மேத்தி பனீர் சப்ஜி

தேதி: September 23, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயக் கீரை - 4 (சிறியக் கட்டு)
பனீர் - 100 கிராம்.
வெங்காயம் - ஒன்று (பொடிதாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று (பொடிதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி.
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி.
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி.
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.
பிரிஞ்சி இலை - ஒன்று
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
தயிர் - 2 மேசைக்கரண்டி.
ப்ரெஷ் க்ரீம் (fresh cream) - 4 மேசைக்கரண்டி.
மிக்ஸியில் அரைக்க :
உரித்த சாம்பார் வெங்காயம் - 6
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
இவை நான்கையும் நீர் சேர்க்காமல் விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.


 

கீரையை மண் இல்லாமல் கழுவி, பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பிரிஞ்சி இலை, பொடித்த வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் பொடித்த தக்காளி, ஒரு பின்ச் உப்பு கலந்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.
மிக்ஸியில் அரைத்த விழுதை இதனுடன் கலந்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை பிரட்ட வேண்டும்.
இந்த நிலையில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
ப்ரெஷ் க்ரீம் தவிர மற்ற மசாலா பொருட்கள் அனைத்தையும் தேவையான உப்பு சேர்த்து 1/2 கப் நீர் விட்டு, மிதமான தீயில் கொதி வந்தவுடன் பனீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்க வேண்டும்.
கிரேவி நன்கு சேர்ந்து சேறு போன்று வரும் போது ப்ரெஷ் க்ரீம் கலந்து இறக்கி பரிமாறலாம்.


இந்த சுவையான வட இந்திய வகை சப்ஜி சப்பாத்தி, பரோட்டா, பூரி, நாண் இவைகளுக்குப் பொருத்தமான பக்க உணவு
பனீருக்கு மாற்றாக டோபு சேர்க்கலாம். நல்ல திக்காக சுவையுடன் வேண்டுமானால் முந்திரி அல்லது பாதாம் விழுது கலந்து சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

போன வாரம்,உங்க சப்பாத்திக்கு மேத்தி பனீர் சப்ஜி செய்தேன்,நன்றாக இருந்தது,தாமதமான பின்னூட்டம் கொடுத்திருக்கேன்,மன்னிச்சுக்கோங்க.