எலும்பு நீக்கிய கோழி மிளகு மசாலா

தேதி: September 25, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 1/4 கிலோ.
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி சிறியது - ஒன்று (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.
பட்டைத் தூள் - 1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கொத்தமல்லித் தழை - பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு.
அரைக்க :
மிளகு - 2 தேக்கரண்டி.
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி.
பூண்டு - 6 பல்
இவை நான்கையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.


 

நாண் ஸ்டிக் பாத்திரத்தில், எண்ணெய் சேர்த்து சூடானவுடன் வெங்காயத்தை மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கிய தாக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது எலுமில்லாத சிக்கனை அதில் கலந்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வாசம் வரும்வரை கிளறி, மிளகாய் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும்.
இந்த நிலையில் அரைத்து வைத்துள்ள மசாலாவை கொட்டி, மூழ்கும் வரை நீர் ஊற்றி மிதமான தீயில் எண்ணெய் மிதந்து வரும் வரை சமைக்க வேண்டும்.
இப்போது கோழி மிளகு மசாலா பரிமாற தயார்.


காரசாரமான இந்த பக்க உணவு சப்பாத்தி, நாண், பரோட்டா, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் இவைகளுக்கு மிக நன்றாக பொருந்தும்.
எலுமில்லாத சிக்கனுக்கு மாற்றாக காடை இறைச்சியுடன் செய்தால் சுவையோ சுவை.

மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் நல்லா இருந்தது.

சலாம் ஜுபைதா கோழி அடுப்பில் இருக்கு ம்............மனக்குது சூப்பர்

ஜுபைதா மேம்.. மிளகு கோழி ரொம்ப சுவையாக இருந்தது.. ரொம்ப நன்றி..

வாழு, வாழவிடு..