மரவள்ளிக்கிழங்கு மஃபின்ஸ்

தேதி: January 11, 2013

பரிமாறும் அளவு: 6 மஃபின்ஸ்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மைதா - 3/4 கப்
2. பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
3. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி [optional]
4. முட்டை - 1
5. எண்ணெய் / வெண்ணெய் - 1/4 கப்
6. பால் - 1/4 கப்
7. சர்க்கரை - 1/2 கப்
8. மரவள்ளிக்கிழங்கு துருவல் - 1/2 கப்
9. வெனிலா எஸன்ஸ் - சில துளிகள்


 

மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.
மரவள்ளிக்கிழங்கு சரக்கரை கலந்து மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
முட்டையை நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் எண்ணெய் மற்றும் அரைத்த கிழங்கு கலவை சேர்த்து கலக்கவும்.
இதில் பால்,வெனிலா எஸன்ஸ் கலந்து பின் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதை மஃபின் மோல்டுகளில் 3/4 பாகம் நிரப்பி பேக் செய்யவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு மஃபின்ஸ் தயார்.


மரவள்ளிக்கிழங்கை அரைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படியே துருவலாகவும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்