பீட்ரூட் பிரியாணி

தேதி: January 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

இந்த பீட்ரூட் பிரியாணி திருமதி. இளவரசி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பீட்ரூட் (சிறியது) - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
பிரியாணி மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் / மிளகாய் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தயிர் - 2 மேசைக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரி - 10
எண்ணெய் + வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
தக்காளியுடன் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கவும். பின் தயிர் சேர்த்து பிரட்டவும்.
ஒன்றரை கப் நீர் விட்டு கொதித்ததும், அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு சிறுந்தீயில் மூடி வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்.

காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி கொள்ளலாம். விரும்பினால் தயிருக்கு பதில் ஒரு கால் கப் மோர் (அ) ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். குழந்தைகள் லஞ்ச்பாக்ஸிற்கு ஏற்ற இந்த பிரியாணியை, பொரித்த அப்பளம் (அ) வற்றல் வைத்து கொடுக்கலாம். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். விரும்பினால் பச்சை பட்டாணி சேர்க்கலாம். தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினாவை அரைக்காமல் பொடியாக நறுக்கி சேர்த்தும் வதக்கலாம். சுவையான குறிப்பிற்கு நன்றி இளவரசி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் வனி. படம்லாம் அப்பிடி தெளிவா இருக்கு. இளவரசிக்கும் என் பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

வனி அக்கா பாரெக்கவே செம டெம்ப்டிங்கா இருக்கு அக்கா ஹ்ம்ம் அம்மாவ சமைக்க சொல்லி ரொம்ப நாள் ஆய்டுச்சு அக்கா ஹ்ம்ம் நாளீகே சமைக்க சொல்லிடுரேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி செல்லம்....

ரொம்ப அழகா அம்சமா செய்து துல்லியமா படங்கள் போட்டிருக்கீங்க என்னால இவ்வளவு அழகா படம் எடுக்கவே முடியாது அதுதான் இந்த முயற்சி எடுக்கறதில்ல..மிக்க நன்றி வனி.....செய்து பார்த்து ஸ்டெப் பை ஸ்டப்பா படம் போட்டு விளக்கியதுக்கு...

எனக்கு படம் இப்படி எடுக்கறது கொஞ்சம் உதவி தேவைப்படுது..அதோட நானே சமைச்சு எடுக்கும்போது சரியா வர்றது இல்ல...அதனால அடிக்கடி எடுக்க முடியறது இல்ல..அதுதான் இப்ப இந்த முயற்சிய விட்டுட்டு கூட்டாஞ்சோறுல மட்டும் போடறேன்.....

எப்படியோ 2013 முடியறதுக்குள்ள உங்கள மாதிரி எடுக்க கத்துக்கறேன்..

சீக்கிரம் குறிப்புகள் முதலிடம் செல்ல வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனி
குறிப்பும், கலரும் அள்ளுது..
படத்துக்கும், அழகா பிரசன்ட் பண்ணுவதற்கும் உங்களுக்கு நிகர் நீங்க தான்.. வாழ்த்துக்கள்.. :)
இளா... அருமையான குறிப்புக்கு நன்றி.. நாளைக்கே பீட்ருட் வாங்கிடறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி அழகா படம்பிடித்து விளக்கியுள்ளீர்கள் வழக்கம் போல, வாழ்த்துக்கள்;)
இளா உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பீட்ரூட் பிரியாணி சூப்பர்...ருசியும் பிரமாதமா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது..பீட்ரூட் கட் பண்ணி வைத்து இருக்கும் விதம் அருமை..வாழ்த்துக்கள் வனி ..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வனி, பீட்ரூட் பிரியாணி கலர் போட்டி போடுது. நல்லா படம் பிடிச்சிருக்கீங்க. பீட்ரூட் சாதாரனமாவே நல்ல கலர் உங்க படத்தில் இன்னும் கவர்ச்சியா இருக்கு ;) வாழ்த்துக்கள் வனி..:) இளா.. ஆரோக்கிய குறிப்புக்கு நன்றிகள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கலரும்,படமும் அள்ளுது.வாழ்த்துக்கள் வனி அக்கா...இளவரசி மேடம் உங்களுக்கும் நன்றி ஹெல்தி குறிப்புக்கு :)

Kalai

பீட்ரூட் பிரியாணி பார்க்கவே அசத்தலா இருக்கு கண்டிப்பா சுவையும் சூப்பரா இருக்கும் செய்துட வேண்டியதுதான் :)..................

வனி
பிரியாணி ரொம்ப ரொம்ப கலர்ஃபுல் சூப்பர்

அருமையான குறிப்பை கொடுத்த இளாவுக்கும் அதை அழகா அருமையா செய்து காட்டிய வனிக்கும் வாழ்த்துக்கள்.செம கலரா பார்க்கவே அள்ளுது பா படங்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிரியாணி பிரமாதம்.உடனே செய்து பார்கிறேன்

Bharathi

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

குறிப்பை தந்த இளவரசிக்கு மனமார்ந்த நன்றி. ரொம்ப ரொம்ப சுவையான சத்தான குட்டீஸ்க்கும் பிடிக்க கூடிய குறிப்பு இளா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா... உங்கள் முதல் பதிவை பெற்று தந்த இளா குறிப்புக்கும் சேர்த்து நன்றி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா பீட்ரூட் பிரியாணி சுவையான,கலர்புல்லான குறிப்பு. படங்களும் அழகு வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பீட்ரூட் பிரியாணி,கலேரெ கண்ணை கவருது,படமே ருசியை சொல்லுது,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தோழிகள் தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும், சேர்ந்தாப்பல உட்கார்ந்து பதிவிட முடியாம போகுது.

கனி... மிக்க நன்றி. இது சுலபம் தானே நீங்க செய்து அம்மாக்கு கொடுங்க :)

இளா... மிக்க நன்றி. நீங்க மீண்டும் கூட்டாஞ்சோறுக்குள் வந்ததே எனக்கு மகிழ்ச்சி. இன்னும் பழையபடி யாரும் சமைக்கலாம் பகுதிக்குள் வந்தால் அளவில்லா மகிழ்ச்சியடைவேன். சீக்கிரம் நடக்கும்னு நம்பறேன் :) மீண்டும் சுவையான குறிப்புக்கு நன்றி இளா.

ரம்யா... மிக்க நன்றி :) அடடா நீங்க நிறைய முறை ஃபோட்டோஸ்க்கு விருது வாங்கினவராச்சே.

அருள்.... மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

சம்னாஸ்... மிக்க நன்றி. செய்து பாருங்க, சுவை நிச்சயம் பிடிக்கும். :)

கல்பூ.... மிக்க நன்றி :) சுவையான ஆரோக்கியமான குறிப்பு, கட்டாயம் ட்ரை பண்ணுங்க.

கலா... மிக்க நன்றி :) கட்டாயம் ட்ரை பண்ணுங்க.

ரூபி... மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

நிகிலா.. மிக்க நன்றி :)

சுவா... மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

பாரதி... மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

ஹலீலா... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

முசி... மிக்க நன்றி. ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா