பூஸ்ட் கேக்

தேதி: January 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

பூஸ்ட் - கால் கப்
மைதா மாவு - ஒன்றரை கப்
சீனி - ஒன்றரை கப்
முட்டை - 3
வெண்ணெய் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
க்ரீம் (அ) பால் - 2 மேசைக்கரண்டி

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். அவனை 180°c ல் முற்சூடு செய்யவும்.
வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
வெண்ணெய் முட்டையுடன் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர், பூஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதில் கிரீம் சேர்க்கவும். பின்பு அதில் மாவு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும். கேக் தயாரானதும் உருக்கிய சாக்லேட்டை பரவலாக தடவி விரும்பியவாறு அலங்கரிக்கவும்.
சுவையான பூஸ்ட் கேக் ரெடி.

இந்த கேக் சற்றே சவ் சவ் என்று மிட்டாய் மாதிரி இருக்கும். குழந்தைக்களுக்கு ரொம்ப பிடிக்கும். பூஸ்ட்டிற்கு பதில் கோகோ பவுடர், மைலோ, போர்ன்வீடாவிலும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ் சுப்பெரா இருக்குங்க பூஸ்ட் கேக்.கண்டிப்பாக செய்து பார்க்கிரேன்.

அஸ்ஸலாமு அழைக்கும் முஹ்சினா கேக் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டீங்க பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பார்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க.டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம்,ஹலிலா வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அக்கா எப்டி இப்டி வித்யாசமாலாம் யோசிக்குரீங்க கடைசி ப்லேட் தூள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இது போல் காம்ப்ளான், பூஸ் கேக் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன், ஆன் செய்முறை இப்ப தான் முதன் முதல்ல தெரிஞ்சுகிட்டேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூஸ்ட் கேக் பார்க்கவே நன்றாக இருக்கு மொசினா.

நல்ல கேக் :)வாழ்த்துக்கள் முசி.

Kalai

வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி,உங்களுக்கு இல்லாததா,அப்படியே எடுத்துகுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வருகைக்கும்,பதிவிர்க்கும் மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வருகைக்கும்,பதிவிர்க்கும் மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.