மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல்

தேதி: September 23, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி.
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
சோம்புத்தூள் - 1/2 தெக்கரண்டி.
கஸ்தூரி மேத்தி - 2 தேக்கரண்டி.
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி.
கடலை மாவு - 4 தேக்கரண்டி.
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு


 

சேப்பங்கிழங்குடன் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் முக்கால் வேக்காடு வரை வேகவைத்து, ஆற வைத்து, தோல் உரித்து, சிறு சிறு வில்லைகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடலை மாவு, கார்ன் ஃப்ளார் தவிர அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையுடன் சேப்பங்கிழங்கு வில்லைகளை சேர்த்து உடைந்து விடாமல் கலக்க வேண்டும்.
இத்துடன் இரண்டு மாவுகளையும் சேர்த்து கிளற வேண்டும்.
எண்ணெய் சூடானவுடன், ஒவ்வொரு வில்லையாக, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
எண்ணெய் அதிகமாக சூடாகி விடாமல் இருக்க தீயை மிதமாக கட்டுப்படுத்த வேண்டும்.
கலகலவென்ற மொறு மொறுப்போடு வறுவல் தயாராகிவிடும். .


இந்த வறுவல் சாம்பார்சாதம், ரசம், தயிர்சாதம் உடன் சாப்பிட நன்றாக இருக்கும். மாலை சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கார்ன் ஃப்ளாருக்கு மாற்றாக அரிசி மாவை பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கிற்கு மாற்றாக உருளைக்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கு சேர்க்கலாம். குக்கரில் வேக வைக்க வேண்டாம், ஏனெனில் அதிகம் வெந்து விட்டால் கொழ கொழப்பு வந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ஜுபைதா,

இன்று உங்கள் சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன் மொறு மொறுன்னு ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb