தணியா தழை (கொத்த மல்லி )

தணியா தழை (கொத்த மல்லி )5 கட்டு இருக்கு.....அதில் எப்படி சட்னி செய்யலாம்???என் கணவர் ரொம்பவே வாங்கி விட்டார்... நான் வசிக்கும் ஊரில் தேங்காயுமில்லை... சட்னி மட்டுமில்லாது வேறு என்னென்ன செய்யலாம்??? ஏற்கனவே குறிப்புகள் பதிவிடப்பட்டிருந்தால் எங்கே பார்க்கலாம்??? நன்றி

கொத்துமல்லி (தனியா) தழையை நன்றாக அலசி நீர் போக ஆற விட்டு பொடி பொடியாக நறுக்கி ஐஸ் ட்ரேக்களில் போட்டு ப்ரீசர்ல வச்சுக்கோங்க.. சமையலுக்கு எப்ப கொத்துமல்லி வேணும்னாலும் இந்த கொத்துமல்லி க்யூபை எடுத்து போட்டுக் கொள்ளலாம். வாசனையில் எந்த வித்யாசமும் இருக்காது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பூ... இப்படி கூட பாதுகாக்கலாமா மல்லி இலையை??? எனக்கு தெரியவே தெரியாதுங்க. நல்ல தகவலுக்கு நன்றி கல்பு. நான் ட்ரை பண்றேன், இங்க கொத்தமல்லி எப்பவாது தான் கிடைக்கும்.

லலிதா... தேங்காய் இல்லாம தான் நான் சட்னி செய்வேன். அது போல் குறிப்பும் அறுசுவையில் இருக்கு. இருங்க நான் தேடி லின்க் தரேன். அது செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். கூடவே கொத்தமல்லி இலை அரைத்து ஊற்றி புலாவு, சாதம் கூட பண்ணலாம். சிக்கன், மீன் சமைக்க பயன்படுத்தலாம். கோரியண்டர் சிக்கன் எனக்கு ஃபேவரட். இதில் ஒரு சிலது இங்க லின்க் இருக்கு... கொஞ்சம் இருங்க பார்த்து சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொத்தமல்லி சாதம்:
http://www.arusuvai.com/tamil/node/1674
http://www.arusuvai.com/tamil/node/24573

கொத்தமல்லி குழம்பு:
http://www.arusuvai.com/tamil/node/23148

கொத்தமல்லி தொக்கு:
http://www.arusuvai.com/tamil/node/11740
http://www.arusuvai.com/tamil/node/2541

கொத்தமல்லி சப்பாத்தி:
http://www.arusuvai.com/tamil/node/19687
http://arusuvai.com/tamil/node/19691

கொத்தமல்லி சட்னி:
http://www.arusuvai.com/tamil/node/20158

கொத்தமல்லி துவையல்:
http://www.arusuvai.com/tamil/node/9834

கொத்தமல்லி இனிப்பு துவையல்:
http://arusuvai.com/tamil/node/14345

இதுக்கு மேலையும் நிறைய இருக்கு, நான் டயர்ட் ஆயிட்டேன் லலிதா ;) நீங்க மேலே தேடுக’னு ஒரு பெட்டி இருக்கே அறுசுவை பக்கத்தில், அதில் “கொத்தமல்லி “னு அடிச்சு தேடுங்க. அறுசுவையில் உள்ள அத்தனை குறிப்பும் வந்துடும். இங்க கொடுத்திருக்க எல்லாம் தேங்காய் இல்லாம செய்யும் குறிப்புகளுக்கான லின்க் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்ப்ஸ்..
உண்மையா எனக்கும் இப்ப தான் இப்படி ஒன்னுசெய்ய முடியுமான்னு தோணுது.. எனக்கு ஒரு இழை தொடங்க ஐடியா இதனால் வந்தது.. நாளை தொடங்குறேன்.. :)
நானும் இதை அவசியம் செய்து பார்க்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப தாங்ஸ்.... நான் அறுசுவைக்கும் ரொம்ப புதுசு... டைம் கிடைக்கும்போது எவ்வொன்றைகும் க்ளிக் செய்து பார்ப்பேன்....அப்பாடியோ எவ்வளோ இருக்கு சமையல்ல....அனைத்தையும் செய்து பார்க்க ஆசை...ஒவ்வொன்றாக முயற்சி செய்கின்றேன். நான் சுத்த சைவம்.. உங்க links க்கு ரொம்ப தாங்ஸ்.இப்பவே க்ளிக் செய்து பார்க்கிறேன்....மீண்டும் ரொம்ப தாங்ஸ்...

மேலும் சில பதிவுகள்