கமலா தோல் ஊறுகாய்

தேதி: January 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

கமலா தோல் - ஒரு கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
வினிகர் - அரை கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கமலா தோலைக் கழுவி மிகச் சிறிதாக நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நீர் விட்டு சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு சிவக்க வறுக்கவும்.
அதில் கமலா தோல், சீரகத் தூள், உப்பு சேர்க்கவும்.
பின் புளிக் கரைசலை ஊற்றி 15 நிமிடம் சிறுதீயில் வேக விடவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு, அரை கப் வினிகரை ஊற்றி மூடி வைத்தால் சுவையான கமலா தோல் ஊறுகாய் தயார். நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

what is that kamala thol??? is that orange peal?? thanks

எலுமிச்சையில் ஊறுகாய் தெரியும். புதிதாக இருக்கிறது இந்தக் குறிப்பு.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அது கமலா பழம் தோல் தான்(small orange peal).

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வருகைக்கும்,பதிவிர்க்கும் மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆரன்ஞ் பழத்தோல் பயன்படுத்தலமா

பயன்படுத்தலாம்,ஆரஞ்சு தோலை விட கமலாதோல் மெலிதாக இருப்பதால் ஊறுகாய் சீக்கிரம் ஊறிவிடும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

kamala dhol endraal enna please kuravum

ஆரஞ்சு மாதிரியே சின்னதா இருக்கும்.தமிழ் நாட்டில் கமலா பழம் என்று சொல்வார்கள்.கமலா பழத்தின் தோல் தான் கமலா தோல்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முஹ்சினா கமலா தோல் ல ஊறுகாய் இப்பதான் முதல் ல கேள்வி படுரென்மா ..கண்டிப்பா ட்ரை பண்ணி பார்கிறேன்..புதுமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் முசி...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

இதில் ஊறுகாய் போடலாமா?இப்போதான் கேள்விபடறேன். வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

Kalai

முசி
ஊறுகாய் பார்க்க ரொம்பவே அழகு.வாழ்த்துக்கள்

முசி ஊறுகாய் நல்லாருக்கே :) புதுமையா இருக்கு கண்டிப்பா நல்லாருக்கும்னு தோனுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாவ்... இதுவரை இதில் ஊறுகாய் நான் கேள்விபட்டதே இல்ல. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அழைக்கும் முஹ்சினா கமலா தோல் ஊறுகாய் நல்லா செய்து இருக்கீங்க இதே போல தான் நாங்களும் செய்வோம்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வ அழைக்கும் ஸலாம,சம்னாஷ் ரொம்ப நல்லா இருக்கும்,மறக்காம செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க.டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம,ஹலிலா வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பு நல்லா இருக்கு முஹ்சினா,நானும் செய்வேன்,ஆனால் தோலை வேகவைத்து தண்ணீரை வடித்துவிட்டுதான் தாளிப்பேன்.நான் 2011 ல் இந்த குறிப்பை வெளியிட்டேன்,யாரும் பார்க்கவில்லையா?

Eat healthy

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி ரசியா,வினிகரில் ஊற வைப்பபதால் வேக வைத்து நீர் வடிக்க தேவையில்லை,தாளித்து சிறிது நேராம் வேந்தால் போதும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.