வேர்க்கடலை குழம்பு

தேதி: January 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

பச்சை வேர்க்கடலை - கால் கப்
புளி - கோலி அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
அரைத்த தேங்காய் விழுது - ஒரு கரண்டி
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு
எண்ணெய்


 

புளியைக் கரைத்து அதனுடன் வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளிதம், கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான வேர்க்கடலை குழம்பு தயார். சுட்ட அப்பளம் இதற்கு சரியான ஜோடி. விருப்பட்டால் கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய், பூசணி சேர்த்தும் செய்யலாம்.

ஆல் பர்பஸ் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/15911"> ஆல் பர்பஸ் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இங்கயும் நான் தான் முதல் பதிவு கவிதா அக்கா நல்லா இருக்கு அக்கா வேர்க்க்கடலை குழம்பு நல்ல குறிப்பு அக்கா வீட்ல இருகுர பொருட்கல் லாம் வச்சு ஈஸியா செய்யலாம் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ருசியான வேர்க்க்கடலை குழம்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வேர்க்கடலை குழம்பு இன்னிக்கு முயற்சிக்கிறேன் கவி:)
சாப்பிடத்தூண்டுது பார்த்தாலே வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கட்டாயம் இதை செய்து பார்க்கணும். வாழ்த்துக்கள் :)

Kalai

நல்ல ரெசிப்பி....

(ஆல்பர்பஸ்பொடி நிஜமாவே ஆல்பர்பஸ்தான் :)

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப நல்லா இருக்கு :) எனக்கும் வேர்கடலை குழம்பு விருப்பம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் வேர்கடலை குழம்பு மிகவும் நன்றாக இருந்தது. இது சாதத்திற்கும், சப்படிக்கும் ரொம்ப நல்ல இருக்கு. நான் ஆல் பர்பஷ் பொடிக்கு எல் சேர்க்க வில்லை அதற்கு பதிலாக கொள்ளு சேர்த்து அரைத்தேன் நன்றாக இருந்தது.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.