முருங்கைக்கீரை பொரியல்

தேதி: September 23, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்கீரை - ஒரு கட்டு.
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது).
காய்ந்த மிளகாய் - ஒன்று
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடி செய்ய:
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - ஒரு மேசைக்கரண்டி.
பூண்டு பல் - 3.
பச்சைமிளகாய் - ஒன்று
இவை மூன்றையும் இடித்துக் கொள்ள வேண்டும்.


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் இவைகளை போட்டு, சிவந்தவுடன், வெங்காயத்தை கலந்து பொன்னிறமாக, மிதமான தீயில் வதக்க வேண்டும்.
சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை கலந்து ஒரு நிமிடம் வதக்கி, 1/2 கப் நீர் ஊற்றி உப்பு போட்டு, கிளறிய வண்ணம் வேக விட வேண்டும்.
நீர் வற்றி, கீரை வெந்தவுடன், இடித்து வைத்துள்ள பொடியை கலந்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி, சூடாக பரிமாறலாம்.


வேர்க்கடலைக்கு மாற்றாக தேங்காய்த் துருவல் சேர்க்கலாம். கடாயிக்கு பதிலாக நாண் ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தலாம். நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்