக குறிப்பு கொடுக்க துவங்கினேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று இந்த உங்க குறிப்பை ட்ரய் பண்ணினேன் தக்காளி கொத்த்மல்லி அரைத்து பின் பொடிக்ள் சேர்த்தவுடன்.....சும்மா டேஸ்ட் செய்த்தால் ரொம்ப கசப்பக இருந்தது ஏன் என்று புரியவில்லை நீங்கள் வெங்காயம் வதக்கி பின் அரைத்தீர்கலா? தெரிவிக்கவும்............

கசப்பா!!! எப்படி கசக்கும்???? இந்த முறையில் கறீவேப்பிலை கொத்தமல்லி அரைத்து சேர்த்து நிறைய வகை செய்திருக்கேன். எதுவும் கசந்ததில்லை. நீங்க எங்கோ தப்பு விட்டிருக்கீங்கனு நினைக்கிறேன். வெங்காயம் நீர் சேர்த்து அரைச்சீங்களா? கறிவேப்பிலை அதிகமா போட்டீங்களா? எப்படி செய்தீங்கன்னு ஒரு முறை சொல்லுங்க... என்ன பிழை ஆச்சுன்னு கண்டு பிடிக்க முடியுதா பார்ப்போம் பிரியா. ஏன்னா நான் இது போல் நிறைய குருமா வகை செய்திருக்கேன், கசப்பு தட்டும் என நீங்க சொல்வது புதுசா இருக்கு. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாங்க கொத்தமல்லி , கருவேப்பிலை வாசனைக்காக கொஞ்சம் அதிகம் சேர்தேன் அது காரணமாக இருக்கலாம்....ஆனால் நான் மஷ்ரும் சேர்ப்பதற்கு முன்பே கசப்பு ஏற்பட்டுவிட்தது அதுதான் அப்போது புரியவில்லை........நன்றி வனிதா

ம்ம்... அரைச்சு சேர்க்கும் போது எப்பவும் ரொம்ப சேர்க்கவும் கூடாது,ரொம்ப அரைக்கவும் கூடாது. வெங்காயத்தை நறுக்காம பாதியா வெட்டி அப்படியே போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தா போதுமானது. ரொம்ப அரைச்சாலும் சரி, அதிகம் சேர்த்தாலும் சரி வதக்கும் போது கசந்து போக வாய்ப்பு இருக்கு.

கவிசிவா சொன்னாங்க, அரைச்ச வெங்காயம் கொஞ்ச நேரம் வெளிய வெச்சுட்டு சேர்த்து வதக்கினாலோ அல்லது ஒழுங்கா வதக்காம தக்காளி சேர்த்தாலோ கசக்கும் என்று. அதையும் செக் பண்ணி பாருங்க.

நன்றி கவிசிவா :) எனக்கும் புது தகவல். அனுபவமில்லை இப்படி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க தகவல் ரொம்ப பயன்னுள்ளதா இருந்தது.......